காதல்...

ஞாயிறு, டிசம்பர் 12, 2010


                எனக்கு மெயிலில் வந்த கதை இது.  ஒரு
ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின்
அழகில் மயங்கினான் அவன்.இதயம் துடிக்க,
கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு..
பேச்சும் வரவில்லை.சர்வரை அழைத்து, 'காபிக்கு
கொஞ்சம் சர்க்கரை கொண்டு வா' என்று சொல்ல
நினைத்தவன், நாக்கு குழறி, " காபிக்கு கொஞ்சம் உப்பு
கொண்டு வா'  என்றான். சர்வர் இதைக் கேட்டு
திகைத்தார்.

              வார்த்தை தவறியது மறுவிநாடியே அவனுக்குப்
புரிந்துவிட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக்
காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு
வா!" என்றான் சர்வரிடம். அழகிக்கு ஆச்சரியம். " காபியில்
உப்பு போட்டு சாப்பிடுவதா?" என்று விசாரித்தாள். அவனோ,
உடனடியாக கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான்.

            "கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான்.
இப்ப நகரத்துல வசதியா இருந்தாலும் அப்பாவும் அம்மாவும்
அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கறாங்க. அவங்க
நினைப்பும், ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக்
கூடாதுங்கிறதால, காபியில உப்பு போட்டுக்கறேன்!" என்றான்.
அவனது பெற்றோர் பாசமும், ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது.
அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து,
கல்யாணமும் முடிந்தது.

            நாற்பது ஆண்டு கால குடும்பவாழ்க்கைக்குப் பிறகு,
ஒருநாள் அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு
கடிதத்தைக் கண்டாள் அவள்."ஸாரி டார்லிங்! ஒரு பொய்
சொல்லிட்டேன். நமது முதல் சந்திப்பின் போது, காபிக்கு
நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக்
காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு
சேர்த்துக்கொண்டாலும்..அன்று சொன்ன பொய் என்னை
நெருடுகிறது...!"

பின் குறிப்பு : "நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த
ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!"

            வேறொரு நாள்... அவள் காபியில் உப்பு சேர்த்துக்
கொண்ட போது, " உப்புக் கரிக்கலையா?" என்று கேட்டார் ஒருவர்.
"இனிப்பாக இருக்கிறது!" என்றாள் அவள்.

இவ்வாறாக முடிகிறது கதை. சுவை என்பது நாக்கில்
மட்டுமல்ல... மனதிலும் இருக்கிறது என்பதுதான் இந்தக்
கதையின் நீதியாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியும் காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது....

9 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

Nice :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உப்பு போட்ட காப்பி? நல்லா இருக்குங்க, இந்த காதல்..

RVS சொன்னது…

காபிக்கு உப்பு பத்தலை.. ;-)

Chitra சொன்னது…

இவ்வாறாக முடிகிறது கதை. சுவை என்பது நாக்கில்
மட்டுமல்ல... மனதிலும் இருக்கிறது என்பதுதான் இந்தக்
கதையின் நீதியாக சொல்லப்பட்டிருக்கிறது.


....Sweet!!! :-)

Arun Prasath சொன்னது…

இப்போ சமீபமா, இதே மாறி ஏதோ படத்ல பாத ஞாபகம்.. என்ன படம்ன்னு தெரில.. ஆனா எழுத்துல இருக்க பீலிங் தனி

ADHI VENKAT சொன்னது…

இப்படியும் ஒரு காதல் கதையா!!!!!!!!. பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க கனாக்காதலன் ,
வெங்கட் நாகராஜ்,
RVS,
சித்ரா,
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க அருண் பிரசாத்,
ஆமாங்க இதை வாமணன் படத்தில உபயோகப்படுத்தி இருக்காங்க, நானும் பார்த்தேன்.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails