டைபாய்டு

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

               போன பதிவில் என் குழந்தைக்கு நேர்ந்த 'Viral Diarrhoea' பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குப் பின்னர், குழந்தைக்குப் பத்துமாதம் இருக்கும் பொழுது, கடுமையான காய்ச்சல் வந்தது. அப்பொழுதும் ' All India Institute of Medical Sciences' (AIIMS)- க்குத் தூக்கிச்சென்றோம். அங்கு நிமோனியாக் காய்ச்சலாக இருக்கலாம் என்று எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப்பார்த்துக் கடைசியில் ' Viral Fever'  என்று அங்குள்ள டாக்டர்கள் கூறிவிட்டனர்.  பின் நாங்களும் வீட்டிற்கு அருகிலுள்ள டாக்டரிடம் காண்பித்து, குழந்தைக்கு Injection போட்டு, மருந்துகள் எல்லாம் கொடுத்து வந்தோம். ஆனால் ஒரு வாரமாகியும் காய்ச்சல் கொஞ்சம்கூடக் குறையவேயில்லை.



                அப்பொழுது, டெல்லியில் வெயில் வேறு, பகலில் 50டிகிரியும் இரவில் 39டிகிரியும் இருந்து வந்தது. இதனால் டாக்டர் இந்த க்ளைமேட்டினால்தான் Temperature குறையவில்லை என்றுகூறி, தமிழ்நாட்டிலுள்ள சொந்த ஊருக்குக் குழந்தையைத் தூக்கிச்செல்லுமாறு கூறினார். குழந்தைக்கு நன்கு குணமான பிறகும், டெல்லியில் வெயில் குறைந்த பிறகும் வருமாறு கூறினார்.

எனவே ஊருக்குக் குழந்தையைத் தூக்கிச்சென்று அங்குள்ள டாக்டரிடம் காண்பித்தோம். அங்கு சென்றும் 2 நாட்களாக Temperature குறையாததால், டாக்டர் Blood test, Urine test எடுத்துப் பார்த்து எல்லாம் நார்மல்தான் எனக்கூறி, தண்ணீரில் துணியை நனைத்து உடம்பை அடிக்கடித் துடைத்து விடச் சொன்னார். நடுராத்திரி கூட Temperature அதிகமாக இருந்தால், இவ்வாறு செய்யச்சொன்னார். அப்படித் துடைக்கும்போது குழந்தை கதறி அழும். பார்க்க ரொம்பக் கஷ்டமாக இருந்தது. பின்னர் அந்த டாக்டர் வேறு ஒரு  டாக்டரிடம் காண்பிக்கச் சொன்னார். இவ்வாறாக, ஒவ்வொருவராக 3  டாக்டர்கள் பார்த்துக் கடைசியில் 17 நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், குழந்தை Critical Situation-ல் இருக்கிறது; Temperature 103 டிகிரிக்குக் கீழ் குறையவே இல்லை; இன்னும் 1 டிகிரி அதிகமானால் கூட Fits வர வாய்ப்புள்ளது என்றுகூறி, உடம்பை Full Scan பண்ண வெண்டும் அந்த வசதி இந்த ஊரில் இல்லை, அருகிலுள்ள பெரிய ஊரில், ஒரு பெரிய ஹாஸ்பிட்டலுக்குப் போகுமாறு எழுதிக்கொடுத்தார்.

 அங்கு சென்றால், அங்கும் Blood test, Urine test மற்றும் Full Scan எல்லாம் எடுத்தார்கள். குழந்தைக்கு நரம்பு வெளியே தெரியாததால், Blood test எடுப்பதற்கும் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கும் குத்திக் குத்தி, பாவம்! அழுது, கதறவிட்டார்கள். பின்னர் அங்கு அட்மிட் பண்ணச்சொன்னார்கள். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் என எல்லா டெஸ்ட்டும் எடுத்துப்பார்த்து, 3 நாட்கள் கழித்து, 20வது நாள் ' டைபாய்டு' என உறுதிப்படுத்தினார்கள்.     
அதற்குள் குழந்தை, 20நாட்கள் தொடர்ந்து அடித்த காய்ச்சலால் சோர்ந்து, வெளிறிப் போய்விட்டது. அதன்பின் டைபாய்டுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, காய்ச்சல் முற்றிலுமாக விட்டது.2 நாட்கள் முழுவதுமாகக் காய்ச்சல் இல்லாமல் ஆன பின்புதான், 'டிஸ்சார்ஜ்' செய்தார்கள்.
               Chief டாக்டர், " குழந்தைக்குப் பொதுவாக டைபாய்டு வராது; அதுவும் 10மாதக் குழந்தைக்கு வாய்ப்பே இல்லை; 2 வயதில்தான் குழந்தைகளுக்கு டைபாய்டுக்கான தடுப்பூசியே போடப்படுகிறது. ஏனெனில், அதன்பின்தான் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்; இப்பொழுது 10 மாதக் குழந்தைக்கு வந்திருக்கிறதென்றால், மிக ஆச்சரியமாக உள்ளது. இது தண்ணீரால்தான் பரவியிருக்கிறது" என்று கூறினார். திரும்பவும் டைபாய்டு வராமலிருக்க, 10 மாதத்திலேயே தடுப்பூசி குழந்தைக்குப் போடப்பட்டது. அதன்பின்தான் முழுவதுமாகக் குணமாகியது.
              எனக்கு என்ன ஆதங்கம் என்றால், இதை 20 நாட்களாக கண்டுபிடிக்காமல் விட்டதுதான். டெல்லியில் ஒரு 10 மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து 10 நாட்களாகக் காய்ச்சல் இருந்தும், எந்த டாக்டரும் ஒரு Blood test கூட எடுக்கச் சொல்லவில்லை . ஊருக்கு வந்து, தொடர்ந்து 20 நாட்களாகக் காய்ச்சல் இருக்கிறது என Blood test எடுத்தும் டைபாய்டுதான் என எந்த டாக்டராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . 10 மாதக் குழந்தைக்கு வராது என்பதால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார்கள். ஆனால் 20 நாட்களாக குழந்தைப் பட்ட அவஸ்தையை சொல்லிமுடியாது. குழந்தையையும், குழந்தைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும் எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தும், கொதிக்க வைத்தத் தண்ணீரையே ஃப்ளாஸ்கில் ஊற்றிப் பயன்படுத்தியும், Viral Diarrhoeaவாலும் டைபாய்டாலும் குழந்தை ஒரு வயதிற்குள் 2முறை பாதிக்கப்பட்டது மிகப் பெரிய கொடுமை! 

0 comments:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails