இப்படியும் சில மனிதர்கள்

புதன், அக்டோபர் 13, 2010

              சில பேர் இருக்காங்க, நம்ம தினசரி வாழ்க்கையில கண்டிப்பா நாம அவங்கள சந்திச்சிருப்போம். நம்மைப் பேசவே விடமாட்டாங்க, நான் சொன்ன அந்த சில பேர். நாம நேர்லயோ அல்லது ஃபோன்லயோ அவங்ககிட்ட பேசும்போது நம்மைப்   பேசவேவிடமாட்டங்க; அவங்களேதான் பேசிட்டிருப்பாங்க. அவங்களே கேள்வியும் கேட்டுப்பாங்க, பதிலும் அவங்களே சொல்லிப்பாங்க. நம்ம ஏதாவது சொல்ல வந்தாக்கூட,  என்ன பேசறோம்னு கேக்காம, அவங்களே பேசிட்டிருப்பாங்க. கொஞ்சம் நான் சொல்றதயும் கேளுங்கன்னு நாம் ஏதாவது சொன்னோம்னா, அந்த நேரத்துக்கு பேசாம இருந்தாலும், நம்ம பேசவந்தத முழுசா பேசவிடமாட்டாங்க. நாமளும் என்ன பேச நெனச்சோம்னு தெரியாம மறந்துடுவோம். அப்புறம் அவங்களே பேச்சை முடிச்சுவச்சிருவாங்க.


            தெரியாம , அவங்களுக்கு ஃபோன் பண்ணிட்டாப் போச்சு! செத்தோம்! அவங்களே பேசி, நாம் சொல்ல வந்த விஷயத்தையே, மறந்துட வச்சிருவாங்க. ஏன் தான் கால் பண்ணினோம்னு ஆயிடும் நமக்கு. எனக்குத் தெரிஞ்சு ஒரு குடும்பமே இந்த மாதிரி இருக்கு. அந்தக் குடும்பத்துல யாரைக் கண்டாலும் எங்க நாம மாட்டிக்குவோமோனு, எனக்கு பயமாவே இருக்கும். இப்படித்தான் ஒரு தடவ, நான் காலேஜ் சேர்ந்திருந்த சமயம், அந்தக் குடும்பத்துல ஒருத்தர் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். 'என்னம்மா படிக்கிற?'னு கேட்டார். நான், 'காலேஜ்ல இப்பதான் சேர்ந்திருக்கேன்'னு  சொல்லி முடிக்கக்கூட இல்ல, அவரோட காலேஜ் கதைய சொல்ல ஆரம்பிச்சுட்டார். இதை ஏற்கனவே  நான் பல தடவை கேட்டிருக்கேன்.ஆனாலும் அவர் என்னை பேசவிடவே இல்லை. இந்த மாதிரி தற்பெருமை பேசிக்கொல்றவங்களும் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களை
எல்லாம் என்ன பண்ணுறது? இவங்ககிட்ட இருந்து எப்படித்
தப்பிக்கிறது? இவங்களை நேர்ல சந்திக்கிற மாதிரி இருந்தால்,
கண்டுக்காம நாம போயிடணும். அவங்க கண்ணுல படாம,
எதிர்திசையில ஓடிடனும். இந்த மாதிரி உள்ளவங்ககிட்ட இருந்து
ஃபோன் கால் வந்தா அதை தயவுசெஞ்சு அட்டெண்ட் பண்ணிடக்கூடாது. அப்படியே அட்டெண்ட் பண்ற மாதிரி நிலைமை வந்தாலும், ஹலோ, ஹலோன்னு சொல்லி ஃபோனை வச்சிடனும்.


              இந்த மாதிரி பேசியே கொல்றவங்களுக்கு நேர்மாறாவும் சில பேர் இருக்காங்க. அவங்க குணம்  அப்படியே தலைகீழா இருக்கும். வாயே திறக்க மாட்டாங்க. நாம எதுவும் கேட்டாலும் பதில் சொல்லமாட்டாங்க. நம்ம பேசுனாலும் அத காதுல வாங்காம, வேற எதாவது யோசிச்சிட்டு இருப்பாங்க; டிவி இல்லைனா வேற எங்கயாவது வேடிக்கை பார்த்திட்டு இருப்பங்க அல்லது பேப்பர் படிச்சிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி இருக்கிறவங்ககிட்ட எல்லாம் ஏன் தான் பேசறோம்னு இருக்கும். அவங்க கேட்கலைன்னா நாம பேசறதுக்கே யோசிப்போம். ஏன்னா அவங்கள மாதிரி நம்மையும் பேசாம மாத்திடுவாங்க. இப்படியும் சில மனிதர்கள் இருக்கறாங்க. இந்த மாதிரியும் இருக்க வேண்டாம். நாமும் பேசணும்; நம்ம கிட்ட பேசுறவங்களையும் பேச விட்டு அவங்க என்ன சொல்றங்க அப்படிங்கறதையும் கேட்கணும்.

19 comments:

asiya omar சொன்னது…

very interesting.

Chitra சொன்னது…

Talk - and let people talk.
Pay attention, when you listen.
....... nice post.

வெறும்பய சொன்னது…

நல்ல பதிவு...

வேண்டிய நேரங்களில் பேசிக்கொண்டும், மற்ற நேரங்களில் மௌனமாக மற்றவர்கள் பேசுவதை கேட்ப்பது தான் சிறந்தது..

சௌந்தர் சொன்னது…

ஹலோ, ஹலோன்னு சொல்லி ஃபோனை வச்சிடனும்.////

ரொம்ப அவதிபட்டு இருக்கீங்க போல

மதுரை சரவணன் சொன்னது…

// நாம எதுவும் கேட்டாலும் பதில் சொல்லமாட்டாங்க. நம்ம பேசுனாலும் அத காதுல வாங்காம, வேற எதாவது யோசிச்சிட்டு இருப்பாங்க; // s i found many old people like this. now days it became fashion in young people that to show them as clever. thanks for sharing.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்லாதான் சொல்றீங்க.. நான் பாருங்க காது கொடுத்து (கண்ணைக்கொண்டு) கேட்டிருக்கேன்..
ஆனா நேரில் இதே எதிர்பார்க்கமுடியாது..;))

சங்கவி சொன்னது…

//வாயே திறக்க மாட்டாங்க. நாம எதுவும் கேட்டாலும் பதில் சொல்லமாட்டாங்க. நம்ம பேசுனாலும் அத காதுல வாங்காம, வேற எதாவது யோசிச்சிட்டு இருப்பாங்க; டிவி இல்லைனா வேற எங்கயாவது வேடிக்கை பார்த்திட்டு இருப்பங்க அல்லது பேப்பர் படிச்சிட்டு இருப்பாங்க//

உண்மைங்க... நிறைய அனுபவப்பட்டு இருக்கேன்...

LK சொன்னது…

neenga eppadinga ??

ஜிஜி சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி ஆசியா
சித்ரா

ஜிஜி சொன்னது…

கருத்துக்கு நன்றி வெறும்பய

ஜிஜி சொன்னது…

//ரொம்ப அவதிபட்டு இருக்கீங்க போல//
ஆமா சௌந்தர்.வருகைக்கு நன்றி.

ஜிஜி சொன்னது…

வருகைக்கு நன்றி
சரவணன்
முத்துலெட்சுமி
சங்கவி

ஜிஜி சொன்னது…

நான் எப்படின்னு நீங்க என் கணவர்கிட்ட தான் கேக்கணும் LK.
வருகைக்கு நன்றி.

தியாவின் பேனா சொன்னது…

நல்ல பதிவு...

ஜிஜி சொன்னது…

வருகைக்கு நன்றி தியாவின் பேனா.

LK சொன்னது…

//நான் எப்படின்னு நீங்க என் கணவர்கிட்ட தான் கேக்கணும் LK. //

அவங்க நம்பர் கொஞ்சம் கொடுங்க கேட்டுடலாம்

ஜிஜி சொன்னது…

@ LK,
ஏன் இப்படி? என்னை விட மாட்டீங்க போலயே?நான் உங்ககிட்ட என் பேர் எப்படித் தெரியும்னு கேட்டதுக்கு
இன்னும் நீங்க பதில் சொல்லலையே?

விக்னேஷ்வரி சொன்னது…

ஹாஹாஹா.. முதல் வகை மனிதர்களுக்கு இரண்டாம் வகை மனிதர்கள் மாதிரி ரெஸ்பான்ஸ் பண்ணிப் பாருங்க. :)

ஜிஜி சொன்னது…

நீங்க சொன்ன மாதிரி தான் பண்ணனும். கரெக்ட் தான்.
கருத்துக்கு நன்றி விக்னேஷ்வரி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails