யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...

ஞாயிறு, ஜனவரி 30, 2011

        
              சின்ன வயதில் யானையைப் பிடிக்காதவங்க
இருக்கமாட்டாங்க. நான் சிறு வயதில் மிகவும் ரசித்த, மலைத்த,
பிரம்மாண்டமான மிருகம் அது. கோயிலில் பார்க்கும் போதும்,
தெருவில் காசு வாங்க வரும் போதும், அதனிடம் ஆசிர்வாதம்
வாங்கத் தவறுவதில்லை. ஆனால் அதன் மேல் ஏறுவதற்கு
பயம். இப்போதுகூட ஊரில், தெருவிற்கு யானை வரும்போது,
மணிச்சத்தம் கேட்டால் வெளியே வந்து பார்க்கத் தோணுகிறது. 
கோவிலில் பார்க்கும்போது கூட ஒரு நிமிடமாவது அதன்
அழகை, கம்பீரத்தை நின்று பார்த்துவிட்டுத்தான் செல்லத்
தோணும். இப்படி நமக்கெல்லாம் பிடித்த யானையைப் பற்றி
நான் சேகரித்த தகவல்கள் இவை.
               ஆசிய யானை என அன்பாக அழைக்கப்படும், இந்திய
யானைகளில் பல, தமிழக - கேரள எல்லையில் மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் வசிக்கின்றன. ஆப்ரிக்க யானைகளை
விட, உயரம் குறைவாகவும், காதுகள் சிறியதாகவும் இவை
இருக்கும். அதிகபட்சம் 6.6 அடி முதல் 11.8 அடி உயரம் வரை
வளரும். 3000 முதல் 5000 கிலோ வரை எடை இருக்கும். ஆண்
யானைக்கு மட்டுமே பெரிய தந்தங்கள் இருக்கும். பெண்
யானைக்கு வெளியே தெரியாத வகையில் சிறு தந்தம் இருக்கும்.
சில ஆண் யானைகளுக்கு தந்தம் இருக்காது, இவை ' மக்னா '
யானைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தோல் 3
முதல் 5 செ.மீ., வரை தடிப்பானவை. ஒரு நாளைக்கு 150 கிலோ
முதல் 170 கிலோ வரை உட்கொள்ளும்.                சீசனுக்கு ஏற்ப இடம் மாறும் இவை, தங்களுக்கு என
தனி பாதையை வைத்திருக்கும். இந்தப் பாதையை மனிதர்கள்
ஆக்கிரமிக்கும் போது தான், குடியிருப்புகளுக்குள் யானைகள் புக
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கூட்டம் கூட்டமாக வாழும்
தன்மையுடைய யானைகளுக்கு, மூத்த ஆண்யானை தலைமை 
ஏற்று நடத்திச் செல்லும். கெல்லும் பாதையை நினைவு வைத்துக்
கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைமை யானைக்கு உண்டு.
நன்கு வளர்ந்த யானைக்கு மனிதர்களைத் தவிர, வேறு எதிரிகள்
கிடையாது. குட்டி யானைகளைத்தான் புலி வேட்டையாடும்.
காட்டில் அதிகபட்சம் 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
யானைகள், வளர்க்கப்படும்போது, 80 ஆண்டுகள் வரை
உயிர்வாழும். ஒருநாளைக்கு 80 முதல் 200 லிட்டர் தண்ணீர்
இவற்றுக்குத் தேவை. இதில் பெரும்பாலனதை குளிக்கப்
பயன்படுத்தும்.


