டெல்லியின் ஆம்பியன்ஸ் மால் (Ambience Mall)

திங்கள், மே 23, 2011

              கடந்த சில நாட்களாக டெல்லியின் வெயில் கொஞ்சம்
குறைந்து, மாலையில் குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் 
பெய்கிறது. அதனால் கிளைமேட் சூப்பராக இருக்கிறது. 
நேற்றும் இன்றும் காலையிலேயே வானம் மேக மூட்டத்துடன் 
இருந்தது. குளிர்ந்த காற்றுடன், வீட்டு பால்கனியில் 
நின்று வேடிக்கை பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாக இருந்தது.
 
            
             எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் வசந்த்குன்ச் என்கிற 
ஏரியாவில் புதிதாக ஒரு மால் கட்டியிருக்கிறார்கள். நேற்று 
மாலை எனது பையனுக்காக அந்த மாலுக்குப் போனோம். அந்த 
ஏரியாவில் பக்கத்து பக்கத்தில் மூன்று மால்கள் இருக்கின்றன.
நாங்கள் போனது ஆம்பியன்ஸ் மால் (Ambience Mall). இதே 
போல ஆம்பியன்ஸ் மால் குர்கானிலும் ஒன்று இருக்கிறது.
அதைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன். நேற்று,
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயங்கரக் கூட்டம். 
டெல்லியில் பீச் எதுவும் இல்லாததால் , பெரும்பாலான 
மக்களுக்கு பொழுதுபோக்கும் இடம் இப்படிப்பட்ட மால்கள் 
தான். எதுவும் வாங்குகிறார்களோ இல்லையோ, 
மால்களுக்குள் நுழைந்து விட்டால், ஓசியாக ஏசியில்  
வெயிலை நன்கு சமாளிக்கலாம். அதனால் நேற்றும், நாங்கள்
சென்ற ஆம்பியன்ஸ் மால் கார்களாலும், மக்களாலும் 
நிரம்பியிருந்தது.





  
          இந்த மால் இப்போதுதான் கட்டப் பட்டிருப்பதால், 
மேல்தளங்களில் எல்லாம் இன்னும் வேலை நடந்து 
கொண்டிருக்கிறது. கடைகள் இன்னும் மேல்தளங்களில் 
எல்லாம் வரவில்லை.   Shoppers Stop, Life Style, Pantaloons, 
BigBazaar போன்ற கடைகளும் MC Donald, Haldirams போன்ற 
உணவகங்களும் அங்குள்ள கடைகளில் குறிப்பிடத்தக்கவை. 
மேலும் அங்கு "FUN WORLD" என்றொரு இடம் இருக்கிறது. 
இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 
விளையாடுவதற்கான விளையாட்டுக்கள் பல உள்ளன. 
அதனால் கூட்டம் நிரம்பி வழிகிறது இங்கு. இப்போது சம்மர் 
லீவு வேறா, கேட்கவே வேண்டாம். பெற்றோர் காசு 
கரியாகிறது. பெரும்பாலும் வீடியோ கேம்ஸ் தான் 
இருக்கிறது. என் பையன் போன்ற சின்னக்குழந்தைகளுக்கு 
என எதுவும் விளையாட்டு இருக்கிறதா என்று பார்த்தோம். 
அவை கம்மியாக தான் உள்ளன. கார், சறுக்கு போன்றவை
மட்டும்தான் இருந்தது. ரோலர் கோஸ்டர்,டாஷ் கார் 
தவிர்த்து மற்றவை எல்லாம் வீடியோ கேம்ஸ் தான். பைக் 
ரேஸ்,கார் ரேஸ், ஷூட்டிங் கேம் எனப் பல இருந்தன. 
பெரியவர்களும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

              இங்கு முதலிலேயே பணம் கட்டவேண்டும். மினிமம் 
அமவுண்ட் 300 ரூபாய். நாம் கட்டும் பணத்திற்கு ஏற்ப 
ஒரு கார்டு தருகிறார்கள். அந்த கார்டை வைத்து, நாம் 
ஒவ்வொரு விளையாட்டாக தேர்ந்தெடுத்து விளையாட 
வேண்டும். உதாரணத்திற்கு ரோலர் கோஸ்டரில் செல்ல 
வேண்டும் என்றால், அங்கு கார்டை ஸ்கிராட்ச் செய்ய 
வேண்டும். ரோலர் கோஸ்டரில் செல்ல ஒருவருக்கு 120 
ரூபாய். நாம் அங்கு கார்டை ஸ்கிராட்ச் செய்தால் 
நம்முடைய கார்டில் இருந்து 120 ரூபாய் சென்று விடும். 
இப்படியாக கரைகிறது பணம். வீடியோ கேம்ஸ் என்றால்
விளையாடி முடிக்கும் போது, டிக்கெட்டுகள் கிடைக்கும். 
அதை சேர்த்து வைத்து கடைசியில் கொடுத்தால், பரிசுகள்
கொடுக்கிறார்கள்.  1000 டிக்கட்டுகள் என்றால் ஒரு சிறிய 
டெடி பியரும், 3000 டிக்கெட்டுகளுக்கு ஒரு ஸ்கூல் பேக்கும் 
தருகிறார்கள்.  ஆனால் இத்தனை டிக்கட்டுகள் கிடைக்க நாம்
பல முறை விளையாட வேண்டும். அதற்கு குறைந்தது 
மூவாயிரம் ரூபாய்க்காவது கார்டு வாங்க வேண்டும். இதுவும்
சூதாட்டம் போலத்தான் இருக்கிறது. ஒருமுறை நுழைந்து 
விட்டால் வெளியே வர மனமே இல்லை. நமக்கே இப்படி 
இருந்தால், பாவம் குழந்தைகள். அவர்களைச் சொல்லி என்ன
செய்ய?

15 comments:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்லா அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.
மால்களில் மறைமுகமான கோல்மால் தான்
இந்த குழந்தைகளுக்கான சூதாட்ட ஸ்க்ராட்ச் கார்டுகள்.

Chitra சொன்னது…

1000 டிக்கட்டுகள் என்றால் ஒரு சிறிய
டெடி பியரும், 3000 டிக்கெட்டுகளுக்கு ஒரு ஸ்கூல் பேக்கும்
தருகிறார்கள். ஆனால் இத்தனை டிக்கட்டுகள் கிடைக்க நாம்
பல முறை விளையாட வேண்டும். அதற்கு குறைந்தது
மூவாயிரம் ரூபாய்க்காவது கார்டு வாங்க வேண்டும். இதுவும்
சூதாட்டம் போலத்தான் இருக்கிறது.


....... விளையாட்டு ஆர்வத்தில், பணம் செலவழிப்பதை உணரச் செய்யாமல் இருப்பதற்கு தான் இந்த கார்டு முறை. :-)))))))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த மால் கலாச்சாரம் தில்லி முழுவதும் பரவிக் கிடக்கிறது சகோ. விதவிதமான பெயர்களில் மால்கள் தான் இங்கே. இன்னும் பல கட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறது…

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ஐயா,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
ஆமாங்க.இப்போது எல்லா நகரங்களிலும் இந்த மால்களின் ஆதிக்கம் தான். வருகைக்கு நன்றிங்க.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு. மால்கள் என்றாலே பணத்தை கரைக்கும் இடங்கள் என்றாகி விட்டது. தேவையோ இல்லையோ பார்ப்பவற்றை வாங்குவதும், செலவழிப்பதும் இப்போது பேஷனாகி விட்டது.

Yaathoramani.blogspot.com சொன்னது…

பொழுதுபோக்கு என ஆரம்பித்து
பின் பழக்கம் என மாறி கொஞ்சம் கொஞ்சமாக
இதுதான் நாகரீகம் என அதற்கு அடிமையாகி
பின் அதற்கும் சேர்த்து சம்பாதிக்கவேண்டும்
என டென்சனாகி...
நம்மை அவர்கள் எதிர்பார்கிறார் போல
மாற்றிவிடுகிறார்கள்
நாமும் மாறிவிடுகிறோம்
இதுதான் நிஜமென நினைக்கிறேன்
சிந்தனையை தூண்டிச்செல்லும் பதிவு

Jaleela Kamal சொன்னது…

இப்படி ஓசியில ஏசி காத்து வாங்கினாலும், அதுக்கெல்லாம் சேர்த்து
டபுள் மடங்க நம்மை செலவு செய்ய வைத்துடுவாங்க

Jaleela Kamal சொன்னது…

இப்படி நீங்க பதிவு போடுவதால் டெல்லி பற்றி அங்கு இருக்கும் மால்கள் பற்றியும் தெரிந்து கொள்ள் முடிகிறது

Unknown சொன்னது…

வாங்க ரமணி சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ஜலீலா,
நாம எதுவும் அங்க வாங்காதவரைக்கும் நமக்கு நல்லது.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
ஆமாங்க.நமது கண்களைக் கவரும் வண்ணம் தான் அவர்களது விற்பனையும் உள்ளது.
வருகைக்கு நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails