தஞ்சைப் பெரியகோவில்

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

              தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில் கட்டிமுடித்து, 1000 வருஷம் ஆகிவிட்டது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.


               போன மாதம் கூட, 22.09.2010 முதல் 26.09.2010 வரை ஐந்து நாட்கள், " பெரியகோயில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா " தமிழக அரசால் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. ஐந்து நாட்கள் நிகழ்ச்சியின் நிறைவு நாள் அன்று, பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் 1000 பரதக் கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜராஜ சோழனால் கி.பி. 1009-1010 -ல் கட்டப்பட்ட இந்த பெரிய கோயில் எனப்படும் ' பெருவுடையார் கோவில்' -ன் கோபுரம் 200 அடி உயரம் உடையது. இதன் 60மீ உயர விமானம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியது.  இது பல்லவர்கால சிற்பக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 130000டன் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் உட்பிரகாரம் 500அடி நீளமும், 250அடி அகலமும் உடையது. இங்குள்ள நந்தி 25டன் எடையும், 12அடி உயரமும், 20அடி நீளமும் கொண்டது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தியாகும். இந்த நந்தி நாளுக்கு நாள், வளர்ந்துகொண்டே போவதாகவும், இதனால் அது இருக்கும் மண்டபம் இடிந்துவிடும் வாய்ப்பு உள்ளதால், நந்தியின் தலையில் ஆணி அடித்து அதன் வளர்ச்சியை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோல, இங்குள்ள கோபுரத்தின் நிழல், தரையில் விழாதவாறு கட்டப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதன் வீடியோ தொகுப்பு :


                                                                                                                (நன்றி: you tube)

இந்தக்கோயிலுக்கு போனபோது அங்கு சிறப்பு அனுமதி வாங்கி,
என் தம்பி கிளுக்கிய படங்கள்:




இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டுள்ள உட்புரக் கோபுரம்



கோபுரத்திலுள்ள தொப்பி அணிந்த வெளிநாட்டவரின் சிற்பம்





 இந்தப் படங்களுக்காக தொகுத்த சுருக்கமான பதிவு இது.







எந்திர(ன்)த் திருவிழா...

புதன், அக்டோபர் 06, 2010

              இது கண்டிப்பா எந்திரன் படத்தோட விமர்சனம் இல்லை. ஏன்னா நான் இன்னும் படம் பார்க்கலை. பயங்கர களேபரங்களோட ரிலீசாயிருக்கிற எந்திரன் படம், எப்படி இருந்துச்சுனு நம்ம ப்ளாக்கர்ஸ் எழுதியிருக்கிற விமர்சனங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு படிச்சேன். நெறைய பேர் எழுதியிருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா, அவங்க அவங்க பாணியில எழுதியிருக்காங்க.


              பாகீரதியில LK சார், சென்னைல அவர் பொண்ணோட பார்த்தத எழுதியிருக்காங்க. இதுதான் அவர் எழுதியிருக்கிற முதல் படவிமர்சனமாம். தலைவர் படத்த பார்த்துட்டு, சோகத்தோட அவர் திரும்பினதுக்கு காரணம், படம் பார்த்தவங்களுக்குத்தான் புரியுமாம். புரியாதவங்க படத்தப் பார்த்துத் தெரிஞ்சிக்கச் சொல்லி சஸ்பென்ஸ் வச்சிருக்காங்க.

               அமைதிச்சாரல் அக்கா, மும்பைல எந்திரன் படத்தை ' ரோபோ'வா ஹிந்தியில பார்த்தத அவங்க ஸ்டைல்ல எழுதியிருக்காங்க. கொடுத்தக்காசு பாட்டுக்கும், கிளைமாக்சுக்குமே சரியா இருக்கும். அதனால தமிழ்லயும் கண்டிப்பா பார்க்கப்
போறேன்னு சொல்லியிருக்காங்க.

               நம்ம கேபிள் சங்கர் சார், அவருக்கே உரிய சினிமா பாணியில, படத்தைப் பத்தி அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சு, " A FILM TO WATCH " ன்னு எழுதியிருக்கார்.

              அஹமத் இர்ஷத் அவங்க அலைவரிசையில, எந்திரன் காஸ்ட்லி பொம்மைனு சொல்றார்.

               உண்மைத்தமிழன், 'எந்திரன் ஒரு முன்னோட்டம்' னு படத்தைப் பத்தி ஏதோ எழுதியிருக்கார் போலனு பார்த்தா, படம் உருவாக காரணமானவங்க பேரையெல்லாம் போட்டு, ஒரு காமெடி பண்ணி, சூப்பரா எழுதியிருக்கார். அப்படி ஒரு விமர்சனத்தைப் படிச்சதில்லை. புது மாதிரியா இருந்துச்சு.

              என் வழியில வினோ அவர் ஒரு பத்திரிக்கையாளர்னு, " நிஜ மனிதன் தன்னைப் போன்ற இயந்திர மனிதனைத் தந்து, அதற்கு தன்னைப் போல யோசிக்கும் திறனையும் கொடுத்துவிட்டால்… அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற சுஜாதா – ஷங்கர் கற்பனையின் அழகிய செல்லுலாய்ட் வடிவமே ரோபோ எனும் எந்திரன் " அப்படின்னு சொல்லியிருக்கறது மூலமா நிரூபிச்சிருக்கார்.

              First Show-ல விநாயகாதாசன் இறுதிக்காட்சி மகுடத்தில் ஒரு மாணிக்கம்னு சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு சூப்பரா இருக்காம். அதே போல, படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமா வெளிவருவதற்கு ரஜினி, ஷங்கர் மற்றும் கலாநிதிமாறன் இந்த மூவேந்தர்கள்தான் காரணம்னு எழுதியிருக்காங்க.

             சைவக்கொத்துப் புரோட்டாவில் எந்திரன் சிட்டி ரோபோவை சூப்பர்மேன்
  போல ரசிச்சு, விமர்சிச்சு எழுதியிருக்காங்க.

             வெறும்பயவில படத்தோட கடைசி 45 நிமிஷத்தைக் கண்டிப்பா பார்க்கணும்னு சொல்லியிருக்காங்க. 150 கோடி ரூபாய் போட்டு எடுத்திருக்கிற இந்தப் படத்துக்கு 100 கோடி ரூபாய் கிளைமாக்ஸ் காட்சிக்கே செலவாயிருக்கும்னு எழுதியிருக்காங்க. இந்தப் படத்தை அவர் 18000 ரூபாய் செலவு பண்ணிப் பார்த்திருக்கார்ங்கறதுதான் இதுல ஹைலைட்டான விஷயம்.

               இவ்வளவுதான் என்னால படிக்க முடிஞ்சுது. மத்தவங்கள்லாம் மன்னிச்சுக்கோங்க. இந்த ப்ளாக்குகள்ல எல்லாம் நான் படிச்ச வரைக்கும், எல்லாருமே படத்தோட இறுதிக்காட்சியைத்தான்  ரொம்பப் பாராட்டியிருக்காங்க. இவ்வளவு செலவு பண்ணி படத்தை எடுத்ததுக்கு, அதற்கான பலன்  படத்துல இருக்குனு சொல்றாங்க. இவங்க எல்லாரும் சொல்லிருக்கிறத படிக்கும்போது சீக்கிரமா படத்தப் போய்ப் பார்க்கணும்னு தோணுது. கண்டிப்பா பார்க்கணும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்...

செவ்வாய், அக்டோபர் 05, 2010

             ஐந்து நாளா வீட்டுல இன்டர்நெட், ப்ராப்ளமா இருந்ததால , ப்ளாக்  எழுத முடியல. அதுக்குத்தான் இந்த தடங்கலுக்கு  (தடங்கலா, விடுதலையா?)  வருந்துகிறேங்கற தலைப்பு.



                 நல்லா ஒரு flow-வா போய்க்கிட்டிருந்த  ' ப்ளாக் ரைட்டிங்க்ல ',  சின்னத் தடங்கல் வந்துடுச்சு. (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ!!!). அதனால ப்ளாக் எழுதமுடியல; மத்த  ப்ளாக்குகளையும் படிக்க முடியல; பின்னூட்டம் போட முடியல (ஸ்..ஸ்..அப்பா! எத்தன முடியல?). நெறைய எழுதணும்னு நெனச்சிருந்தேன். அதுல முக்கியமானது, அயோத்தி தீர்ப்பும், எந்திர(ன்)த்திருவிழா  அதாவது எந்திரன் பட ரிலீசும். இதையெல்லாம் இந்த பாழாப்போன, இன்டர்நெட் ப்ராப்ளம் பாழாக்கிடுச்சு. சரி. எந்திரன் படம்தான் பார்க்க முடியல. எப்படியும் நம்ம ப்ளாகர்ஸ் நெறைய பேர் விமர்சனம் எழுதியிருப்பாங்க, அட்லீஸ்ட் அதப் படிச்சாவது தெரிஞ்சுக்கலாம்னு இருந்தேன். இனிமேல்தான் அதை எல்லாம் படிக்கணும். படம் வெளியாகி ஐந்து நாள் கழிச்சுதான் , படத்தப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டிஇருக்குது. திரு. ஜெய்லானி சொன்ன மாதிரி ரெண்டு நாளைக்கு ஒரு பதிவுன்னு எழுதிட்டு இருந்தேன். எப்போ இன்டர்நெட் ப்ராப்ளம் சரி ஆகும்னு தெரியாம இருந்துச்சு. கம்ப்ளைன்ட் பண்ணினாலும் பதில் இல்லை. ஒரு வழியா நேத்து நைட்தான் சரி பண்ணினாங்க.  நாளைக்கு இருந்துதான் எழுத ஸ்டார்ட் பண்ணனும்.

ரெடி...ஸ்டார்ட்..ஆக் ஷன்.
Related Posts with Thumbnails