            ' இன்ஃப்ரா சவுண்ட் ' மூலம் தங்களுக்குள் யானைகள்
பேசிக்கொள்ளும். இந்திய ஆராய்ச்சியாளர் எம்.கிருஷ்ணன்
என்பவர்தான் இதை முதலில் கண்டுபிடித்தார். பெண் யானை,
9 முதல் 15 ஆண்டுகளுக்குள் பருவத்தை எட்டும். 18 முதல் 22
மாதங்கள், இதற்கு கர்ப்பகாலம். 19 மாதங்களிலேயே, தாய்
வயிற்றில் குட்டி, முழு வளர்ச்சியை எட்டிவிடும். இருப்பினும்,
அதன்பிறகும் சில மாதங்கள் கழித்துதான், குட்டியை தாய் ஈனும்.
இது ஒரு இயற்கை விநோதம். இதற்குக் காரணம், ஈன்ற உடனே,
எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்கும் உயரத்தை குட்டி எட்ட
வேண்டும் என்பதற்காக.


             பிறந்த உடன், யானைக்குட்டி  100 கிலோ எடை
இருக்கும். ஒருமுறைக்கு ஒன்று அல்லது அரிதாக இரண்டு
குட்டிகளைத் தாய் ஈனும். குட்டி ஓரளவு பெரிதாகும் வரை தாய்
மீண்டும் கருத்தரிக்காது. இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை
ஆகுமாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் யானைக்கு
' ஹார்மோன் ' அதிகம் சுரக்கும் போது, ' மதம் ' பிடிக்கிறது.
ஜோடி கிடைக்காவிட்டால், மூர்க்கத்தனமாக மற்ற
யானைகளைத் தாக்கும். சில நேரங்களில், இதற்கு பெண்
யானைகள் பலியாவது உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை தான்
இது நிகழும்.

             நாமெல்லாம் ஊர்களில், கோவில்களில், தெருக்களில்
பார்த்த யானையை, இப்போதுள்ள சந்ததியினரால் வெறும்
புத்தகங்களில் படமாகவும், டிவியிலும் மிருகக்காட்சி
சாலையிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. சிறுவயதில்
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த, யானை இனம் கொஞ்ச
கொஞ்சமாக அழிந்து வருவது மிகுந்த வேதனைக்கு உரிய
விஷயம்.

23 comments:

வெறும்பய சொன்னது…

அறியாத பகலா தகவல்கள்.. நல்ல பகிர்வு..

இப்போது சொல்லப்போனால் யானைகளும் அழிந்து வரும் விலங்காக தான் இருக்கிறது.. சிறு பிராயத்தில் ஊரில் திருவிழாக்களில் 10 க்கும் மேற்ப்பட்ட யானைகளை கொண்டுவருவார்கள் இன்று அது வெகுவாக குறைந்துள்ளது.. இன்னும் கொசம காலம் போனால் காட்டுவிலங்குகளை கார்டூனிலும், டிஸ்கவரி சேனலிலும் தான் குழந்தைகளுக்கு காட்ட முடியும்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு சகோ. "யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்" என்றுச் சொல்லி சொல்லியே அதை அழித்துக் கொண்டு இருக்கிறோம். எல்லோருக்குமே பிடிக்கும் ஒரு விளங்கு. பகிர்வுக்கு நன்றி.

எல் கே சொன்னது…

யானை சின்ன குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரியவங்களுக்கும் பிடிக்கும். பல நல்ல தகவல்கள். யானை மட்டுமா இன்னும் பல விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன

ஜிஜி சொன்னது…

வாங்க வெறும்பய ,
ஆமாங்க.நீங்க சொல்ற மாதிரி, அழிந்து வரும் யானைகளை புத்தகங்களில் படமாகவும், டிவியிலும் மிருகக்காட்சி
சாலையிலும் மட்டுமே தான் குழந்தைகளுக்கு காட்ட முடியும்..
வருகைக்கு நன்றிங்க.

கனாக்காதலன் சொன்னது…

நாம் அறிந்த ஒரு மிருகத்தைப் பற்றி நாம் அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஜிஜி.

கோவை2தில்லி சொன்னது…

நல்ல பகிர்வு. சிறு வயதில் வீட்டுக்கருகில் யானை வரும். அப்பொழுது யானையின் மேல் சவாரி செய்திருக்கிறேன். அதன் பிறகு பயம் ஆசிர்வாதம் வாங்க கூட வரமாட்டேன். இருக்கின்ற உயிரினங்களிலேயே யானையின் பிரசவமே மிகவும் கஷ்டமானது. ஏதோ ஒரு புத்தகத்தில் யானையின் பிரசவத்தை ஓவியமாக வரைந்திருந்தினர். இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அதே போல் யானை தாவரங்களையும், மூலிகைகளையும் சாப்பிடுவதால் யானையின் சாணத்தை மிதித்தால் காலில் பித்தவெடிப்பு வராது என்பார்கள்.

ஜெய்லானி சொன்னது…

நான் யானையை இந்த தெருவில் பார்த்தால் போதும் பிடிகிற ஓட்டம் அடுத்த தெருவில் போய்தான் நிற்க்கும் .அவ்வளவு பயம் :-)

stella சொன்னது…

super information nice

ஜிஜி சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ் ,
ஆமாங்க.யானை எல்லோருக்குமே பிடிக்கும் ஒரு 'விலங்கு'.
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க எல் கே ,
//யானை மட்டுமா இன்னும் பல விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன //
கண்டிப்பாக அவை அழியாமல் காப்பது நமது கடமை.

வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க கனாக்காதலன்,
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
வருகைக்கும் தகவலைப் பகிர்ந்ததற்கும் ரொம்ப நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க ஜெய்லானி,
இப்பவும் யானையைப் பார்த்தா பயப்படுவீங்களா?
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

@ ஸ்டெல்லா ,
ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்கீங்க.
வருகைக்கு நன்றி.

Jaleela Kamal சொன்னது…

யானை பற்றின விபரம், அருமை.

( என் பக்கம் வருகைக்கு மிக்க நன்றி. மேத்தி கீரையில் மேத்தி சிக்கன், ஆலு மேத்தி , மேத்தி பரோட்டா, கீமா மேத்தி கடலை பருப்பு கூட்டு ஆகையவை செய்யலாம்)

அமைதிச்சாரல் சொன்னது…

யானை எனக்கும் பிடிக்கும். ஆனா, தள்ளி நின்னு ரசிப்பேன் :-)))

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

மதம் பிடித்த யானைகளை காட்டி காட்டியே நியூஸ்க்காரங்க இப்பல்லாம் திகிலா இருக்குங்க.. தூரமா இருந்து பார்க்க தான் முடியுது.. முன்ன மாதிரி காசு குடுக்கல்லாம் பக்கம் போக தைரியமே வரதில்ல..

Jaleela Kamal சொன்னது…

http://samaiyalattakaasam.blogspot.com/2009/09/blog-post_28.html
methi chappaththi

ஜிஜி சொன்னது…

வாங்க ஜலீலா ,
வருகைக்கு நன்றிங்க.
குறிப்புகளுக்கும் நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க அமைதிச்சாரல்,
//யானை எனக்கும் பிடிக்கும். ஆனா, தள்ளி நின்னு ரசிப்பேன் :-))) //

ஏன் உங்களுக்கு யானையைப் பார்த்தா பயமா
இருக்குமா ?வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி ,
ஆமாங்க. நியூஸ் சேனல்களில் எல்லாம் இப்படி காமிச்சுதான் பயமுறுத்தறாங்க.
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

@ஜலீலா ,
//
http://samaiyalattakaasam.blogspot.com/2009/09/blog-post_28.html
methi chappaththi //

மேத்தி சப்பாத்தி பார்த்தேன். செஞ்சு பாக்கறேன்.ரொம்ப
நன்றிங்க.

ராமலக்ஷ்மி சொன்னது…

சின்ன வயதில் வீட்டில் மாடுகள், நாய், குருவி கூடுகட்ட பலகணி அமைத்து குருவிகள் வளர்த்தோம். அப்போது வெளிவந்த ‘நல்ல நேரம்’ படம் பார்த்து விட்டு யானைக்குட்டி வளர்க்கவேண்டும் எனக் கேட்டிருக்கிறேன்:)! நல்ல பதிவு.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails