இறுதியாக கடந்த ஞாயிறன்று சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ஹிந்தியிலும் "ரோபோ" பட இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டார் திரு. அமிதாப்பச்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கிலும் "ரோபோ" இசை வெளியீட்டு விழா தெலுங்கு சூப்பர் ஸ்டார் திரு. சிரஞ்சீவி அவர்கள் இசைத்தட்டு வெளியிட மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதற்குள்ளாக இன்டர்நெட்டில் படத்தின் கதைப் பற்றி ஒவ்வொரு விதமாக ஏகப்பட்ட மெயில்கள் குவிந்தவண்ணம் உள்ளன. எல்லாப் பத்திரிக்கைகளிலும் இப்பொழுது முக்கியச் செய்தியே எந்திரன் படப் பாடல்களைப் பற்றித்தான். அதேபோல் "தேவதை" இதழிலும் 'தேவதை டாக்கீஸ்' பகுதியில் எந்திரன் படப் பாடல்களைப் பற்றி எஞ்சினியர்களின் டெக்னிக்கல் கண்ணோட்டத்தில் பிடித்த பாடல் வரிகளை விமர்சித்து எழுதச் சொல்லியிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய " அரிமா அரிமா" பாடலின்
"அஃறினையின் அரசன் நான்;
காமுற்ற கணினி நான்;
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்;" வரிகள் இந்த இதழ் தேவதைப் பதிப்பில் வந்துள்ளது. அதைத் தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும் தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.
1 comments:
கருத்து பதிவும் - அது
படைக்கப்பட்ட விதமும்
எழுத்தின் நடையும் மிக அருமை
முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக