அசோகா அல்வா

செவ்வாய், அக்டோபர் 25, 2011

நாளைக்கு தீபாவளி. எல்லாரும் அநேகமா புது ட்ரஸ், பட்டாசுகள் 
வாங்கி இருப்போம். இப்போது ஸ்வீட்ஸ் எல்லாம்
கடைகளிலேயே வாங்க ஆரம்பித்து விட்டோம். நேரமின்மையே 
இதற்கு காரணம். சிலர் மட்டும்தான் சாஸ்திரத்திற்காக வீட்டில்
செய்கின்றனர்.

அதுபோல நேரம் இல்லாமல் செய்யமுடியாதவர்களுக்கும், 
புதிதாக செய்ய நினைப்பவர்களுக்குமான ரொம்ப ஈசியான 
அல்வா இது.

பாசிப்பருப்பில் செய்யும் இந்த அல்வா, தஞ்சாவூர் மாவட்டத்தில் 
ரொம்ப பேமஸ். இது மிகவும் சத்தானதும் கூட. ஆனால் 
அசோகா அல்வா என ஏன் பெயர்வந்தது எனத் தெரியவில்லை.


(படம் கூகிளில் இருந்து எடுத்தது. நன்றி:கூகிள். கேமரா 
பழுதடைந்திருப்பதால், செய்யும் போது என்னால் படம்
எடுக்க முடியவில்லை.)

செய்யத் தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு- 1 கப்
கோதுமை மாவு - 2 ஸ்பூன்
கலர் - ஒரு சிட்டிகை 
சீனி - 1 கப்
நெய் - 1 கப்

முதலில் பாசிப் பருப்பை நன்கு குழைய வேக வைத்து,
அதை நன்கு மசித்துக் கொள்ளவும். கோதுமை மாவை
சிறிது நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்
சீனியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,
கொதிக்கவிடவும். சீனித் தண்ணீர் கொதித்து நுரையாக 
வரும்போது, மசித்த பருப்பையும், கோதுமை மாவையும் சிறிது 
நெய்விட்டு நன்கு கிளறவும்.இது போல சிறிது சிறிதாக நெய்யை
ஊற்றி கிளறவும். தேவையெனில், இப்போது கலர் சேர்த்துக் கொள்ளலாம்.பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு 
வரும்போது, சிறிது நெய்விட்டு இறக்கவும்.நெய்யில் வறுத்த
முந்திரி, கிஸ்மிஸ் பழங்களை மேலாகத் தூவவும்.
மிகவும் எளிமையாக செய்யக் கூடிய இந்த அல்வாவை உங்கள்
வீட்டிலும் இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

9 comments:

Jaleela Kamal சொன்னது…

வாவ் அசோகா ஹல்வா ரொம்ப சூப்பராக இருக்கு

ராமலக்ஷ்மி சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இனிப்பான குறிப்புக்கும் நன்றி!

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அசோகா ஹல்வா.... எனக்கு மிகவும் பிடித்தது....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

ஆமினா சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

மாய உலகம் சொன்னது…

அருமையான செய்முறை விளக்கம்... நன்றி

மாய உலகம் சொன்னது…

வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஜூப்பர் அல்வா..

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

pudugaithendral சொன்னது…

என்னோட ஃபேவரைட். அப்பாவுக்கு மீட்டிங்கில் சாப்பிட கிடைக்கும்பொழுதெல்லாம் தனியாக எடுத்துவைத்து கொண்டு வந்து தருவார். ரெசிப்பிக்கு நன்றி செஞ்சு பாத்திட வேண்டியதுதான்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails