சர்க்கஸ்

ஞாயிறு, ஜூலை 24, 2011

இந்தியன் சர்க்கஸ்









             சமீபத்தில் சர்க்கஸ் ஒன்றிற்கு சென்றிருந்தேன். மால்களும் சினிமாக்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சர்க்கஸ்
கலைஞர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. பார்வையாளர்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.
மொத்தமாக சர்க்கஸ் கலைஞர்கள் சுமார் நூறு பேராவது இருப்பர்.
அதில் பெண் கலைஞர்கள் மட்டுமே சுமார் இருபத்தைந்து பேர்
இருந்தனர்.  மேலும் யானைகள், ஒட்டகங்கள், நாய்கள்  போன்ற விலங்குகளும் இருந்தன.
             இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு,உடை மற்றும்
தங்குவதற்கான செலவுகளுக்கு கண்டிப்பாக வரும் வருமானம்
பற்றாது. கிழிந்த உடைகளுடன் அவர்களைப் பார்க்கும்போதே
கஷ்டமாக இருந்தது. அவர்கள் செய்யும் கஷ்டமான
சாகசங்களுக்கெல்லாம் சாப்பிடும் சாப்பாடு போதுமானதாக
இருக்காது. கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இருவரும்,
ஊஞ்சலில் தொங்கி சாகசங்களைக் காண்பிக்கும் ஆண்களும்
பெண்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மை
மகிழ்விக்கின்றனர்.
             முன்பெல்லாம் யானை,சிங்கம், நாய்களைப் பயன்படுத்தி
பல சாகசங்கள் செய்து காண்பிப்பர். ஆனால் இப்பொழுது
மிருகவதைத் தடுப்புச் சட்டத்திலிருந்து விலங்குகளை
சாகசங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டிருப்பதால், விலங்குகளைப்  பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது.
இதனால்தானோ என்னவோ , பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
           நமது நாட்டில் இந்தியன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ்
போன்ற சில சர்க்கஸ்களே தற்போது உள்ளன.  இவையும்
அழிந்துவிடாமல் நாம்  பாதுகாக்கவேண்டும்.
சர்க்கஸ்களுக்கும் சர்க்கஸ் கலைஞர்களுக்கும் வாழ்வளிக்க
வேண்டும்.

        


18 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நலிந்து வரும் சர்க்கஸ் கலைஞர்களுக்கு உதவ, அவர்கள் நடத்தும் சர்க்கஸ் காசு கொடுத்து பார்ப்பது நல்ல விஷயம். சிறு வயதில் விஜயவாடாவில் ஜெமினி சர்க்கஸ் பார்த்திருக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சர்க்கஸ் கலைஞர்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதே. உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்து காட்டும் சாகஸஙகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை தான்.
அரசாங்கமும் பொதுமக்களும் ஏதாவது ஆதரவு அளித்து இவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஜெய்லானி சொன்னது…

டீவியில் பொழுது போக்கவே நம்ம ஆட்களுக்கு நேரம் போத வில்லை. இதில் சர்கஸுக்கு நேரம் இருக்குமா? :-)

ராமலக்ஷ்மி சொன்னது…

உண்மைதான். நல்ல பகிர்வு ஜிஜி.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
சர்கஸ் கலைஞர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இன்னும் பாத்து வருடங்களில் இந்த தொழில் முடிவுக்கு வந்து விடும். கஷ்டம் தான்.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு. இந்த கலைஞர்கள் நலிந்து வருவது சங்கடமாக இருக்கிறது.

நான் சர்க்கஸுக்கு போனதேயில்லை.

L.S.Sir சொன்னது…

நேபாளத்து சிறு பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுவது நம் அரசாங்கத்தால் தடை செய்யப்படவேண்டும். அந்த பெண்களுக்கு நல்ல கல்வியும் வேலைவாய்ப்பும் தரப்படவேண்டும்

bandhu சொன்னது…

cirque du soleil (http://www.cirquedusoleil.com/en/welcome.aspx) கம்பனியை தவிர உலக அளவில் சர்கஸ் ஒரு தோல்வி பெற்ற வியாபாரமே. அதை தெரிந்து கொண்டு அதில் வேலை செய்பவர்கள் வேறு வேலை பார்த்துக்கொள்வது நல்லது.

மேலே குறிப்பிட்ட வலை தளத்தை பாருங்கள். மிரட்டியிருக்கிறார்கள்! உலகெங்கும் இந்த குழுவிற்கு மிகப்பெரிய வரவேற்பு. இவர்கள் சர்கசிலிருந்து சில விஷயங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு அதை சுற்றி கதை / கான்செப்ட் என்று மாற்றியிருக்கிறார்கள்.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
ஆமாங்க.சர்க்கஸ் போயி பார்த்துதான் நாம் அவங்களுக்கு உதவ முடியும்.சினிமாக்களுக்குப் போவது போல இதற்கும் சென்றால் அவர்களுக்கும் வாழ்வளித்தது போல இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
நீங்க சொல்வது போல அரசாங்கமும் மக்களும் இந்தக் கலைஞர்களுக்கு ஆதரவு அளித்தால் தான் இவற்றை அழியாமல் காக்க முடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ஜெய்லானி சார்,
இதற்கும் சிறிது நேரம் ஒதுக்கினால்தான் சர்க்கசையும் அழியாமல் காக்க முடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ஐயா,
பரிதாபமான வாழ்க்கைதாங்க சர்க்கஸ் கலைஞர்களுடையது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
டெல்லியில சர்க்கஸ் நடக்கும்போது வெங்கட் சாரை கூட்டிட்டு போகச் சொல்லுங்க.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க L.S.Sir ,
நேபாளத்து பெண்கள் மட்டுமல்ல. வடகிழக்குப் பிரதேசமான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து கூட பெண்களும் ஆண்களும் ஈடுபடுகின்றனர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க bandhu,
நீங்க குறிப்பிட்டிருக்கும் வலைத்தளத்தைப் பார்த்தேன்.
அருமை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ஜிஜி - நலிந்து வரும் தொழிலில் சர்க்கஸும் ஒன்று. நல்ல ஆய்வு - நல்வாழ்த்துகள் ஜிஜி - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

வாங்க சீனா,
வருகைக்கு நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails