காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா
உயிர்மை பதிப்பகம் வெளியீடு : 173
விலை - ரூ.130 /-
சரித்திர நாவல்.
முதல் பதிப்பு : டிசம்பர் 1995
இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2008
இந்தக் கதையை பெரும்பாலும் எல்லாரும்
படித்திருப்பார்கள். எனக்கு இப்பொழுதுதான் படிக்க
சந்தர்ப்பம் கிடைத்தது. சரித்திர நாவல்கள் எனில் எனக்குத்
தனி விருப்பம்தான். கதைகளில் வரும் சரித்திரக் காட்சிகளை
கற்பனை செய்துகொண்டே படிப்பது மிகவும் பிடிக்கும் . அந்த
வகையில் இந்தக் கதையும் கற்பனை செய்து படிப்பதற்கு
அருமையான தீனிதான்.
ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை
இது. சோழ நாட்டு வளங்களை, நேரில் பார்ப்பது போல,
வர்ணனை செய்திருக்கிறார் திரு.சுஜாதா அவர்கள். இந்த
நாவல் திரு. சுஜாதா அவர்களின் இரண்டாவது சரித்திர
நாவலாகும். இந்த நாவலை பெரும்பாலும் இலக்கணத்
தமிழில் எழுதியுள்ளார். இதைக் கதையின் கதாநாயகனான
வசந்தகுமாரன், யாப்பிலக்கணத்தில் பேசுவதிலிருந்து
அறியலாம். வசந்தகுமாரனின் துடுக்குத்தனமும்,
வீரமும் நாம் நேரில் காண்பது போலவே உள்ளது.
சரித்திர நாவல்களைப் படிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கு
கண்டிப்பாக இந்த நாவலும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.