'சுருச்சி' (SURUCHI)

வியாழன், ஏப்ரல் 14, 2011


அனைவருக்கும் இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள் !!!

                என் கணவரது நண்பர், நீண்ட நாட்களாக ஒரு
ரெஸ்ட்டாரன்ட் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அது
குஜராத்தி மற்றும் ராஜஸ்தான் உணவுகளுக்கான புகழ்பெற்ற
ரெஸ்ட்டாரன்ட் என்றும் சாப்பாடு அவ்வளவு அருமையாக
இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

              போன வாரம்தான் அந்த ரெஸ்ட்டாரண்டிற்கு
போவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. டெல்லி-கரோல்பாக்
ஏரியாவில் இருக்கும் அந்த ரெஸ்ட்டாரன்ட்டின் பெயர்  'சுருச்சி'
(SURUCHI). போர்டிலேயே 'Rajasthani and Gujarathi Restaurant' 
 எனப் போட்டிருந்தது.  இது ஒரு வெஜிடேரியன்
ரெஸ்ட்டாரன்ட். மெனு கார்டிலேயே பஞ்சாபி தாலி
(இங்கு சாப்பாட்டிற்கு  தாலி என்று சொல்கிறார்கள்), குஜராத்தி
தாலி , ராஜஸ்தானி  தாலி , சவுத் இந்தியன்  தாலி என நான்கு
வகைதான் இருக்கிறது. ஆனால் எல்லாமே அன்லிமிடெட். இந்த ரெஸ்ட்டாரன்ட்டுடைய லோகோ ( EAT LIKE A KING )விற்கு 
ஏற்ப சாப்பிட்டு முடிக்க, முடிக்க வைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்.

                   குஜராத்தி  தாலி                         பஞ்சாபி  தாலி
                        

                  ராஜஸ்தானி  தாலி                  சவுத் இந்தியன்  தாலி

              நாம் எந்த சாப்பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் 
எனக் கேட்டுக் கொண்டு, அந்த ஊர் சாப்பாடு ஐட்டங்களை
பெயர் சொல்லி வைக்கிறார்கள். அதுபோல, ஒரு சின்ன மண்
டம்ளரில், மோரும் குடிக்க, குடிக்க ஊற்றிக் கொண்டே 
இருக்கிறார்கள். கம்பு ரொட்டி, தவா ரொட்டி, கிச்சடி சாவல் 
(அரிசி), சாதம், சுட்ட அப்பளம், ஆறு வகைப் பொரியல் என  
அனைத்தும் அன்லிமிடட் தான். கடைசியாக குலாப் ஜாமூன்
அல்லது கஸ்டர்ட் ( நமது விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது 
ஒன்று) என ஒரு இனிப்புடன் சாப்பாடு முடிவடைகிறது.
           நான் குஜராத்தி  தாலி ஆர்டர் செய்திருந்ததால், முதலில் 
அந்த ஊர் ஸ்பெஷலான ' டோக்ளா ' வைக்கப்பட்டது. 
பெரும்பாலான குஜராத்தி டிஷ்கள் இனிப்பாகவே இருந்தன. 
வெரைட்டியாக சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்
இது. ஆனால், என்ன விலை தான் கொஞ்சம் அதிகம். ஒரு 
முழுச் சாப்பாட்டின் விலை ரூ.250 /-

18 comments:

எல் கே சொன்னது…

காசுக்கு ஏத்த ருசி இருக்குமா ? அதுதான் முக்கியம்

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள் !!!

Yaathoramani.blogspot.com சொன்னது…

சென்ற வாரம்தான் டெல்லி வந்து திரும்பினேன்
உங்கள் பதிவைக் கண்டவுடன்தான்
ஆஹா முதலில் தெரியாமல் போச்சே என
வருத்தம் கொண்டேன்
படங்களுடன் அசத்தல் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

என்ன 250 ஆ? பின்ன..
ராணி மாதிரி சாப்பிட்டீங்களாக்கும் ? :))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அட போயிட்டு வந்தாச்சா! நல்லது. தாளி என்றவுடன் “தாளிச்சுருவாங்கன்னு நிறைய பேர் பயந்துடப் போறாங்க! இங்கே தட்டில் வைத்துக் கொடுப்பதால் தட்டினைத் தான் “தாலி” [Thaali] என்று அழைக்கின்றனர். நல்ல பகிர்வு சகோ. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ரமணி சார்: தில்லி வரை வந்து இருக்கீங்க! முன்பே தெரிவித்திருந்தால் சந்தித்திருக்கலாமே! அடுத்த முறை வந்தால் தெரிவியுங்கள்.

Unknown சொன்னது…

வாங்க எல் கே,
நல்ல ருசிதான் சாப்பாடு.ஆனால்,
விலைதான் கண்ணைக் கட்டுகிறது.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ஐயா,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரமணி,
அடுத்த முறை டெல்லி வரும் போது கண்டிப்பா
அந்த ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்டுப் பாருங்க.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
ஆமாங்க.ராணி மாதிரி பணிவிடைகளுடன்
தான் சாப்பிட்டேன்.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
எனக்கு உச்சரிப்பு சரியா தெரியாததால, தாலிக்கு,
தாளி என டைப் செய்துட்டேன்.
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிங்க.இடுகையிலும் மாற்றிவிட்டேன்.
வருகைக்கு நன்றிங்க.

RVS சொன்னது…

சுருச்சிக்கு என்ன அர்த்தம்? நல்ல 'படைப்பு'. ;-))

ADHI VENKAT சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள். ருசியா இருந்ததா? டோக்ளா எனக்கு பிடித்தது. புளிப்பும் இனிப்புமாய் சூப்பராயிருக்கும்!

Jaleela Kamal சொன்னது…

மிக அருமை,. நான்கு தாளி சாப்பாட்டையும் ருசிக்கனும்.

Unknown சொன்னது…

வாங்க RVS,
சுருச்சின்னா நல்ல ருசியான, சுவையான ன்னு அர்த்தமாம்.
அதனால்தான் இந்த பெயரை வச்சிருக்காங்க போல.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆமாங்க.டோக்ளா பார்ப்பதற்கு கேக் மாதிரி இருக்கு.
ஆனா சுவை இனிப்பும் புளிப்பும் கலந்ததா அருமையா இருக்கு.

Unknown சொன்னது…

வாங்க ஜலீலா,
டெல்லிக்கு வந்து நான்கையும் சாப்பிட்டுப் பாருங்க.
எனக்கு ருசி பார்க்க இன்னும் ரெண்டு மீதம் இருக்கு.
அதையும் சாப்பிட்டு பார்க்கணும்.
வருகைக்கு நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails