ஆயகலை - 65

வெள்ளி, பிப்ரவரி 04, 2011


             ஆய கலைகள் 64 இருக்குனு நம்ம எல்லாருக்கும்
தெரியும். 65 ஆவதா ஒரு கலை இருக்கு. அது என்ன தெரியுமா?
அதுதாங்க குழந்தைகளை சாப்பிட வைக்கிறது. அந்தக் கலையை
நான் இப்போதான் கத்துகிட்டு இருக்கேன். அப்பப்பா! எவ்வளவு
கஷ்டம்? இதுக்கு நாம IAS எக்ஸாம் பாஸ் பண்ணிடலாம் போல.


            
             முன்னாடியெல்லாம், நாம சின்னக் குழந்தைகளா
இருக்கும்போது, நம்ம அம்மா எல்லாம், இடுப்புல உட்கார வச்சு,
'காக்கா', 'நாய்'னு காட்டி நமக்கு சாப்பாடு ஊட்டினாங்க. ஆனா,
இப்போ உள்ள பிள்ளைங்க இடுப்புல உட்காரவச்சா, உட்கார்றது
இல்ல. இறங்கி நடக்கணும்; ஓடணும். நாமளும் அவங்க
பின்னாடியே ஓடி, சாப்பாடு ஊட்டிவிட்டா, ஒரு வாய் வாங்குறது,
அடுத்த வாய் கீழே துப்பிடறாங்க. சரி, வெளியில வச்சு
ஊட்டினாதான் இவ்வளவு போராட்டமா இருக்குனு வீட்டுக்குள்ள
வச்சு, சாப்பாடு குடுக்கலாம்னு 'வாக்கர்'ல உட்கார வச்சு
ஊட்டுனா, அந்தப் பக்கமா தலைய திருப்பிக்கிறது, இல்ல,
வாயை இறுக்கமா மூடிக்கிட்டு திறக்கமாட்டேன்னு அடம்
பிடிக்கிறது இப்படி எல்லாம் பண்றாங்க.

            எப்படியாவது சாப்பிட்டா சரின்னு, டிவியில, கார்ட்டூன்
சேனல் போட்டுவிட்டா,  போனாப் போகுதுன்னு அப்போதான்
ஒரு வாய் வாங்கறாங்க. அப்படியே ஏமாத்தி சாப்பிட
வைக்கலாம்னு பார்த்தா, அதுவும் அவங்களுக்கு போரடிச்சிடுது.
ஒருவேளை, டேஸ்ட் பிடிக்கலையோனு நினைச்சு, நாம வேற
ஏதாவது கொடுத்தாலும் சாப்பிடறது இல்லை. டெய்லி இட்லியே
குடுக்காம, ஒருநாள் தோசை, ஒருநாள் சப்பாத்தினு மாத்தி,
வேற, வேறவகையாத்தான் நானும் குடுத்துப் பார்க்கறேன்.
நல்லா சாப்பிட்டாதான, நமக்கும் வேற வேற செய்து கொடுத்து,
சாப்பிட வைக்க ஆசையா இருக்கும்? ஒரு இட்லி சாப்பிட
வைக்கிறதுக்குள்ள நம்ம பாடு திண்டாட்டம்தான். அந்த ஒரு
இட்லில பாதி, தட்டிவிட்டு கீழே விழுந்துடும் அல்லது
துப்பிடறதுனால கீழே போகும்.

