எந்திர(ன்)த் திருவிழா...

புதன், அக்டோபர் 06, 2010

              இது கண்டிப்பா எந்திரன் படத்தோட விமர்சனம் இல்லை. ஏன்னா நான் இன்னும் படம் பார்க்கலை. பயங்கர களேபரங்களோட ரிலீசாயிருக்கிற எந்திரன் படம், எப்படி இருந்துச்சுனு நம்ம ப்ளாக்கர்ஸ் எழுதியிருக்கிற விமர்சனங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு படிச்சேன். நெறைய பேர் எழுதியிருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா, அவங்க அவங்க பாணியில எழுதியிருக்காங்க.


              பாகீரதியில LK சார், சென்னைல அவர் பொண்ணோட பார்த்தத எழுதியிருக்காங்க. இதுதான் அவர் எழுதியிருக்கிற முதல் படவிமர்சனமாம். தலைவர் படத்த பார்த்துட்டு, சோகத்தோட அவர் திரும்பினதுக்கு காரணம், படம் பார்த்தவங்களுக்குத்தான் புரியுமாம். புரியாதவங்க படத்தப் பார்த்துத் தெரிஞ்சிக்கச் சொல்லி சஸ்பென்ஸ் வச்சிருக்காங்க.

               அமைதிச்சாரல் அக்கா, மும்பைல எந்திரன் படத்தை ' ரோபோ'வா ஹிந்தியில பார்த்தத அவங்க ஸ்டைல்ல எழுதியிருக்காங்க. கொடுத்தக்காசு பாட்டுக்கும், கிளைமாக்சுக்குமே சரியா இருக்கும். அதனால தமிழ்லயும் கண்டிப்பா பார்க்கப்
போறேன்னு சொல்லியிருக்காங்க.

               நம்ம கேபிள் சங்கர் சார், அவருக்கே உரிய சினிமா பாணியில, படத்தைப் பத்தி அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சு, " A FILM TO WATCH " ன்னு எழுதியிருக்கார்.

              அஹமத் இர்ஷத் அவங்க அலைவரிசையில, எந்திரன் காஸ்ட்லி பொம்மைனு சொல்றார்.

               உண்மைத்தமிழன், 'எந்திரன் ஒரு முன்னோட்டம்' னு படத்தைப் பத்தி ஏதோ எழுதியிருக்கார் போலனு பார்த்தா, படம் உருவாக காரணமானவங்க பேரையெல்லாம் போட்டு, ஒரு காமெடி பண்ணி, சூப்பரா எழுதியிருக்கார். அப்படி ஒரு விமர்சனத்தைப் படிச்சதில்லை. புது மாதிரியா இருந்துச்சு.

              என் வழியில வினோ அவர் ஒரு பத்திரிக்கையாளர்னு, " நிஜ மனிதன் தன்னைப் போன்ற இயந்திர மனிதனைத் தந்து, அதற்கு தன்னைப் போல யோசிக்கும் திறனையும் கொடுத்துவிட்டால்… அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற சுஜாதா – ஷங்கர் கற்பனையின் அழகிய செல்லுலாய்ட் வடிவமே ரோபோ எனும் எந்திரன் " அப்படின்னு சொல்லியிருக்கறது மூலமா நிரூபிச்சிருக்கார்.

              First Show-ல விநாயகாதாசன் இறுதிக்காட்சி மகுடத்தில் ஒரு மாணிக்கம்னு சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு சூப்பரா இருக்காம். அதே போல, படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமா வெளிவருவதற்கு ரஜினி, ஷங்கர் மற்றும் கலாநிதிமாறன் இந்த மூவேந்தர்கள்தான் காரணம்னு எழுதியிருக்காங்க.

             சைவக்கொத்துப் புரோட்டாவில் எந்திரன் சிட்டி ரோபோவை சூப்பர்மேன்
  போல ரசிச்சு, விமர்சிச்சு எழுதியிருக்காங்க.

             வெறும்பயவில படத்தோட கடைசி 45 நிமிஷத்தைக் கண்டிப்பா பார்க்கணும்னு சொல்லியிருக்காங்க. 150 கோடி ரூபாய் போட்டு எடுத்திருக்கிற இந்தப் படத்துக்கு 100 கோடி ரூபாய் கிளைமாக்ஸ் காட்சிக்கே செலவாயிருக்கும்னு எழுதியிருக்காங்க. இந்தப் படத்தை அவர் 18000 ரூபாய் செலவு பண்ணிப் பார்த்திருக்கார்ங்கறதுதான் இதுல ஹைலைட்டான விஷயம்.

               இவ்வளவுதான் என்னால படிக்க முடிஞ்சுது. மத்தவங்கள்லாம் மன்னிச்சுக்கோங்க. இந்த ப்ளாக்குகள்ல எல்லாம் நான் படிச்ச வரைக்கும், எல்லாருமே படத்தோட இறுதிக்காட்சியைத்தான்  ரொம்பப் பாராட்டியிருக்காங்க. இவ்வளவு செலவு பண்ணி படத்தை எடுத்ததுக்கு, அதற்கான பலன்  படத்துல இருக்குனு சொல்றாங்க. இவங்க எல்லாரும் சொல்லிருக்கிறத படிக்கும்போது சீக்கிரமா படத்தப் போய்ப் பார்க்கணும்னு தோணுது. கண்டிப்பா பார்க்கணும்.

30 comments:

பெயரில்லா சொன்னது…

இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி சாய்கோகுலகிருஷ்ணா..

RVS சொன்னது…

இன்றைக்கு ரெண்டாம் ஆட்டம் நானும் பார்க்கப்போறேன். நாளைக்கு என்னோட பார்வையில் எந்திரன். ரெடியா இருங்க..

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி RVS.பார்த்துட்டு சொல்லுங்க.

எல் கே சொன்னது…

நேற்றே உங்கள் பதிவை பார்த்தேன் காயத்ரி.. ஆனால் பின்னூட்டம் இட மறந்து விட்டேன் .. என் பதிவையும் இங்கே இணைத்ததற்கு நன்றி

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி LK.

Chitra சொன்னது…

விமர்சன தொகுப்பு - இப்போதான் பார்க்கிறேன். படம் பார்த்துட்டு, உங்கள் விமர்சனமும் சொல்லுங்க.

Cable சங்கர் சொன்னது…

பரவாயில்லையே.. இவ்வளவு படிச்சிருக்கீங்களே.. நீங்களும் படம் பார்த்துட்டு ஒண்ணு எழுதிருங்க..

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி சித்ரா.தியேட்டருக்குப் போயிப்பார்க்கனும்னு ஆசை.
குழந்தை இருக்குறதுனால பார்க்குறது கஷ்டம்னு நெனைக்கிறேன் சித்ரா.எப்போ பார்க்கப்போறேன்னு தெரியல.

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி கேபிள் சங்கர் சார்.
படம் பார்க்கனும்.ஆனா எப்போ பார்க்கப்போறேன்னு தெரியல சார்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

எனது விம்சர்சனத்தை இணைத்ததற்கு நன்றி ஜிஜி.

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா.

thiyaa சொன்னது…

m

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நன்றி .. நன்றி... நான் எழுதிய எந்திரனை இணைத்ததற்கு...

Ahamed irshad சொன்னது…

நான் எழுதிய விமர்சனத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றிங்க..நீங்களும் பார்த்துட்டு எழுதுங்க..

Madhavan Srinivasagopalan சொன்னது…

விமர்சனங்களுக்கான உங்கள் விமர்சனம்.. ஒரு வித்தியாசமான பதிவு.. வாழ்த்துக்கள்..

சௌந்தர் சொன்னது…

அட இது நல்லா இருக்கே

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்லாயிருக்குதுங்க தொகுப்பு.

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி
தியாவின் பேனா
வெறும்பய
அஹமது இர்ஷாத்
மாதவன்
சௌந்தர்
ராமலக்ஷ்மி

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பார்த்தாச்சா இல்லியா?

ஜெய்லானி சொன்னது…

பரவாயில்லை எல்லாத்தையுமே தொகுத்து போட்டுட்டீங்க ..!! :-))

elamthenral சொன்னது…

nice post.. all the best...

Unknown சொன்னது…

@ ப்ரியமுடன் வசந்த்.
இன்னும் பார்க்கவில்லை வசந்த்.இனிமேல்தான் பார்க்கணும்.
தங்கள் வருகைக்கு நன்றி..

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி
ஜெய்லானி
புஷ்பா

மோகன்ஜி சொன்னது…

ஜிஜி,
விமரிசனங்களை வச்சு நீங்க விமரிசனம் பண்ணியதை, நான் விமரிசனம் பண்ணாமல் ஒரே வார்த்தையில் சொல்லவா?
கலக்குறீங்க..

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் நன்றி மோகன்ஜி..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

தொகுப்பு நல்லாருக்குப்பா.. என் தளத்துக்கும் இணைப்புக்கொடுத்ததுக்கு நன்றி.

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.

விக்னேஷ்வரி சொன்னது…

ம், வித்தியாசமா விமர்சனத்துக்கு விமர்சனமா.. சூப்பரு.

Unknown சொன்னது…

வாங்க..வருகைக்கு நன்றி விக்னேஷ்வரி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails