காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா
உயிர்மை பதிப்பகம் வெளியீடு : 173
விலை - ரூ.130 /-
சரித்திர நாவல்.
முதல் பதிப்பு : டிசம்பர் 1995
இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2008
இந்தக் கதையை பெரும்பாலும் எல்லாரும்
படித்திருப்பார்கள். எனக்கு இப்பொழுதுதான் படிக்க
சந்தர்ப்பம் கிடைத்தது. சரித்திர நாவல்கள் எனில் எனக்குத்
தனி விருப்பம்தான். கதைகளில் வரும் சரித்திரக் காட்சிகளை
கற்பனை செய்துகொண்டே படிப்பது மிகவும் பிடிக்கும் . அந்த
வகையில் இந்தக் கதையும் கற்பனை செய்து படிப்பதற்கு
அருமையான தீனிதான்.
ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை
இது. சோழ நாட்டு வளங்களை, நேரில் பார்ப்பது போல,
வர்ணனை செய்திருக்கிறார் திரு.சுஜாதா அவர்கள். இந்த
நாவல் திரு. சுஜாதா அவர்களின் இரண்டாவது சரித்திர
நாவலாகும். இந்த நாவலை பெரும்பாலும் இலக்கணத்
தமிழில் எழுதியுள்ளார். இதைக் கதையின் கதாநாயகனான
வசந்தகுமாரன், யாப்பிலக்கணத்தில் பேசுவதிலிருந்து
அறியலாம். வசந்தகுமாரனின் துடுக்குத்தனமும்,
வீரமும் நாம் நேரில் காண்பது போலவே உள்ளது.
சரித்திர நாவல்களைப் படிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கு
கண்டிப்பாக இந்த நாவலும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
16 comments:
விரிவாக பகிரலாமே
முன்பே படித்திருப்பதாய் நினைவு. பகிர்வுக்கு நன்றி சகோ.
அருமையான பகிர்வு. :-)
மகாராணிய குட்டி இளவரசர் படிக்கவிடறாரா.. :)
கணேசப்பட்டர், வசந்தகுமாரன் - இருவரும் கணேஷ், வசந்தின் பிரதிகளாகவே இருப்பார்கள் இல்லையா... !
சுஜாதா பற்றி, கணேஷ் வசந்த பற்றி ingae
http://umajee.blogspot.com/2010/12/blog-post_28.html
காய்ஸ் படிச்சிட்டீங்க தானே. அப்படியே புக்கை இந்தப் பக்கம் தர்றது. சுஜாதாவின் சரித்திர நாவல் எதுவும் வாசிச்சதில்லை நான்.
நல்லதொரு புத்தக விமர்சனம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது படிக்கிறேன்.
நல்ல பகிர்வு.
வாங்க நேசமித்ரன்,
ஆமாங்க.கொஞ்சம் விரிவாக
எழுதியிருக்கலாம்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
வாங்க வெங்கட் சார்,
வருகைக்கு நன்றிங்க.
வாங்க சித்ரா,
வருகைக்கு நன்றிங்க.
வாங்க முத்துலெட்சுமி,
என்ன செய்ய?கொஞ்சம் கஷ்டமாத்தான்
இருக்கு. பையன் தூங்கும்போதுதான் புத்தகங்கள்
படிக்க முடிகிறது.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க ஜீ ...,
ஆமாங்க.நீங்க சொல்வது போல
சுஜாதாவின் பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும்
கணேஷ், வசந்த் வந்துவிடுவார்கள்.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க விக்னேஷ்வரி,
இந்தப் புத்தகம் லைப்ரரியில் இருந்து
எடுத்ததுங்க.அடுத்த முறை ஊருக்குப்
போகும்போது நானே இந்தப் புத்தகம்
வாங்கனும்னு இருக்கேன்.
படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
திரும்பவும் படிக்கவேண்டுமென்ற ஆவல்.
வாங்கிட்டு வந்ததும் உங்களுக்கு கண்டிப்பாக
தருகிறேன்.
வாங்க கோவை2தில்லி,
சந்தர்ப்பம் கிடைக்கும்போது
கண்டிப்பாக இந்தக் கதையைப் படிங்க.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க மாதேவி ,
வருகைக்கு நன்றிங்க.
கருத்துரையிடுக