சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனக்குப் பிடித்த சில விளம்பரங்கள்:
- Sleepwell மெத்தைக்கான விளம்பரம்:
இதில் இரண்டு, மூன்று வகையான விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். "தூக்கம் குறைவாக இருந்தால் நமக்குரியவை கூடத் தெரியாது; ஞாபகமறதி உண்டாகும். Sleepwell மெத்தையில் உறங்கினால் நன்கு தூக்கம் வரும். எனவே தவறுகள் நடக்காது" என்று ஒளிபரப்புகிறார்கள். இவை அனைத்துமே நகைச்சுவையாகவும் யோசிக்கும்படியாகவும் உள்ளன.
- Dairy Milk Chocolate விளம்பரம்:
ஒரு பரதநாட்டியக் குழுவிலுள்ள பெண்கள் மேடையில் ஆடுவதற்கு முன்பாக திரைமறைவில் சாக்லேட்டை ருசித்து சாப்பிடுவது மிக அருமையாக உள்ளது. இதைப்பார்த்ததும், உடனே சாக்லேட் சாப்பிடவேண்டும் என்ற ஆசை வந்துவிடும். பழைய Dairy Milk Chocolate விளம்பரங்கள் முதல் இப்பொழுது ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் வரை அனைத்துமே நன்கு ரசிக்கும்படியாக எடுத்துள்ளனர்.
- Kitkat Chocolate விளம்பரம்:
நண்பர்கள் இருவர் பார்க்கில் உட்கார்ந்திருக்கும்போது ஒருவர் Kitkat சாப்பிடுகிறார். அப்போது அவருக்கு மட்டும் அங்குள்ள மரத்திலிருந்து இரண்டு அணில்கள் இறங்கிவந்து டூயட் பாடுவது போலத் தெரிகிறது. இந்த விளம்பரம் மிக மிக அருமையாக உள்ளது. அனிமேஷனில் அணில்களின் டூயட் குழந்தைகளையும் கவரும்வண்ணம் உள்ளது.
இந்த விளம்பரங்கள் அனைத்தும் எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். இவற்றைப் பார்க்கும் பொழுதே மனதுக்கு சந்தோஷமாகவும், திரும்பத்திரும்பப் பார்க்கவும் தூண்டுகிறது. எனவே இவற்றின் வீடியோவை இணைத்துள்ளேன். பலர் இவ்விளம்பரங்களைப் பார்த்திருந்தாலும் பார்க்காதவர்கள் இதனைப் பார்க்கட்டும்.
4 comments:
விளம்பரங்களைப்பற்றி நல்லதொரு பகிர்வு..
வாழ்த்துகள்
தங்களது கருத்துக்கு மிக்க நன்றி
nalla alasal
எனக்கு பிடிக்காத விளம்பரம் ஷாருக் கான் பாபுவும் அப்பாவும் .....பற்பசை விளம்பரம்....சகிக்க முடியாத ஆட்டம்....
கருத்துரையிடுக