இந்தப் புத்தகத்தைப் போன வாரம் படித்தேன். இதன்
ஆசிரியர் லக்ஷ்மி. என்னுடைய அம்மாவிற்கு பிடித்த
எழுத்தாளர்களுள் லக்ஷ்மியும் ஒருவர். இவரைப் பற்றியும்,
இவரின் கதைகள் பற்றியும் அம்மா நிறைய என்னிடம்
சொல்லியிருக்கிறாங்க. ஆனால் எனக்குதான் படிப்பதற்கு
சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. இவருடைய புத்தகங்களில் நான்
படித்த முதல் புத்தகம் இதுதான். லக்ஷ்மி அவர்களுடைய
கதைகள் பெரும்பாலும் குடும்பக் கதைகளாகத் தான்
இருக்கின்றன. அந்த வரிசையில் இதுவும் ஒரு குடும்பக்
கதைதான். மிக எளிமையான வரிகளில் எழுதியிருக்கிறார்.
இந்தக் கதை முழுவதும் சரயு, அனுபமா, யோகநாதன் என்ற
மூன்று பேரைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஒரு சின்னப்
பெண்ணின் ஏக்கமும், அம்மா பாசமும் மிக அழகாகக்
கூறப்பட்டிருக்கிறது. சாதாரண குடும்பக் கதைதான்
என்றாலும் இவர் எழுதியிருக்கும்விதம் நன்றாக உள்ளது.
புத்தகத்தின் பெயர் : அம்மா! எனக்காக...
பதிப்பகம் : திருமகள் நிலையம், சென்னை
முதல் பதிப்பு : டிசம்பர் 1986
ஐந்தாம் பதிப்பு : ஜூலை 2007
விலை : ரூ.55 /-
6 comments:
நல்ல அறிமுகம். கல்லூரி காலத்தில் லக்ஷ்மி அவர்களுடைய நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். இந்த புத்தகம் படித்த நினைவில்லை.
பகிர்வுக்கு நன்றி.
நல்லதோர் நூல் அறிமுகம். இதுவரை எழுத்தாளர் லஷ்மியின் நூல்களை படித்ததில்லை. அடுத்த முறை வாங்கி படிக்கிறேன்.
அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.
வாங்க வெங்கட் நாகராஜ்,
வருகைக்கு நன்றிங்க.
வாங்க கோவை2தில்லி,
கண்டிப்பா எழுத்தாளர் லஷ்மியின் நூல்களை படிச்சுப் பாருங்க.
வருகைக்கு நன்றி.
வாங்க சித்ரா,
வருகைக்கு நன்றிங்க.
கருத்துரையிடுக