வறுமையால் படிப்பைத் தொடர முடியாமல் கஷ்டப்படும் மாணவி

புதன், ஜூன் 01, 2011


              இந்தக் கட்டுரையை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில்
படித்தேன். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து வறுமையில் வாடும்
மாணவி ஒருவர், தனது கல்லூரி படிப்பிற்கு உதவி
கோரியுள்ளார்.


            ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, அத்திகுளம் கிராமத்தைச்
சேர்ந்தவர் சொர்ணத்தாய். இவரது மகன் ஏ. தேவதாஸ்.
இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களது மகள்
ஆனந்தஜோதி. இவருக்கு இரண்டரை வயது இருக்கும்போதே
தாயும், ஏழு வயதாகும் போது தந்தையும் இறந்துவிட்டனர்.
இதனையடுத்து பாட்டி சொர்ணத்தாயுடன் ஒரு குடிசை
வீட்டில் ஆனந்தஜோதி வசித்து வருகிறார். பாட்டி கூலி வேலை
செய்து ஆனந்தஜோதியைப் படிக்க வைத்து வருகிறார்.

              சொர்ணத்தாயிக்கு வயது முதிர்வு காரணமாக ஒரு
கண்பார்வை முற்றிலும் இழந்துவிட்டது. ஆனந்தஜோதி
படிப்பு தவிர்த்து ஏனைய நேரங்களில் ஒரு தீப்பெட்டி ஆலையில்
வேலைக்குச் சென்று பாட்டிக்கு உதவி வருகிறார்.

            எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 427 மதிப்பெண்கள் பெற்ற
ஆனந்தஜோதி, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 889
மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியராகி
சமுதாயத்திற்கு செவை செய்ய வேண்டும் என்று
ஆனந்தஜோதிக்கு ஆசை. சிவகாசி எஸ்.எஃப்.ஆர். மகளிர்
கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிக்க
விண்ணப்பித்துள்ளார். கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு
கட்டணம் ரூ.2390. ஒரு செமஸ்டருக்கு கல்லூரிப் பேருந்துக்
கட்டணம் ரூ.3500. இது தவிர்த்து சாப்பாடு, புத்தகங்கள்,
துணிகள் உள்ளிட்ட செலவு உள்ளது. மூன்று ஆண்டுகள்
இப்படிப்பை முடித்துவிட்டு, பி.எட். படிக்க வேண்டும்.

             பாட்டி சொர்ணத்தாய் கூறுகையில், "இனிமேல்
ரேஷனில் 20கிலோ இலவச அரிசி தருவார்களாம் அதை
வைத்து ஓரளவிற்கு நான் பிழைப்பு நடத்திக் கொள்வேன்.
பேத்தி ஏதாவது படித்து வேலைக்குச் சென்று வாழ்க்கை
அமைத்துக் கொள்ள வேண்டும். அது தான் எனது விருப்பம்"
என்றார்.

            இவர்களுக்கு எந்த தொலைபேசி வசதியும் இல்லை.
இவர்களின் நிலை குறித்து தகவல் கொடுத்தவரின்
தொலைபேசி எண் 9994742465. ஆதரவு இன்றி வறுமையில்
தவிக்கும் ஆனந்தஜோதியின் முகவரி தே.ஆனந்தஜோதி,
காப்பாளர் பெயர். சொர்ணத்தாய், 127, வேதக்கோவில் தெரு,
(நடுத் தெரு), அத்திக்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழி, 626125,
விருதுநகர் மாவட்டம்.

இவரது நிலையில் இன்று பல மாணவர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்கு நம்மால் இயன்ற  உதவியைச் செய்வோம்.

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இதை ஒரு பதிவாகப்போட்டு அனைவர் கவனத்திற்கும் கொண்டுசென்ற தங்கள் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. இதைப்படிக்கும் பலரும் அந்த மாணவிக்கு உதவ முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

venkat சொன்னது…

தொலைபேசி எண் கிடைக்கவில்லை. உதவ ஆசை. இருப்பது வெளினாட்டில். வேறு தகவல் கிடைத்தால் தரவும்.

ஜிஜி சொன்னது…

வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
உங்களது உதவும் எண்ணத்திற்கு மிக்க நன்றி.
நான் இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினேன். அந்த பெண்ணிற்கு உதவ அந்த ஒரு எண் தான் உள்ளது ஐயா. மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.
வருகைக்கு நன்றிங்க.

L.S.Sir சொன்னது…

இன்றைய தினமணி செய்தியில் ரோட்டரி கிளப் இந்தப் பெண்ணுக்கு உதவி செய்துவிட்டது ஜிஜி
(14-06-2011) எல்.எஸ்.சார்.ஸ்ரீவி.

ஜிஜி சொன்னது…

வாங்க எல்.எஸ்.சார்,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails