நாகர்கோவில் - முட்டம் பீச்

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

          முட்டம் பீச் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது
சினிமாதான். இங்கே கடலோரக் கவிதைகள், அலைகள்
ஓய்வதில்லை போன்ற பல படங்கள் எடுத்திருக்காங்க.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில்
இதுவும் ஒன்று. இந்த பீச் நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ 
தூரத்தில் உள்ளது.  நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 
நிறைய பஸ்கள் அடிக்கடி இருக்கின்றன.








        
                  சொத்தவிளை பீச்சைப் போல இது குளிப்பதற்கு ஏற்ற
கடற்கரை இல்லை. இங்க அலையின் வேகம் அதிகமாக இருக்கு.
பாறைகள் அதிகமா இருக்குற இந்த  பீச்சுல, அலைகள் வேகமா
வந்து பாறைகளில் மோதறது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கு, பெரிய பெரிய அலைகளாக, ஆள் உயர  அலைகளாக
வருது. அலைகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமா வந்தது.
பார்ப்பதற்கே பயமா இருந்தது. அதையும் மீறி, தைரியமா கால்
நனைக்கப் போனா, என் கால் கொலுசை அலை எடுத்திட்டு
போயிடுச்சு. எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியலை.
குளிப்பதற்காக வந்து வாரம் ஒருத்தராவது, கடலில் மூழ்கி
இறந்துடராங்கன்னு அந்த ஊர்க்காரர் ஒருவர் எங்களை
எச்சரித்தார். அலைகளின் சீற்றத்தினால், கடலுக்குள் போகக்
கூடாது என்பதற்காக ஆங்காங்கு இரும்புக் கம்பியால் வேலிகள் போடப்பட்டிருக்கிறது. அந்த வலிமையான இரும்புக் கம்பிகள்
வளைந்தும், உடைந்தும் போயிருப்பதைப் பார்த்தாலே, அது
நமக்குப் புரியும்.


             
 
 
           இங்க ரொம்ப பழமையான கலங்கரைவிளக்கம் ஒன்று
இருக்கு. மேலும் கரையிலிருந்து பீச்சைப் பார்க்க, நிறைய
சிமென்ட் பெஞ்சுகள் அழகாக கட்டப்பட்டிருக்கின்றன. குடில்கள்
போல அமைத்து, அதுல வட்ட வடிவ பெஞ்சுகள்
கட்டியிருக்காங்க. இதனால பீச் அழகாகவும், சுத்தமாகவும்
இருக்கு. முட்டம் பீச்சுக்குப் போற வழியில் செம்மண் கரடு
ஒன்று இருக்கு. செக்கச்செவேல்னு பார்க்கவே அவ்வளவு
அழகாக இருக்கிற இங்கும் நிறைய சினிமா ஷூட்டிங்
எடுத்திருக்காங்க.

          முட்டத்திற்கு அடுத்தாற்போல , கடியாப்பட்டினம் என்ற
பீச் இருக்கு. அங்க, நாங்க முட்டத்திற்கு போனதற்கு சில நாட்கள்
முன்பு, ஒரு  வெளிநாட்டுக் கப்பல் பாறையில் மோதி உடைந்து, மூழ்கிவிட்டதாம். மூழ்கியதால் சேதம் எதுவும் இல்லை என
அங்கிருந்தவங்க சொன்னாங்க. நேரமில்லாததால போய்ப்பார்க்க
முடியலை. முட்டத்திலிருந்து பார்த்தால், உடைந்த கப்பலின்
மேல் பாகம் மட்டும் தெரிந்தது. அதை மட்டும் பார்த்துவிட்டு
வந்தோம்.




6 comments:

Chitra சொன்னது…

இந்த முறை, இந்தியா ட்ரிப் வந்து இருந்த பொழுது, சொத்தவிளை பீச் சென்று நல்லா என்ஜாய் செய்தோம். முட்டம் போகவும் ஆசை. நேரம் இல்லாததால் திரும்பி விட்டோம்.
Class Excursion க்காக முட்டம் பீச் ஏரியா இரண்டு மூன்று முறைகள் சென்றதுண்டு. நினைவலைகளை எழுப்பி விட்டமைக்கு நன்றிங்க.

குறையொன்றுமில்லை. சொன்னது…

படங்களும் விளக்கங்களும் நல்லா இருக்கு.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

முட்டம் பீச் இயற்கை எழில் கொஞ்சும் இடம்....

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கம்பிகளும் தாங்கமுடியாத அலையின் சீற்றத்தைப் பார்த்தா பயம்மாத்தான் இருக்கு.. இருந்தாலும் தூரமாநின்னு உங்களை மாதிரி ரசிச்சிட்டு வந்துடனும்

ADHI VENKAT சொன்னது…

அடடா! கொலுசு போயிடுச்சாங்க...
முட்டம் என்றதும் கடலோர கவிதைகள் படம் தான் ஞாபகத்துக்கு வருது.
நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முட்டம் கடற்கரை... கடலோரக் கவிதைகள் படத்தில் பார்த்த போதே அங்கு நேர செல்ல ஆசை வந்தது... ஆனால் இன்னும் நேரம் வாய்க்கவில்லை.. :)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails