இந்தியன் சர்க்கஸ்
சமீபத்தில் சர்க்கஸ் ஒன்றிற்கு சென்றிருந்தேன். மால்களும் சினிமாக்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சர்க்கஸ்
கலைஞர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. பார்வையாளர்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.
மொத்தமாக சர்க்கஸ் கலைஞர்கள் சுமார் நூறு பேராவது இருப்பர்.
அதில் பெண் கலைஞர்கள் மட்டுமே சுமார் இருபத்தைந்து பேர்
இருந்தனர். மேலும் யானைகள், ஒட்டகங்கள், நாய்கள் போன்ற விலங்குகளும் இருந்தன.
இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு,உடை மற்றும்
தங்குவதற்கான செலவுகளுக்கு கண்டிப்பாக வரும் வருமானம்
பற்றாது. கிழிந்த உடைகளுடன் அவர்களைப் பார்க்கும்போதே
கஷ்டமாக இருந்தது. அவர்கள் செய்யும் கஷ்டமான
சாகசங்களுக்கெல்லாம் சாப்பிடும் சாப்பாடு போதுமானதாக
இருக்காது. கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இருவரும்,
ஊஞ்சலில் தொங்கி சாகசங்களைக் காண்பிக்கும் ஆண்களும்
பெண்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மை
மகிழ்விக்கின்றனர்.
முன்பெல்லாம் யானை,சிங்கம், நாய்களைப் பயன்படுத்தி
பல சாகசங்கள் செய்து காண்பிப்பர். ஆனால் இப்பொழுது
மிருகவதைத் தடுப்புச் சட்டத்திலிருந்து விலங்குகளை
சாகசங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டிருப்பதால், விலங்குகளைப் பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது.
இதனால்தானோ என்னவோ , பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
நமது நாட்டில் இந்தியன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ்
போன்ற சில சர்க்கஸ்களே தற்போது உள்ளன. இவையும்
அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்கவேண்டும்.
சர்க்கஸ்களுக்கும் சர்க்கஸ் கலைஞர்களுக்கும் வாழ்வளிக்க
வேண்டும்.