# நீட் #
நீட் தேர்வு அன்று முழுவதும் செய்திகளில் எர்ணாகுளம் சம்பவம்..
12 வருஷத்துக்கு முன்னாடி இதே போல நானும் அப்பாவும் ஒரு எக்ஸாம் எழுத வந்தது தான் ஞாபகத்துக்கு வந்தது.
இப்போ எர்ணாகுளத்தில் இருக்கிறேன். அப்போ நான் திருவனந்தபுரத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். என் சொந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து அப்பா திருவனந்தபுரத்துக்கு எக்ஸாமுக்கு முந்தின நாளான சனிக்கிழமை வந்து என்னை அழைச்சிக்கிட்டு எர்ணாகுளத்துக்கு வந்தாங்க. மொத்தமா 12 மணி நேரம் பயணம் அவங்களுக்கு. திருவனந்தபுரத்துக்கு பஸ்ல வந்து இறங்கி என்னை ஹாஸ்டலில் இருந்து கூட்டிக்கொண்டு போனாங்க.
மாலை 4 மணிக்கு ட்ரையின்ல ஏறி இரவு 8.30க்கு வந்து சவுத் ஸ்டேஷன்ல இறங்கினா செம மழை...புது இடம் . லாட்ஜ் தேடி மழையில போனோம். எனக்கு ஒரே பயம். ராத்திரி முழுவதும் தூக்கமே வரல. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எந்திரிச்சு ஆட்டோ பிடிச்சு போய் எக்ஸாம் எழுதிட்டு மத்தியானமே கெளம்பியாச்சு. திரும்ப என்னை திருவனந்தபுரத்தில் விட்டுட்டு அன்னைக்கு ராத்திரியே அப்பா பஸ்ல ஸ்ரீவில்லிப்புத்தூர்க்கு போய் சேர்ந்துட்டாங்க. இப்ப நடந்தது போல இருக்கு எல்லாம்.
நேத்து ராத்திரி அதே மாதிரி தான் இங்க செம மழை. எனக்கு இருந்த மாதிரி தான் நிறைய பேருக்கு பயம்கலந்த உணர்வுகள் இருந்திருக்கும். நேத்து சாயங்காலம் இருந்து இதே நினைவுகள்ல தான் இருக்கிறேன். நேற்று , இன்னைக்கெல்லாம் நீட் எழுத வந்தவர்களுக்கு நிறைய பேர் உதவி பண்ணினாங்க. தங்க இடம், உணவு , ஆட்டோ வசதி எல்லாம் செய்து கொடுத்திருக்காங்க. எக்ஸாம் சென்டருக்கு போக எல்லாம் ஏற்பாடு செய்து உதவி பண்ணிருக்காங்க.
அவர்களுக்கெல்லாம் நன்றி...
0 comments:
கருத்துரையிடுக