இறுதியாக கடந்த ஞாயிறன்று சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ஹிந்தியிலும் "ரோபோ" பட இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டார் திரு. அமிதாப்பச்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கிலும் "ரோபோ" இசை வெளியீட்டு விழா தெலுங்கு சூப்பர் ஸ்டார் திரு. சிரஞ்சீவி அவர்கள் இசைத்தட்டு வெளியிட மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழில் கேட்கவே வேண்டாம். கடந்த ஜூலை 31 - ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அதில் எண்ணற்றோர் கலந்து கொண்டனர். சன் டிவி திரு. கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில், திரு. ஷங்கர் டைரக்சனில், திரு. வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளில், நமது ஆஸ்கர் நாயகன் திரு. A.R.ரகுமான் இசையில் மிகுந்த எதிர்பார்ப்போடு "எந்திரன்" திரைப்படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. செப்டம்பரில் படம் வெளிவரப்போவதாகத் தெரிவித்துள்ளனர். ஆக எந்திரன் (ரோபோ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவரத் தயாராக உள்ளது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போலப் படம் இருக்குமா எனத் தெரியவில்லை. "சிவாஜி" பட ரெக்கார்டை முறியடிக்குமா எனவும் தெரியவில்லை. படம் வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
அதற்குள்ளாக இன்டர்நெட்டில் படத்தின் கதைப் பற்றி ஒவ்வொரு விதமாக ஏகப்பட்ட மெயில்கள் குவிந்தவண்ணம் உள்ளன. எல்லாப் பத்திரிக்கைகளிலும் இப்பொழுது முக்கியச் செய்தியே எந்திரன் படப் பாடல்களைப் பற்றித்தான். அதேபோல் "தேவதை" இதழிலும் 'தேவதை டாக்கீஸ்' பகுதியில் எந்திரன் படப் பாடல்களைப் பற்றி எஞ்சினியர்களின் டெக்னிக்கல் கண்ணோட்டத்தில் பிடித்த பாடல் வரிகளை விமர்சித்து எழுதச் சொல்லியிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய " அரிமா அரிமா" பாடலின்
"
அஃறினையின் அரசன் நான்;
காமுற்ற கணினி நான்;
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்;" வரிகள் இந்த இதழ் தேவதைப் பதிப்பில் வந்துள்ளது. அதைத் தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும் தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.