நாகர்கோவில் -IV

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

மண்டைக்காடு



               அடுத்து மண்டைக்காடு கோவிலுக்கு நாங்கள்
செல்லும்போது மழை பெய்யத்தொடங்கியது. நல்ல
வேளையாக கோவிலை அடையும்போது மழைவிட்டு
விட்டது. மண்டைக்காடு, நாகர்கோவிலில் இருந்து 22கி.மீ
தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் கி.பி.7ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு 12அடி உயரமும்,
ஐந்து கரங்களும் உடைய பகவதி அம்மன் சிலை உள்ளது.
இச்சிலை மேலும் மேலும் வளருவதாக நம்பப்படுகிறது.
மண்டைக்காடு கோவில் பெண்களின் சபரிமலை எனவும்
அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு கேரளாவிலிருந்தும்
மக்கள் பலர் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மார்ச்
மாதம், கேரளாவில் உள்ள ஆற்றிங்கால் பகவதி அம்மன்
கோவில் பொங்கல் திருவிழா முடிவடைந்ததும், இங்கு
பொங்கல் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அப்போது லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.
இந்தக் கோவில் கடற்புரத்தில் அமைந்துள்ளது. நாங்கள்
கோவிலுக்குப் போனபோது இருட்டிவிட்டதால் கடற்கரைக்குச்
செல்ல முடியவில்லை. மற்ற இடங்களை விட இங்கு கடலில்,
அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்குமாம்.

வெள்ளிமலை





             கடைசியாக நாங்கள் சென்றது வெள்ளிமலை. இது
நாகர்கோவிலிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ளது. இந்த 200அடி
உயர வெள்ளிமலையின் உச்சியில்  'பாலசுப்பிரமணிய சுவாமி'
திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில்
நந்திப்பாதமும், முருகப்பாதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் நாங்கள் அதை பார்க்கவில்லை. மேலும் இந்த மலையின்
உச்சியிலிருந்து  பார்த்தால், வடக்குப்பக்கம் பச்சைப்பசேலென
மரங்களும், தெற்குப்பக்கம் கடலும் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும். முருகனின் விசேஷ நாட்களான கந்த சஷ்டி, வைகாசி
விசாகம், தைப்பூசம் போன்ற எல்லா நாட்களும் இங்கு
விசேஷமாக உள்ளன. மேலும் ஒவ்வொரு தமிழ்மாதம் கடைசி
வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பாக உள்ளது. இந்தக் கோவிலிலும்
பிரசாதமாக கஞ்சி கொடுக்கப்படுகிறது.

இந்தமுறை, இதனுடன் நாகர்கோவில் பயணம் முடிந்தது.
அடுத்தமுறை வேறு சில இடங்களுக்குச் சென்று அவற்றைப்
பற்றி எழுதுகிறேன்.

26 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மிக நல்லதொரு பயணத்திற்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி சகோ. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பற்றி படித்திருக்கிறேன். பார்க்க எப்போது அம்மன் அருள் அளிக்கிறாள் தெரியவில்லை.

எல் கே சொன்னது…

மண்டைக்காடு ,வேறு விஷயத்தினால் எனக்கு பரிட்சயமான ஒரு இடம்.ஒரு முறை அம்மனை தரிசிக்கவேண்டும்..

அதற்குள் முடித்து விட்டீர்களே ??

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஒருபக்கம் கடலும் ஒரு பக்கம் வயலும் நினைக்கவே அழகா இருக்கே.. ஜிஜி..

RVS சொன்னது…

பகவதி, பாலசுப்ரமணியன் இருவரையும் தரிசித்தோம்... அப்புறம் எங்கே.. ;-)

சிவராம்குமார் சொன்னது…

மண்டைக்காடு அம்மன் கோவில் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்... இது வரை போனதில்லை!

Chitra சொன்னது…

Very nice.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice

you could reduce background photos, takes time to load the page in my pc

ADHI VENKAT சொன்னது…

வெள்ளிமலை படிக்கும்போதே பார்க்கத் தூண்டுகிறது. உங்களின் அடுத்த தொடர் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

வேளிமலைக்கும்,மண்டைக்காட்டுக்கும் ஒருக்க போயிருக்கேன்.. அடுத்த தடவை ச்சான்ஸ் கிடைச்சா குமாரகோயில் போயிட்டு வாங்க..

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்,
வருகைக்கு நன்றி.
அம்மன் சீக்கிரமே அருள்புரிவாள்.போய் தரிசிச்சுட்டு வாங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க .
தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி.
சீக்கிரமே போய் ஒரு முறை அம்மனை தரிசிச்சுட்டு வாங்க.

Unknown சொன்னது…

வாங்க KANA VARO,
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கு நன்றி.
ஆமாங்க.ஒருபக்கம் கடலும் ஒரு பக்கம் வயலும், பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கும்.

Unknown சொன்னது…

வாங்க RVS,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
//"இந்தமுறை, இதனுடன் நாகர்கோவில் பயணம் முடிந்தது.
அடுத்தமுறை வேறு சில இடங்களுக்குச் சென்று அவற்றைப்
பற்றி எழுதுகிறேன்."//

Unknown சொன்னது…

வாங்க சிவா,
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா,
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க ராம்ஜி_யாஹூ ,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி ,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

வாங்க அமைதிச்சாரல்,
வருகைக்கு நன்றி.
என்னுடைய முதல் நாகர்கோவில்-I பதிவே குமாரகோவில் பற்றியதுதான் அமைதிசாரல்.இந்த லிங்கை பாருங்க.

http://vaarthaichithirangal.blogspot.com/2010/11/i.html

Unknown சொன்னது…

என்னம்மா நாகர்கோவிலை ஒரு கோவில் நகரமாக சித்தரித்துவிட்டீர்கள். அதையும் தாண்டி நிறைய இருக்கிறது. நாங்களும் கூடத்தான்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மண்டைக்காடு கோவிலுக்கு நானும் போயிருக்கிறேன்.
வெற்றிலையில் சந்தனம் தருவார்கள். நாகர்கோவிலே அருமையான இடம். என் இளமைப் பருவம் நாகர்கோவில், வடிவீஸ்வரத்தில்!

நெல்லைக் கிறுக்கன் சொன்னது…

வெள்ளிமலை பத்தி தகவல் கொடுத்ததுக்கு நன்றி. இந்த தடவ பொங்கலுக்கு ஊருக்கு போகும்போது கண்டிப்பா போகனும்.

Unknown சொன்னது…

வாங்க இனியவன்,
அப்படியெல்லாம் இல்லைங்க.
இந்த முறை நான் போன இடங்கள் பெரும்பாலும் கோவில்கள்.அதனால்தான்.

Unknown சொன்னது…

வாங்க ராமமூர்த்தி,
அங்கு பெரும்பாலான கோவில்களில் பிரசாதமாக இலையில் சந்தனம் வைத்துதான் தருகிறார்கள். என் கணவரது இளமைப்பருவமும் வடிவீஸ்வரத்தில்தான்.

Unknown சொன்னது…

வாங்க நெல்லைக் கிறுக்கன்,
வருகைக்கு நன்றி.
கண்டிப்பா போயிட்டு வாங்க.

Learn சொன்னது…

நான் வெள்ளி மலையின் அருகில் தான் இருக்கிறேன்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails