தஞ்சைப் பெரியகோவில்

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

              தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில் கட்டிமுடித்து, 1000 வருஷம் ஆகிவிட்டது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.


               போன மாதம் கூட, 22.09.2010 முதல் 26.09.2010 வரை ஐந்து நாட்கள், " பெரியகோயில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா " தமிழக அரசால் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. ஐந்து நாட்கள் நிகழ்ச்சியின் நிறைவு நாள் அன்று, பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் 1000 பரதக் கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜராஜ சோழனால் கி.பி. 1009-1010 -ல் கட்டப்பட்ட இந்த பெரிய கோயில் எனப்படும் ' பெருவுடையார் கோவில்' -ன் கோபுரம் 200 அடி உயரம் உடையது. இதன் 60மீ உயர விமானம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியது.  இது பல்லவர்கால சிற்பக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 130000டன் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் உட்பிரகாரம் 500அடி நீளமும், 250அடி அகலமும் உடையது. இங்குள்ள நந்தி 25டன் எடையும், 12அடி உயரமும், 20அடி நீளமும் கொண்டது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தியாகும். இந்த நந்தி நாளுக்கு நாள், வளர்ந்துகொண்டே போவதாகவும், இதனால் அது இருக்கும் மண்டபம் இடிந்துவிடும் வாய்ப்பு உள்ளதால், நந்தியின் தலையில் ஆணி அடித்து அதன் வளர்ச்சியை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோல, இங்குள்ள கோபுரத்தின் நிழல், தரையில் விழாதவாறு கட்டப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதன் வீடியோ தொகுப்பு :


                                                                                                                (நன்றி: you tube)

இந்தக்கோயிலுக்கு போனபோது அங்கு சிறப்பு அனுமதி வாங்கி,
என் தம்பி கிளுக்கிய படங்கள்:
இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டுள்ள உட்புரக் கோபுரம்கோபுரத்திலுள்ள தொப்பி அணிந்த வெளிநாட்டவரின் சிற்பம்

 இந்தப் படங்களுக்காக தொகுத்த சுருக்கமான பதிவு இது.8 comments:

வெறும்பய சொன்னது…

தகவல்களும்.. புகைப்படங்களும் அருமை...

கடந்த மாதம் மன்னர்களை பற்றி ஒரு தொடர்பதிவு எழுதி பலரை தொடர அழைத்தேன்... அந்த கால கட்டத்தில் தங்களின் அறிமுகம் கிடைக்க இல்லை, கிடைத்திருந்தால் நிச்சயமாக உங்களையும் தொடர்ந்து எழுத அழைத்திருப்பேன்..... தங்களுக்கு நேரம் இருந்தால் தங்களுக்கு தெரிந்த மன்னர்களை பற்றி எழுதலாம் சகோதரி... (நேரமும்.. விருப்பமும் இருந்தால்)

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html

RVS சொன்னது…

பெரு ஆவுடையார் கோவில் படங்கள் நன்றாக இருந்தது ஜிஜி. குறிப்பாக கேப் போட்ட "அந்நியர்".
;-)

ஜிஜி சொன்னது…

தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி சகோதரரே.
கண்டிப்பாக எழுதுகிறேன்.
தங்கள் வருகைக்கு நன்றி.

ஜிஜி சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி RVS.

stella சொன்னது…

ரொம்ப நல்ல இருக்கு தொடர்ந்து எழுதவும்

krubha சொன்னது…

http://viewsofmycamera.blogspot.com/2010/07/blog-post.html

தஞ்சை கோவிலை பற்றிய என் பட பதிவு

ஜிஜி சொன்னது…

கருத்துக்கு நன்றி ஸ்டெல்லா..

ஜிஜி சொன்னது…

உங்கள் தளத்திலுள்ள புகைப்படங்களைப் பார்த்தேன். மிக அருமை க்ருபா.
தங்கள் வருகைக்கு நன்றி

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails