இன்னிக்கு ரோஜாக்கள் தினம். அதனால எல்லாருக்கும் கலர்கலரா ரோஜாக்கள் கொடுக்கறேன்.
ரோஜானாலே எல்லாருக்கும் பிடிக்கும். ( மணிரத்னம் படத்தை சொல்லல! ). ரோஜாப்பூவைப் பிடிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க. நம்ம முன்னாள் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களுக்குக் கூட ரோஜான்னா அவ்வளவு இஷ்டமாம். அதனாலதான் அவருக்கு "ரோஜாவின் ராஜா" அப்படிங்கற பேரும் உண்டு. கலர்கலராப் பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைப் பார்க்கும்போதே, கண்களுக்குக் குளிர்ச்சியாகவும், மனசுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதனாலதான், வெற்றிபெற்றவங்களை பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்றவரை எல்லாத்துக்கும் ரோஜாப்பூங்கொத்து கொடுக்கறோம். கல்யாணம் போன்ற எந்த ஒரு
விழாவுக்கும் ' ரோஸ் பொக்கே' கொடுக்கறதுதான் இப்போ ஃபேஷன்.
இந்த ரோஜாக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஐரோப்பாவுல கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதுக்கப்புறம், 1798-ல் வடஅமெரிக்கவுல, ஜோஸ்ஃபின் அப்படிங்கறவங்க 250 வகையான ரோஜாப்பூக்களை அவங்க ரோஜாத்தோட்டத்தில வச்சிருந்தாங்களாம். ரோஜாக்கள் பல வடிவங்களிலயும் பல கலர்களிலயும் இருக்கு. இதுல, மஞ்சள் கலர் ரோஜா நட்பையும், வெள்ளை கலர் ரோஜா சமாதானத்தையும் குறிக்கிறது.
ஃப்ரான்ஸ் நாட்டோட தேசிய மலர் இந்த ரோஜா தான்.
உலகிலேயே நெதர்லாந்துதான் ரோஜா ஏற்றுமதியில் முனனனியில் இருக்கு. சின்ன, குட்டியான ரோஜாவுல இருந்து, பெரிய ரோஜா வரைப் பல வகைகள் இந்த உலகம் முழுக்க இருக்கு. மேலும், நம்ம நாட்டுல, காஷ்மீர் ரோஜா, ஊட்டி ரோஜா என பல வகைகள் இருக்கு. வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என பல கலர்களிலயும் நாம ரோஜாக்களைப் பார்த்திருப்போம். ஆனா கறுப்பு கலர் ரோஜாதான் ஊட்டி மலர்க்கண்காட்சியில் ஃபேமஸ்.
இதுபோல மலர்க்கண்காட்சிகளுக்கு, ரோஜாக்களினால்தான்
பெருமையே! கல்யாணம் போன்ற விழாக்களை, அலங்கரிப்பதிலயும் ரோஜாக்களின் பங்கு ரொம்ப முக்கியமானது. பரிசாகக் கொடுப்பதற்கு ரோஜாப் பூங்கொத்தையும் ஒற்றை ரோஜாவையும் தவிர சிறந்தது வேற இல்லை. அதனால இன்னிக்கு, இந்த ரோஜா தினத்தில், எல்லாரும் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ரோஜாக்களைப் பரிசாக கொடுத்து மகிழ்வோம்.
வில் ஹென்றியின் அதிர்ஷ்டம்
5 மணிநேரம் முன்பு
17 comments:
ஆஹா வித வித மான ரோஜா அருமை .எனக்கு ரோஜா ந்ன் ரொம்ப பிடிக்கும், எல்லா பெண்கலுக்கும் பிடிக்கும்) முன்பு டிரெஸ்க்கு மேட்சா ரோஜா வாங்கி வைப்பேன்.
இப்ப எங்கே இஙு துபாயில் பூ கிடைப்பதே அரிது.
தங்கள் வருகைக்கு நன்றி.
ஆமா. நீங்க சொல்றது நிஜம்தான்.. டெல்லில கூட ரோஜா கிடைத்தாலும் யார் இப்போ தலைல வச்சிக்கிறாங்க?அதெல்லாம் நம்ம ஊர் பக்கம்தாங்க..
ரோஜாக்கள் அருமையாக இருக்கின்றன.
//இந்த ரோஜாக்கள் 35 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஐரோப்பாவுல கண்டுபிடிக்கப்பட்டிருக்கு.//
நான் வாத்தியாரா இருந்து ரிடைர்டு ஆனவனுங்க. அந்த வாத்தியார் புத்தி போகமாட்டேங்குதுங்க. (பசங்க எழுதினதுல தப்புக் கண்டுபிடிக்குற புத்து)
35 தவறு, 350 என்று இருக்கவேண்டும்.
தங்கள் வருகைக்கு நன்றி ஐயா ..
//ரோஜாக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஐரோப்பாவுல கண்டுபிடிக்கப்பட்டிருக்கு.//
மில்லியன் அப்படிங்கறத விட்டுட்டேன்.மிகப் பெரிய பிழை ஆகிடுச்சு.
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா.
வித வித மான ரோஜாகள் அருமை .
அழகான ரோஜாக்கள். குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்திலும் பல வண்ணங்களில் ரோஜாக்கள் உண்டு. பகிர்வுக்கு நன்றி.
வெங்கட்
புது தில்லி
வாங்க தியாவின் பேனா.
தங்கள் வருகைக்கு நன்றி
தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
ஆமாம்.நானும் மொகல் கார்டனில் பார்த்திருக்கேன்.அவ்வளவு அழகு!!
மணக்கும் பதிவு அருமை.கருப்பு ரோஜா நான் அறிந்ததில்லை.
ரோஜாக்கள் பற்றிய நல்ல தகவல்கள்.....அருமை..!
தங்கள் வருகைக்கு நன்றி ஸாதிகா
தங்கள் வருகைக்கு நன்றி தேவா.
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html
//வார்த்தைச் சித்திரங்கள் -ஒரு வேளை டைரி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க போல வீட்டில ரெண்டு நாளைக்கு ஒரு இடுகைன்னு போட்டு தீத்துகிறாங்க கோவத்தை இந்த புது வரவு . வாழ்க வளமுடன்.//
புதியவளான என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ஜெய்லானி...
ரோஜாக்களுக்கென ஒரு தினமா? எனக்கு புதிய தகவல். படங்களும் நல்ல பகிர்வு.
தங்கள் வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
கருத்துரையிடுக