21-12-2012 இன்று உலகம் அழியப் போவதாக உலகமெல்லாம்
ஒரு பேச்சு. உண்மையில் இன்றைக்கு உலகம் அழியப்
போகிறதோ, என்னவோ தெரியலை. ஆனால் கிட்டத்தட்ட
ஒரு வருடத்திற்கு பிறகு, இன்றைக்கு ஒரு பதிவு எழுதலாம்னு
தோணுது .
எல்லாரும் மயன் காலண்டர் பற்றிப் பேசிக்கிட்டிருக்காங்க.
அதில் போட்டிருப்பது பற்றிய முழு விவரம் தெரியலை.
அப்படியே அழிஞ்சா, அழியறதுக்கு முன்னாடி இதைப் படிச்சு
முடிச்சிடுங்க.
உலகம் முழுவதும் அழியாம, ஒவ்வொரு பகுதியாக அழிந்து
கொண்டுதான் இருக்கிறது.சுனாமியாலும், நிலநடுக்கத்தாலும்
மேலும் பல இயற்கை சீற்றங்களாலும் அழிந்து கொண்டுதான்
இருக்கிறது. நம்முடைய அதீத அறிவியல் வளர்ச்சியால்
முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் புவிவெப்பமடைதல்
போன்ற இயற்கை அழிவுகளே அவற்றால் மிக அதிகம்.
காடுகளையும், மிக அரிதான காட்டு விலங்குகளையும்
அழிக்க முடிந்த நம்மால் கொசுக்களை அழிக்க முடியவில்லை.
அதனால் பெருகிவரும் நோய்களையும் கட்டுப்படுத்த
முடியவில்லை. தினமும் ஒரு புதிய நோய் உருவாகிக்
கொண்டுதான் இருக்கிறது.
அரசும், சமூக நல அமைப்புகளும் மரம் வளர்ப்பதைப் பற்றியும்
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும் பல நடவடிக்கைகளைக் கூறினாலும் அவற்றில் செயல் வடிவமாகுவது மிகச்
சிலவைதான். குறைப்பதற்குதான் முயற்சி எடுத்துக்
கொண்டிருக்கிறோம். ஒழிப்பதற்கு அல்ல.
இப்படி இயற்கை அழிவுகள் ஒருபுறம் இருந்தாலும் கொலை,
கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல் என தனி மனிதனால்
நடக்கும் அழிவுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான்
போகிறது.
இதைப் பற்றி ஒரு கார்ட்டூன் இன்றைய தினமணியில்
வெளியாகியுள்ளது.
நன்றி: தினமணி
உண்மையில் இந்தப் படத்தில் உள்ளது போல உலகத்தின்
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நாமே உலகத்தை
அழித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இதைப் பற்றி நாசாவும் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச்
செய்தி: