நேற்று சுதந்திர தினத்திற்காக எல்லா டிவி சேனல்களிலும் திரைப்படங்களும், புதிய திரைப்படங்கள் உருவாகும் விதம் மற்றும் நடிகர்களின் பேட்டி போன்றவை தான் ஒளிபரப்பாகின. அதிலும் விதிவிலக்காக ஒன்றிரண்டு நல்ல ப்ரொக்ராம்களும் ஒளிபரப்பாகின. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
- சன் டிவியில் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் பட்டி மன்றம் மிகவும் ரசிக்கத் தகுந்ததாக இருந்தது.
பட்டிமன்றத்தின் தலைப்பு "இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் இன்பம் என்பது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா" என்பது. இரு தரப்பு வாதங்களுமே மிக நன்றாக இருந்தது. கடைசியில் நடுவர் திரு.பாப்பையா அவர்கள் , அவரது காதல் திருமண வாழ்க்கை அனுபவத்தினால் இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் இன்பம் என்பது திருமணத்திற்குப் பின்பே என்று தீர்ப்பு வழங்கினார்.
- விஜய் டிவியில் நடிகர் திரு. சூர்யா அவர்களின் அகரம் Foundation சார்பில் நடைபெற்ற "விதை" என்னும் நிகழ்ச்சி மனதைத் தொடும்படி இருந்தது.
நடிகர். சூர்யா ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் திட்டத்தை இதன் மூலம் தெரிவித்தார். அதன்படி ஒரு மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடமும், SRM Engineering College-ல் ஐந்து இடங்களும் பெற்றுத் தந்துள்ளார். அதைத் தவிர பலர் இத் திட்டத்திற்கு நிதி உதவியும் அளித்துள்ளனர். எத்தனையோ மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் வாங்கியும் அவர்களுக்கு பிடித்த மேற்படிப்பை படிக்க முடியாமல் கஷ்டப்படுவதை அந்த நிகழ்ச்சியின் மூலமாக பார்க்க முடிந்தது. மிகவும் வருத்தமாக இருந்தது. நாமும் நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும் எனத் தோன்றியது.
- அடுத்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சி.
இது சிறப்பு நிகழ்ச்சி என்பதால், திரு.ஞானி, திரு. சோம.வள்ளியப்பன், திரு. அமுதன், திரு. முத்துக்குமார், திரு.ராமசாமி மற்றும் பல பிரபலமானவர்கள் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பு " உலகமயமாதல்". இரு தரப்பினரின் விவாதமும் மிக சூடாக, யோசிக்கும் படியாக இருந்தது.
0 comments:
கருத்துரையிடுக