அடுப்பு இல்லாமல், அதிக நேரமும் செலவிடாமல் மிக
எளிதாக சாக்லேட் செய்வதற்கான மிக எளிய முறை இது. இதைச்
செய்ய அதிக பொருட்கள் தேவையில்லை.
தேவையான் பொருட்கள்:
பால் பவுடர் - 3 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
வெண்ணெய் - 1/4 கப்
பால் - சிறிதளவு
பால் பவுடருடன் பவுடர் சுகர், கோகோ பவுடர், வெண்ணெய் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
அதில் பாலை, ஸ்பூனால் சிறிது சிறிதாக ஊற்றி , சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
பின் ஒரு தட்டில் பட்டர் பேப்பர் அல்லது
வெண்ணையைத் தடவிக்கொண்டு , நமக்குத் தேவையான
வடிவத்தில் சதுர, சதுரமாகவோ அல்லது சிறு
உருண்டைகளாகவோ செய்து வைக்கவும். இதை ஃப்ரீசரில்
சுமார் 3லிருந்து 5மணி நேரம் வரை வைத்து எடுத்தால்,
அருமையான, சுத்தமான சாக்லேட் ரெடி. வீட்டில்
குழந்தைகள் கேட்டவுடனேயே இதை செய்து கொடுக்கலாம்.
இன்றைய தினம் இனிப்பான தினமாக இருக்கட்டும்.
இதை செய்து பார்த்துவிட்டு, உங்கள் கமெண்ட்ஸை சொல்லுங்க.
22 comments:
உலவு . காம் விளம்பரத்த சைட் விட்ஜெட்ல இருந்து எடுங்க உங்க தளத்தில் வைரஸ் காட்டுது
உலவு . காம் -ஐ எடுத்து விட்டேன். தகவலுக்கு நன்றி ப்ரியமுடன் வசந்த்.
Thank you for this sweet recipe! I love it. :-)
வருகைக்கு நன்றி சித்ரா.
Nice Sweet..
இனிக்க இனிக்க சொல்லிக்கொடுத்த இனிப்புக்கு மிக்க நன்றி ஜிஜி.
good one
சாக்லெட் வேணும்னு அழுகுற புள்ளைட்ட
5 மணி நேரம் வெய்ட் பண்ண சொல்ல முடியுமா
50பைசா 1,5,10,100,1000 ரூவான்னு விதவிதமா செஞ்சு கடையில விக்கிறாங்க
அத வாங்கி குடுத்துட்டு வேற வேலய பாருங்கப்பா
( நம்ம செஞ்சு குடுக்குற மாதிரி வருமான்னு கேக்க கூடாது
அத தின்னுட்டு புள்ளைக்கு சாக்லெட் ஆசையே வெறுக்க வேணா வாய்ப்பிருக்கு :) )
ஈஸி மெத்தடா இருக்கே! ஒருதரம் செஞ்சு பாக்கணும். நன்றிங்க.
தங்கள் வருகைக்கு நன்றி
அஹமது இர்ஷாத்
ஆதிரா
மங்குனி அமைசர்
நீங்க சொல்றதும் சரிதான் விநாயகதாசன்.
அப்போ சாப்பாடும் தினமும் கடைலயே வாங்கி சாப்பிடலாம். நீங்க ஊருக்கு போனா கூட உங்க அம்மாவ கடைலயே வாங்கித்தரச் சொல்லுங்க. சமைக்க வேணாம்னு சொல்லிடுங்க.வருகைக்கு நன்றி.
கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க ஹுசைனம்மா..வருகைக்கு நன்றி.
நல்லாயிருக்கு பதிவு. சாப்பிடத் தயார். தயாரிக்க அல்ல
ரொம்ப ஈசி சாக்லேட்டா இருக்கே. கண்டென்ஸ்ட் மில்க் கூட சேர்த்துகக்லாமுன்னு நினைகிறேன்
ஹேய், இவ்ளோ ஈசியா சாக்லேட் செய்யலாமா.. வாவ், ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்றேங்க.
very nice
தயாரிக்கவும் எளிதுதான் Dr.எம்.கே.முருகானந்தன்.
வருகைக்கு நன்றி.
கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்தும் செஞ்சு பாக்கணும் ஜலீலா கமல்.கருத்துக்கு நன்றி.
செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க விக்னேஷ்வரி. வருகைக்கு நன்றி.
வருகைக்கு நன்றி ஸ்டெல்லா.
இவ்வளவு ஈசியாக்வா ......செய்துபார்த்து சொல்கிறேன்பதிவுக்கு நன்றி
கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க நிலாமதி.
வருகைக்கு நன்றி.
கருத்துரையிடுக