ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆண்டாள் திருத்தேர்

சனி, டிசம்பர் 25, 2010


              தமிழக அரசின் சின்னமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் குறித்து அறிந்தவர்களுக்கு,
தமிழகத்திலேயே திருவாரூர் தேரை அடுத்து, இரண்டாவது
பெரிய தேர் இக்கோயிலுக்கு சொந்தமானது என்ற விவரம்
நிச்சயம் ஆச்சரியத்தைத் தரும்.
              இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாங்குநேரி
மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால்
உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கோங்கு
போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால்
இன்றளவும் உறுதியாக இருக்கிறது.
            இதன் விசேஷம் என்னவென்றால், ராமாயண, மகாபாரத
கதைகளைக் குறிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடியவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,500 டன் எடையும், 112அடி
உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரம் முன்பு மரத்தால்
செய்யப்பட்டு இருந்தது. இதனால் தேரை நிலைக்குக் கொண்டு
வர பல மாதங்களாகும். தேரை இழுப்பதற்கு பக்கத்து ஊர்களில்
இருந்து எல்லாம் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருவார்கள்.
இந்தத்தேரின் உச்சியில் இருக்கும் கொடி, பக்கத்து
ஊர்களிலிருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியுமாம்.
              திருச்சி 'பெல்' நிறுவனம் 1986ல் இரும்பு சக்கரங்களைப்
பொருத்தியது. இதன் பிறகு, புல்டோசரின் உதவியாலும் முன்று
மணி நேரத்தில் தேர் நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. மேலும்
சிகப்பு நிறத் துணியால் ஆன அடுக்குகளும் குறைந்து இப்போது
மூன்று அடுக்குகளே உள்ளன.
               இவ்வாறு பல பெருமைகளை உடைய ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலின் தேர், ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம்,
ஆடிப்பூரத்தன்று இழுக்கப்படுகிறது.

7 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் – தகவல்கள் அருமை ஜிஜி. பகிர்வுக்கு நன்றி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

ஆம் உண்மை.. எங்கள் ஊரிலிருந்தும் தேர் இழுப்பதற்கு ஆட்கள் சென்று பார்த்திருக்கிறேன். அன்று எங்கள் பகுதியில் விடுமுறை கூட அளிக்கப்படும். நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT சொன்னது…

தேர் குறித்த அழகான தகவல்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்,
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க கனாக்காதலன்,
ஆமாங்க. அந்த மாவட்டம் முழுவதும் தேர்த் திருவிழா அன்று விடுமுறையாக இருக்கும்.
உங்கள் ஊர் எது?
//Location: "நாய்"டா டூ நொய்டா.//
ராஜபாளையமா?
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
வருகைக்கு நன்றி.

L.S.Sir சொன்னது…

இதே போல் நம் ஊர் மார்கழி உற்சவத்தின் பெருமைகளையும் எழுதுங்கள். லேட்டஸ்ட் பெருமை
நித்யா என்ற பத்தாம் வகுப்பு மாணவி மாநிலத்தில் முதலிடம்.

எல்.எஸ்.சார்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails