போன blog-ல் பெருகிவரும் அழகுநிலையங்களில் எத்தனை அங்கீகாரம் பெற்றவை, முறையான பயிற்சியோடு ஆரம்பிக்கப்பட்டவை எனத் தெரியவில்லை என்று எழுதியிருந்தேன். இப்படி முறையான பயிற்சி இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட அழகு நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். இதைப் பற்றிய செய்திகளை நாம் தினம்தினம் பத்திரிகைகளில் படித்துக்கொண்டிருக்கிறோம். ISRO- ல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் என் தோழிக்கு இதே போல ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. தோழி, அவங்க கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்பு ஒரு பிரபலமான பார்லருக்கு பேஷியல் செய்துகொள்ளப் போனாங்க. முடித்துவிட்டு வீட்டுக்குப்போன இரண்டு மணி நேரத்திலேயே முகமெல்லாம் சிவப்பு சிவப்பாய்ப் புள்ளிகள். கூடவே அரிப்பும்,எரிச்சலும் வேறு. ஆசை ஆசையாய் பேஷியல் செய்து கொண்ட அவங்களுக்கு பயங்கர ஷாக். இரண்டு நாளில் கல்யாணம் என்பதால் ரொம்ப அழுதுட்டாங்க. உடனே வீட்டில் இருந்தவர்களெல்லாம் திட்டி ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள். கடைசியில் டாக்டரிடம் காண்பித்து அலர்ஜிக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்ட பிறகு, முக எரிச்சல் மட்டும் நின்றது. பாவம்! கல்யாணத்தன்றும் அவங்க முகத்தில் சிவப்புப் புள்ளிகள் இருந்தன.ஒரு வாரம் கழித்துதான் அந்தப் புள்ளிகள் மறைந்தன. இது வாழ்க்கையில் மிக மிக மறக்க முடியாத சம்பவமாக அவங்களுக்கு ஆகிவிட்டது. அதற்குப்பிறகு அவங்க பார்லருக்குப் போவதற்கு ரொம்ப பயப்படுறாங்க.
மிகப் பிரபலமான பெரிய பார்லர்களே இப்படி என்றால் தெருவுக்கு இரண்டு, எனப் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் பார்லர்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அங்கு வருபவர்களுக்கு எல்லாம் அவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கிரீம்கள் மற்றும் மற்ற அழகு சாதனப் பொருட்களெல்லாம் ஒத்துக்கொள்கிறதா என்று ஸ்கின் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது இல்லை. மேலும் அவர்கள் பயன்படுத்தும் பிரஷ், டவல் இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதுமில்லை. இதனால் சரும நோய்களும்,அலர்ஜியும் உண்டாகிறது. இது தெரியாமல் பலர் இத்தகைய பார்லர்களுக்குச் சென்று பணத்தையும் செலவழித்து அவதியும் படுகின்றனர். விலை மலிவாக இருக்கிறதென்று இத்தகைய பார்லருக்கெல்லாம் போகக்கூடாது. ஒரு பார்லருக்குப் போனால் அங்கு அவர்கள் எந்த மாதிரியான பொருட்கள் உபயோகிக்கிறார்கள்; அவை நமக்கு ஒத்துக்கொள்ளுமா என்பதைத் தெரிந்து கொண்டே செல்ல வேண்டும்.கவனமாக இல்லை என்றால் ஆபத்து நமக்குத்தான். நான் அனுபவத்தில் இந்தக் கஷ்டத்தைப் பார்த்ததால் கண்டிப்பாக இந்த சம்பவத்தை எழுதவேண்டுமெனத் தோன்றியது.
4 comments:
ரொம்ப சரி
சமீப கோவா சுற்றுலாவில்
கவுன் போட்ட பாட்டிகளும்
அவர்தம் உதட்டுசாய ரசனையும்
மோசமான முக அலங்காரமும்
கவனம் களைத்தன
ஆகவே கோவா பாட்டிகளே
மோசமான முக அலங்காரம் உங்கள்
முகத்தை பாதிக்கிறதோ இல்லயோ
பார்ப்பவர் உள்ளத்தை பாதிக்கிற காரணத்தால்
இந்த கட்டுரையில் குறிப்பிட்டது போல்
நல்ல புயூட்டி பார்லர் செல்வீர்களாக
ரொம்ப சரி
பார்லர் எல்லாம் போவதில்லை.
கால் பெடிகியுர் மட்டும் , விட்டில் செய்து கொள்வது, முடியாத பட்சத்துக்குஎப்பவாவது ஒரு முறை போய் செய்து கொள்வது,அங்க சில பேருக்கு முடி லெவல் செய்யும் போது அதை அள்ளவே மாட்டார்கள்,. பார்கக்வே அருவெருப்பாக இருக்கும்.
அங்க அங்க தெருவுக்கு தெரு பார்லர் தான்/பார்த்து செல்வதே சரி.
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
கருத்துரையிடுக