எந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எந்திர(ன்)த் திருவிழா...

புதன், அக்டோபர் 06, 2010

              இது கண்டிப்பா எந்திரன் படத்தோட விமர்சனம் இல்லை. ஏன்னா நான் இன்னும் படம் பார்க்கலை. பயங்கர களேபரங்களோட ரிலீசாயிருக்கிற எந்திரன் படம், எப்படி இருந்துச்சுனு நம்ம ப்ளாக்கர்ஸ் எழுதியிருக்கிற விமர்சனங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு படிச்சேன். நெறைய பேர் எழுதியிருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா, அவங்க அவங்க பாணியில எழுதியிருக்காங்க.


              பாகீரதியில LK சார், சென்னைல அவர் பொண்ணோட பார்த்தத எழுதியிருக்காங்க. இதுதான் அவர் எழுதியிருக்கிற முதல் படவிமர்சனமாம். தலைவர் படத்த பார்த்துட்டு, சோகத்தோட அவர் திரும்பினதுக்கு காரணம், படம் பார்த்தவங்களுக்குத்தான் புரியுமாம். புரியாதவங்க படத்தப் பார்த்துத் தெரிஞ்சிக்கச் சொல்லி சஸ்பென்ஸ் வச்சிருக்காங்க.

               அமைதிச்சாரல் அக்கா, மும்பைல எந்திரன் படத்தை ' ரோபோ'வா ஹிந்தியில பார்த்தத அவங்க ஸ்டைல்ல எழுதியிருக்காங்க. கொடுத்தக்காசு பாட்டுக்கும், கிளைமாக்சுக்குமே சரியா இருக்கும். அதனால தமிழ்லயும் கண்டிப்பா பார்க்கப்
போறேன்னு சொல்லியிருக்காங்க.

               நம்ம கேபிள் சங்கர் சார், அவருக்கே உரிய சினிமா பாணியில, படத்தைப் பத்தி அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சு, " A FILM TO WATCH " ன்னு எழுதியிருக்கார்.

              அஹமத் இர்ஷத் அவங்க அலைவரிசையில, எந்திரன் காஸ்ட்லி பொம்மைனு சொல்றார்.

               உண்மைத்தமிழன், 'எந்திரன் ஒரு முன்னோட்டம்' னு படத்தைப் பத்தி ஏதோ எழுதியிருக்கார் போலனு பார்த்தா, படம் உருவாக காரணமானவங்க பேரையெல்லாம் போட்டு, ஒரு காமெடி பண்ணி, சூப்பரா எழுதியிருக்கார். அப்படி ஒரு விமர்சனத்தைப் படிச்சதில்லை. புது மாதிரியா இருந்துச்சு.

              என் வழியில வினோ அவர் ஒரு பத்திரிக்கையாளர்னு, " நிஜ மனிதன் தன்னைப் போன்ற இயந்திர மனிதனைத் தந்து, அதற்கு தன்னைப் போல யோசிக்கும் திறனையும் கொடுத்துவிட்டால்… அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற சுஜாதா – ஷங்கர் கற்பனையின் அழகிய செல்லுலாய்ட் வடிவமே ரோபோ எனும் எந்திரன் " அப்படின்னு சொல்லியிருக்கறது மூலமா நிரூபிச்சிருக்கார்.

              First Show-ல விநாயகாதாசன் இறுதிக்காட்சி மகுடத்தில் ஒரு மாணிக்கம்னு சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு சூப்பரா இருக்காம். அதே போல, படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமா வெளிவருவதற்கு ரஜினி, ஷங்கர் மற்றும் கலாநிதிமாறன் இந்த மூவேந்தர்கள்தான் காரணம்னு எழுதியிருக்காங்க.

             சைவக்கொத்துப் புரோட்டாவில் எந்திரன் சிட்டி ரோபோவை சூப்பர்மேன்
  போல ரசிச்சு, விமர்சிச்சு எழுதியிருக்காங்க.

             வெறும்பயவில படத்தோட கடைசி 45 நிமிஷத்தைக் கண்டிப்பா பார்க்கணும்னு சொல்லியிருக்காங்க. 150 கோடி ரூபாய் போட்டு எடுத்திருக்கிற இந்தப் படத்துக்கு 100 கோடி ரூபாய் கிளைமாக்ஸ் காட்சிக்கே செலவாயிருக்கும்னு எழுதியிருக்காங்க. இந்தப் படத்தை அவர் 18000 ரூபாய் செலவு பண்ணிப் பார்த்திருக்கார்ங்கறதுதான் இதுல ஹைலைட்டான விஷயம்.

               இவ்வளவுதான் என்னால படிக்க முடிஞ்சுது. மத்தவங்கள்லாம் மன்னிச்சுக்கோங்க. இந்த ப்ளாக்குகள்ல எல்லாம் நான் படிச்ச வரைக்கும், எல்லாருமே படத்தோட இறுதிக்காட்சியைத்தான்  ரொம்பப் பாராட்டியிருக்காங்க. இவ்வளவு செலவு பண்ணி படத்தை எடுத்ததுக்கு, அதற்கான பலன்  படத்துல இருக்குனு சொல்றாங்க. இவங்க எல்லாரும் சொல்லிருக்கிறத படிக்கும்போது சீக்கிரமா படத்தப் போய்ப் பார்க்கணும்னு தோணுது. கண்டிப்பா பார்க்கணும்.

எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா

புதன், ஆகஸ்ட் 18, 2010

            
               இறுதியாக கடந்த ஞாயிறன்று சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ஹிந்தியிலும் "ரோபோ" பட இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டார் திரு. அமிதாப்பச்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   
             அதே போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கிலும் "ரோபோ" இசை வெளியீட்டு விழா தெலுங்கு சூப்பர் ஸ்டார் திரு. சிரஞ்சீவி அவர்கள் இசைத்தட்டு வெளியிட மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


               தமிழில் கேட்கவே வேண்டாம். கடந்த ஜூலை 31 - ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அதில் எண்ணற்றோர் கலந்து கொண்டனர். சன் டிவி திரு. கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில், திரு. ஷங்கர் டைரக்சனில், திரு. வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளில், நமது ஆஸ்கர் நாயகன் திரு. A.R.ரகுமான் இசையில் மிகுந்த எதிர்பார்ப்போடு "எந்திரன்" திரைப்படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. செப்டம்பரில் படம் வெளிவரப்போவதாகத் தெரிவித்துள்ளனர். ஆக எந்திரன் (ரோபோ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவரத் தயாராக உள்ளது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போலப் படம் இருக்குமா எனத் தெரியவில்லை. "சிவாஜி" பட ரெக்கார்டை முறியடிக்குமா எனவும் தெரியவில்லை. படம் வருவதற்கு  இன்னும் சில நாட்களே உள்ளன.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

                 அதற்குள்ளாக இன்டர்நெட்டில் படத்தின் கதைப் பற்றி ஒவ்வொரு விதமாக ஏகப்பட்ட மெயில்கள் குவிந்தவண்ணம் உள்ளன. எல்லாப் பத்திரிக்கைகளிலும் இப்பொழுது முக்கியச் செய்தியே எந்திரன் படப் பாடல்களைப் பற்றித்தான். அதேபோல் "தேவதை" இதழிலும் 'தேவதை டாக்கீஸ்' பகுதியில் எந்திரன் படப் பாடல்களைப் பற்றி எஞ்சினியர்களின் டெக்னிக்கல் கண்ணோட்டத்தில் பிடித்த பாடல் வரிகளை விமர்சித்து எழுதச் சொல்லியிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய " அரிமா அரிமா" பாடலின்
"அஃறினையின் அரசன் நான்;
காமுற்ற கணினி நான்;

சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் 
சிலிகான் சிங்கம் நான்;"  வரிகள் இந்த இதழ் தேவதைப் பதிப்பில் வந்துள்ளது. அதைத் தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும் தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Related Posts with Thumbnails