இன்று நம் நாட்டின் 62 ஆவது குடியரசு தினம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! இதையொட்டி,
பல்வேறு துறைகளில் நம் நாடு கண்டுள்ள வளர்ச்சியை
பிரதிபலிக்கும் வகையில் டெல்லியில், அணிவகுப்பு
நடப்பது வழக்கம். ராஜ பாதையில் தொடங்கி செங்கோட்டை
வரை 8 கி.மீ. தூரம் இந்த அணிவகுப்பு நடக்கும். ராஜபாதையில்
இருந்து செங்கோட்டை வரை நடைபெறும் இந்த அணிவகுப்பும்,
அலங்கார ஊர்திகளின் ஊர்வலமும், கலை நிகழ்ச்சிகளும்
கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும்.
முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு இந்த அணிவகுப்பைப்
பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அது 60 வது குடியரசு
தினம். காலையில் அந்தக் குளிரில் ஆறு மணிக்கே புறப்பட்டுச்
சென்றோம். நான், என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என
12 பேர் சென்றோம். இந்த அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பிற்காக
பல ரோடுகள் ப்ளாக் பண்ணப்பட்டிருந்தன. சுற்றி சுற்றி ஒரு
வழியாக போய்ச் சேர்ந்து, செக்யூரிட்டி சோதனைகளெல்லாம்
முடித்து, எங்களுக்கான இடங்களில் போய் உட்கார்ந்து
கொண்டோம். மொபைல், கேமரா, உணவுப் பண்டங்கள் எதுவும்
எடுத்துச் செல்லக்கூடாது. குழந்தைகளுக்கான பால்
பாட்டிலைக்கூட, பாலை வாயில் ஊற்றிக் காண்பித்தபிறகே
அனுமதிக்கின்றனர். அந்த அளவிற்கு கடுமையான பாதுகாப்பு.
முடித்து, எங்களுக்கான இடங்களில் போய் உட்கார்ந்து
கொண்டோம். மொபைல், கேமரா, உணவுப் பண்டங்கள் எதுவும்
எடுத்துச் செல்லக்கூடாது. குழந்தைகளுக்கான பால்
பாட்டிலைக்கூட, பாலை வாயில் ஊற்றிக் காண்பித்தபிறகே
அனுமதிக்கின்றனர். அந்த அளவிற்கு கடுமையான பாதுகாப்பு.
பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் ஆடல்,
பாடல் நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களுடனும், அந்தந்த
மாநிலத்தின் நடனங்களும் அருமையாக இருந்தது.
விமானப் படை வீரர்களின் சாகசத்தைப் பார்க்கக்
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மொத்த நிகழ்ச்சியின்
சிறப்பம்சமே இதுதான். ராணுவப்படை, கடற்படை, விமானப்
படை, எல்லைப் பாதுகாப்புப் படை முதலிய படைகளின்
அணிவகுப்பு பார்க்கவே மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியாக
வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருதுவழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குடியரசுத்தலைவர் கடைசியில் நமது நாட்டின்
மூவண்ணக் கொடியை குண்டுகள் முழங்க ஏற்றும்போது,
மெய் சிலிர்த்துவிட்டது. இந்த அணிவகுப்பைப் பார்க்கும் போது,
இந்தியன் என்ற உணர்வு தலைதூக்கிற்று. வார்த்தைகளால்
அதை விவரிக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம்.
திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அனுபவம். இந்த இரண்டு
வருடங்களாக பார்க்க செல்ல முடியவில்லை. அடுத்த
வருடமாவது சென்று பார்க்கும் ஆவலில் இருக்கிறேன்.
15 comments:
WOW!!! Hot news!
ஜெய் ஹிந்த்!
நாங்கல்லாம் டிவியில் பார்த்து திருப்திப்பட்டுக்கிறோம்ங்க..
வந்தேமாதரம்!!
தொலைகாட்சியில் மட்டுமே நாங்கள் காண இயலும்
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
அ னைவருக்கும் குடி அரசு தின நல் வாழ்த்துக்கள்.
நாமும்தொலைக்காட்சிகளில் மட்டுமே கண்டு சந்தோஷப்படலாம்.
இப்போதெல்லாம் நிறைய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் கூட இந்த அளவு இல்லை. நான் வேலை சேர்ந்த புதிதில் ஒவ்வொரு வருடமும் சென்று பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் டி.வி.யில் தான்! நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.
நல்ல பகிர்வு ஜிஜி. நன்றி. குடியரசு தின வாழ்த்துக்கள்.
நானும் தொலைக்காட்சியில் கண்டு களித்தேன்.
ஜெய் ஹிந்த்!
வாங்க சித்ரா,
வருகைக்கு நன்றிங்க.
வாங்க
அமைதிச்சாரல்,
எல் கே
வருகைக்கு நன்றிங்க.
டெல்லியில் இருக்கிறதால நேர்ல போய் பார்க்க முடிஞ்சுது.
இல்லாவிட்டால் நாங்களும் டிவிலதாங்க
பார்த்திருப்போம்.
வாங்க மகராஜன்,
வருகைக்கு நன்றிங்க.
வாங்க லக்ஷ்மி,
வருகைக்கு நன்றிம்மா.
வாங்க வெங்கட் நாகராஜ்,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிங்க.
வாங்க ராமலக்ஷ்மி ,
வருகைக்கு நன்றிங்க.
வாங்க கோவை2தில்லி ,
வருகைக்கு நன்றிங்க.
கருத்துரையிடுக