               எனக்கு தினமும் மூணு வேளையும் என்னோட
ஒன்றரை வயசுப் பையனால போராட்டம்தான். என்னோட
பையன்தான் இப்படி சாப்பிட மாட்டேங்கறானோனு நினைச்சா,
ஃப்ரெண்ட்ஸோட குழந்தைகள், உறவுக்கார குழந்தைகளும்
இப்படித்தான் பண்றாங்கனு கம்ப்ளைண்ட் பண்றாங்க.
எங்கம்மா, ' நீயே இப்படித்தான் இருந்த'ன்னு என்னைச்
சொல்றாங்க. இன்னும் பையன் சரியா பேச ஆரம்பிக்கல.
பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் சாப்பிடறதுக்கு என்ன
என்னவெல்லாம் பண்ணப்போறான்னு நினைச்சா இப்பவே
பயமா இருக்கு. சாப்பிடறதுக்கு மட்டும் ஏன் குழந்தைகள் இப்படி
அடம் பிடிக்குறாங்கன்னு தெரியலை. நாமும் அந்த ஸ்டேஜைத்
தாண்டித்தான் வந்திருக்கோம். இப்படித்தான் நம்ம
அம்மாவுக்கும் கஷ்டத்தை கொடுத்திருப்போம். சாப்பாடை
பார்த்தவுடனே, இப்படி பண்றானேனு டாக்டர்கிட்ட கேட்டா,
விளையாடற குழந்தைகள், விளையாட்டு நினைப்பில்
இப்படித்தான் பண்ணுவாங்கன்னு சொல்றார்
            
           இனி, ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டா, அவசர அவசரமா
சாப்பிட வேண்டியிருக்கும். அப்பவும் ஒழுங்கா சாப்பிட
மாட்டங்க.எப்போதான் ஒழுங்கா சாப்பிட போறாங்களோ
தெரியலை. தானா சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, தட்டுல வச்சு,
ஏதாவது கதை சொல்லி, ஏமாத்திதான் சாப்பிடவைக்கணும்.
இப்போ என் பையனுக்குக் கதை எதுவும் புரியாது.
மிருகங்களைக் காட்டினாலும் அவனுக்கு எல்லா மிருகங்களுமே,
'ஆடு'னாலும் சரி, 'மாடு'னாலும் சரி,  'பா...பா..'தான்;
பறவைகள்னா 'போ..போ..'தான். இப்போ இருக்குற
சூழ்நிலையில், கார்ட்டூன் சேனலும், டிஸ்கவரி சேனலும்தான்
அவனுக்கு சாப்பாடு கொடுக்க உதவுகிறது.


20 comments:

ADHI VENKAT சொன்னது…

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. அவங்கள சாப்பிட வைக்கறதே பெரிய கஷ்டம். என் மகள் தோசைக்கு மிளகாய் பொடி, நெய், சர்க்கரை தொட்டு சாப்பிடுவாள். நெய் விட்டு அப்புறம் தான் சர்க்கரை போடணும். சர்க்கரை போட்டு நெய் போட்டா ஒத்துக்க மாட்டா. அவ கண்ணெதிரே தான் தட்டுல போடணும். இது ஒரு உதாரணம் தான். எப்படியெல்லாம் பாடுபட வேண்டியதா இருக்கு பாருங்க.

எல் கே சொன்னது…

வீட்டுக்கு வீடு வாசப்படி ... என் பொண்ணுக்கு எதுவா இருந்தாலும் ரசம் வேணும். இல்லாட்டி சாப்பிடமாட்டா ...அப்படி ரசம் இருந்தாலும் அவளை சாப்பிட வைக்கறதுக்குள்ள ஷப்பா முடியலை :(

Chitra சொன்னது…

Cherish every moment. .... :-)

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள். குழந்தைகளை சாப்பிட வைக்க நிறைய பொறுமை வேண்டும்.
நல்ல பதிவு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தைகளை சாப்பிட வைக்க மேலே திரு ரத்னவேல் அவர்கள் சொன்னது போல பொறுமை மிக மிக அவசியம். ஆனால் நமக்குத் தான் முடிவதில்லை. பொறுமையை சோதிக்கும்படி இருக்கும் அவர்கள் சேட்டைகள். ஆனால் ரசிக்கத்தக்கவை இவை எல்லாமே. ஆகவே ரசியுங்கள்.

Unknown சொன்னது…

வாங்க கனாக்காதலன்,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி ,
இந்தக் காலத்துப் பிள்ளைகளை ஏமாற்றி சாப்பாடு குடுக்க முடியறது இல்லைங்க.கஷ்டம்தான்.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க எல் கே ,
ஆமாங்க. ஒவ்வொரு டெக்னிக்கா ஃபாலோ பண்ணி நாமளும் கஷ்டப்பட்டு அவங்கள சாப்பிட வைக்க முயற்சி பண்ணறோம்.ஆனா முடியலை.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா ,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ,
ஆமாங்க.கண்டிப்பா பொறுமை ரொம்ப ரொம்ப தேவை.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ் ,
ஆமாங்க.நீங்க சொல்கிற மாதிரி, சில நேரங்களில் ரசிக்கும்படியா இருக்கு. ஆனால் சில நேரங்களில், நமக்கு முக்கியமான வேலை ஏதாவது இருக்கும்போது, நாம் பொறுமை போயிடுதுங்க.
வருகைக்கு நன்றிங்க.

ஹுஸைனம்மா சொன்னது…

64 கலைகளையும்கூட சுளுவாக் கத்துகிடலாம். ஆனா, 65வதை.. ஹூம்.. அந்தக் காலம் கடந்துபோயிடுச்சுன்னாலும், அதெல்லாம் நெனச்சாலே கதிகலங்குது..

Jaleela Kamal சொன்னது…

சரி தான் குழந்தைகளை சாப்பிட வைப்பது ரொம்ப சிரமம்.
என் பெரிய பையன்னுக்கு பட்ட பாடு அதிகம்.

stella சொன்னது…

un kulanthai than unaku teacher ovouru stagela ni onu kathukira enjoy pa

Asiya Omar சொன்னது…

ஆஹா அருமையான பதிவு,மலரும் நினைவுகள்.என் பிள்ளைகளை சாப்பிட வைக்க நான் இறங்கிய ஸ்டெப்ஸ் நினைவு வருது,மூன்றாவது மாடியில் இருந்து இறங்கி வெளியே வேடிக்கை காட்டி தினமும் சாப்பிட வைப்பேன்,சாப்பாடு உள்ளே போவதே தெரியாது,மரம்,காக்கா,குருவி,பூனை என்று எதையாவது பார்த்து கொண்டு அவ்ற்றிற்கும் கொடுத்து விட்டு சாப்பாடு ஊட்டிய காலம் இனி வருமோ!

Unknown சொன்னது…

வாங்க ஹுசைனம்மா,
ஆமாங்க.எல்லாருக்குமே குழந்தைங்களுக்கு சாப்பாடு குடுக்கற, அந்தக்காலம் மறக்க முடியாத அனுபவங்கள் நிறைந்ததா இருக்கு.

Unknown சொன்னது…

வாங்க ஜலீலா,
வருகைக்கு நன்றி.
குழந்தைகள் எல்லாருமே சாப்பிடறதுக்கு நம்மள படுத்திதான் எடுக்கறாங்க. அப்படி படுத்தாம தானா சாப்பிடற குழந்தைகளை இப்போ பாக்க முடியறது இல்லை.

Unknown சொன்னது…

@ ஸ்டெல்லா,
நீங்க சொல்றது சரிதான்.குழந்தைகள் நமக்கு சிலசமயங்களில் டீச்சராதான் இருக்காங்க.ஆனா தினமும் சாப்பிட முரண்டு பன்னும்போதுதான் அதை நம்மால ரசிக்க முடியலை.பொறுமை போயிடுது.
வருகைக்கு நன்றி

Unknown சொன்னது…

வாங்க ஆசியா,
வருகைக்கு நன்றி.
உங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றிங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நீயே இப்படித்தான் இருந்த'//
இதே கதை தான் இங்கயும்..

வளர்ந்த பின்னும் சாப்பாடுக்கு மட்டும் பாடுதான்..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails