மகளிர் தினம்...

செவ்வாய், மார்ச் 08, 2011

     

      இன்று மகளிர் தினம். “மங்கையராய்ப் பிறப்பதற்கே 
நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற 
பாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில் 
இன்றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன்னேறி, 
மங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள்.

      ஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும் 
பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் 
இருக்கிறது. இன்னமும், பெண்குழந்தைகளைக் கொல்லும் 
அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

             21 ஆம் நூற்றாண்டு, பெண்சுதந்திரம், பெண்களுக்கு 
இடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக் 
கொண்டிருந்தாலும் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் 
கூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர்.

   என்னுடன் ஸ்கூலில் படித்த எத்தனையோ மாணவிகள்,
நல்ல மார்க் எடுத்தும், தங்களுக்கு வசதி இருந்தும் அவங்க 
அப்பா சொன்னாங்க, அண்ணன் சொன்னாங்கன்னு அவங்களுக்கு விருப்பப்பட்டதைப் படிக்காமல், தங்கள் குடும்பத்தின் விருப்பத்திற்காக, அவர்களுக்குப் பிடித்ததைப் படித்தார்கள். சிலர் 12ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் படிக்க வசதி இல்லாமல் இல்லை. ஏழை மாணவர்கள் என்றால் நம்மாலான உதவி செய்து படிக்க வைக்கலாம். இவர்கள் எல்லாம் இருந்தும் படிக்க வைக்கப்படவில்லை. சிலர் நல்ல திறமை இருந்தும் பன்னிரண்டாம் வகுப்பில் ஒழுங்காக படிப்பது இல்லை. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் என் ஒழுங்காக படிப்பதில்லை எனக் கேட்டால், "எப்படியும் எங்க வீட்டுல மேல படிக்க வைக்கப் போறது இல்லை. அதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கணும்?"னு சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

      என்னுடைய தோழி ஒருத்தி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியிலேயே முதலாவதாக வந்தாள். அவளது அப்பா மிலிட்டரியில் இருந்தார். அம்மா ஸ்கூல் டீச்சர். அண்ணன் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தான். அவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவள் பிஎஸ்சி கணிதம் படிக்க வைக்கப்பட்டாள். அவள் அம்மாவிடம் அவளை இன்ஜினியரிங் படிக்க வைக்கலாமே என நான் கேட்டதற்கு, “நாலு வருஷம் அதுக்கு செலவழிக்கிற காசுக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம். கல்யாணப் பத்திரிக்கையில போடுறதுக்கு எங்களுக்குத் தேவை ஒரு டிகிரி. அதுக்குத்தான் படிக்க வைக்கிறோம். அவள நாங்க வேலைக்கெல்லாம் அனுப்பப் போறது இல்லை. அவள நாங்க படிக்க வைக்காம இல்லியே? படிக்க வைக்கிறோமே? என என்னிடம் திருப்பிக் கேட்டார். ஒரு டீச்சருக்கு இதற்குமேல் நான் என்ன சொல்வது என வந்துவிட்டேன்.

      இன்று அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இன்றும் அவள், “நானும் இன்ஜினியரிங் படிச்சிருந்தா, ஏதாவது பெரிய கம்பனியில வேலை பார்த்திருப்பேன். எங்க அப்பாவும் அண்ணனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணிட்டாங்கன்னு சொல்லி ஆதங்கப்படுகிறாள். 

     இது ஒரு உதாரணம் தான். இதுபோல எத்தனையோ சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்கத்தாலும், பாலியல் தொல்லைகளாலும் எவ்வளவோ திறமைகள் இருந்தும் பெண்கள் பலர் முன்னேறாமல் இருக்கின்றனர்.

     அதுபோல, கணவன் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல், குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு, தானும் முன்னேற பாடுபடும் பெண்கள் இன்று எத்தனை பேர்?அவர்கள் படும் துன்பங்கள்தான் எத்தனை? எத்தனை? கணவன் வெளிநாட்டில் இருந்தாலோ, அல்லது கணவன் இறந்துவிட்டாலோ ஒரு பெண்ணால் இன்று தனியாக வாழும் சூழல் இல்லை. அவளுக்கு மனத்தைரியம் இருந்தாலும் சமூகம் அவளை வேறு ஒரு பார்வையில்தான் பார்க்கிறது. 

      மகளிர்தினம் வருடம்தோறும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? இன்று நமது முதல் குடிமகள் ஒரு பெண். அந்த அளவுக்கு பல துறைகளில் முன்னேறினாலும், மறுபுறம் பெண்களுக்கு அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை முற்றிலும் களையப்படும் தினம்தான் உண்மையில் மகளிருக்கான தினம். அந்த தினத்திற்காகத்தான் ஒவ்வொரு பெண்ணும் காத்துக்கொண்டிருக்கிறாள்.
.




19 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

//கல்யாணப் பத்திரிக்கையில போடுறதுக்கு எங்களுக்குத் தேவை ஒரு டிகிரி. அதுக்குத்தான் படிக்க வைக்கிறோம்//நிறைய இடங்களில் கேட்ட அதே வசனம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சரியான கருத்து சொல்லி இருக்கீங்க ஜிஜி. இன்னும் நிறைய மாற்றங்கள் வரவேண்டும்! பார்க்கலாம்!

Chitra சொன்னது…

இன்று நமது முதல் குடிமகள் ஒரு பெண். அந்த அளவுக்கு பல துறைகளில் முன்னேறினாலும், மறுபுறம் பெண்களுக்கு அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை முற்றிலும் களையப்படும் தினம்தான் உண்மையில் மகளிருக்கான தினம். அந்த தினத்திற்காகத்தான் ஒவ்வொரு பெண்ணும் காத்துக்கொண்டிருக்கிறாள்.

...well said!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//பல துறைகளில் முன்னேறினாலும், மறுபுறம் பெண்களுக்கு அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை முற்றிலும் களையப்படும் தினம்தான் உண்மையில் மகளிருக்கான தினம்//

உண்மையை சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

மகளிர் தினத்திற்குரிய கருத்துக்கள் ஏராளம்
வாழ்த்துகள் தாராளம்!

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வுங்க. அந்த தினத்துக்காக காத்திருப்போம்.

ஜெய்லானி சொன்னது…

மகளிர் தின வாழத்துக்கள் :-)

சிவகுமாரன் சொன்னது…

காத்துக் கொண்டிருந்தால் போதுமா சகோதரி?
ஆக்க பூர்வமாய் செய்ய வேண்டியது என்னவென்று யோசிக்க வேண்டும்..
தோள் கொடுக்க காத்திருக்கிறோம்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//பல துறைகளில் முன்னேறினாலும், மறுபுறம் பெண்களுக்கு அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை முற்றிலும் களையப்படும் தினம்தான் உண்மையில் மகளிருக்கான தினம். அந்த தினத்திற்காகத்தான் ஒவ்வொரு பெண்ணும் காத்துக்கொண்டிருக்கிறாள்.//

நல்லதொரு பதிவைத் தந்து அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

என் எலிஸபத் டவர்ஸ் கதையில் ஏதோவொரு பகுதிக்குத் தாங்கள் பின்னூட்டம் அளித்துள்ளதை நான் இன்று 13.03.11 தான் பார்த்தேன். மிக்க நன்றி.

அடிக்கடி என் வலைப்பூவுக்கு வருகை தாருங்கள்.
இப்போது கூட 11.03.11 முதல் ”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ புதிய கட்சி: மூ பொ போ மு க உதயம் என்னும் நகைச்சுவைத் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

அவ்சியம் வாங்க! சிரித்து மகிழலாம்.

Unknown சொன்னது…

வாங்க கனாக்காதலன்,
நிறைய வீடுகளில் இந்த வசனத்தைக் கேட்டாலும், இதில் இன்னும் மாற்றம் ஏதும் இல்லை.
தங்கள் வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட்,
ஆமாம்.மாற்றங்கள் நிறைய வர வேண்டும்.அதற்கு நாமும் முயற்சி பண்ண வேண்டும்.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க அமைதிச்சாரல்,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க "குறட்டை" புலி,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி ,
அந்த நாளுக்காக கண்டிப்பாக காத்திருப்போம்.
அது வெகுதூரத்தில் இல்லை.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ஜெய்லானி ,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.
அடிக்கடி வாங்க.

Unknown சொன்னது…

வாங்க சிவகுமாரன் ,
// தோள் கொடுக்க காத்திருக்கிறோம். //
இந்த வாக்கியமே மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
கண்டிப்பாக என்னால் இயன்றதை செய்துகொண்டிருக்கிறேன்.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வை.கோபாலகிருஷ்ணன்,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
சமீபத்தில் தான் தங்கள் வலைப்பூவைப் படிக்க நேர்ந்தது ஐயா .
தங்களது எழுத்துக்கள் மிகவும் ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையாகவும் உள்ளன.அவசியம் தங்கள் வலைப்பூவைப் படிக்கிறேன்.நன்றி.

விச்சு சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அந்தக்காலத்தினைவிட இப்பொது எல்லாத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். துணிச்சலாகப் போராடுகின்றனர். இதுக்கே ஆண்கள் சமுதாயம் அரண்டு போயுள்ளது. இனி ஆண் உரிமைக்குப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails