பொங்கல்

சனி, ஜனவரி 15, 2011

           

             இன்று தைத்திருநாள் ;தமிழர்த்திருநாள். அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


            இன்று பானைப் பொங்கல் இல்லை.சூரியப் பொங்கலும்
இல்லை. சின்ன வயதில் பொங்கல்னாலே ரொம்ப ஜாலியா
இருக்கும். பாட்டிவீட்டுக்குப் போவோம். பொங்கலன்று
காலையில் பொங்கல் வச்சதும், நாங்க சாப்பிடறோமோ
இல்லையோ, அதை கொண்டு போய் தெருவில் உள்ள
பக்கத்து வீடுகளுக்கெல்லாம் கொடுக்க ஓடுவோம். பொங்கலுக்கு
முந்தின நாள் மாமா ஒரு தள்ளு வண்டியில் ஒரு கட்டு அல்லது
இரண்டு கட்டு கரும்பு வாங்கி கொடுத்து விடுவாங்க. அதைக்
காலி பண்ண ஒரு போட்டியே நடக்கும். பொங்கலன்று புது
ட்ரெஸ் போட்டு, பக்கத்து வீடுகளின் பொங்கலை சாப்பிடவே
சரியாக இருக்கும். பாட்டி வீட்டுக்கு முன்னாடி இருக்குற அம்மன்
கோவிலிலும் பிரசாதம் கொடுப்பாங்க. கோவில் பிரசாதம்னாலே
அதுக்கு தனி டேஸ்ட்தான். அதானால பிரசாதம் வாங்குறதுக்கும்
போட்டி நடக்கும்.
              பொங்கல் அன்று மதியம் வெண் பொங்கல் சாதம்
செய்வாங்க. வெண் பொங்கல்னா, மிளகுப் பொங்கல் இல்லை.
பச்சரிசி சாதம் வைத்து. 13 வகை அல்லது 15 வகை  காய்கள்
போட்டு அன்று மட்டும் வித்தியாசமான ஒரு வகை சாம்பார்
வைப்பாங்க. அதுக்கு 'கிள்ளிப் போட்ட சாம்பார்'ன்னு பேர். நல்ல
சுவையா இருக்கும். வெள்ளை வெளேர்ன்னு பச்சரிசி சாதத்துக்கு
அந்த கிள்ளிப் போட்ட சாம்பார் சாப்பிட ஆசையா இருக்கும்.
மத்தியானம் தலை வாழை இலையில இந்த விருந்தை
முடிச்சிட்டு, சாயங்காலம் சின்னப் பிள்ளைகள் எல்லாரும்
சேர்ந்து உட்கார்ந்து கரும்பு சாப்பிடுவோம். அதுலயும் போட்டி
நடக்கும் யாரு முதலில் ஒரு துண்டு கரும்பை சாப்பிடறதுன்னு.
 

               மறுநாள் மாட்டுப் பொங்கல் ரொம்ப விசேஷமாக
இருக்கும்.பாட்டி வீட்டில் மாடு கிடையாது. ஆனால் பக்கத்து
வீடுகளிலெல்லாம் மாடுகள் உண்டு. அன்று அந்தத் தெருவில்
உள்ளகுளத்தில் மாடுகளை எல்லாம் குளிப்பாட்டி, கொம்புக்கு
எல்லாம் வண்ணம் பூசுவார்கள். மாட்டுக்கு அலங்காரம்
ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதை
வேடிக்கை பார்ப்பதற்காகவே போவோம். சாயங்காலம்தான்
மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும்
ஒரு நேரம் வைத்து கொண்டாடுவார்கள். அதனால் சாயங்காலம்
இத்தனை மணிக்கு பொங்கல் கொண்டாட வந்துடுங்கன்னு,
எங்களுக்கெல்லாம் அழைப்பு வந்திடும். இது மாடுகளுக்கு
மட்டுமல்ல.சின்ன பிள்ளைகளான எங்களுக்கும் பொங்கல்தான்.
              சாயங்காலம் ஆனதும், அழைப்பு வந்த வீடுகளுக்கு , ஒரு
தாம்பாளமும் ஒரு குச்சியும் கொண்டு செல்வோம். அந்த வீட்டில்
மாடுகளுக்கு அலங்காரம் பண்ணி, மாட்டிற்கு முன்பாக,
மாட்டுக்காகவே ஸ்பெஷல்லாக உப்பில்லாத பச்சரிசி சாதம்
செய்வார்கள். அப்போது பொங்கல் பொங்கி வரும்போது,
கொண்டு போயிருந்த தாம்பாளத்தில் குச்சியால் தட்டிக்கொண்டே
'பொங்கலோ பொங்கல்' ன்னு கத்த வேண்டும். பிள்ளைகள்
நிறைய பேர் போயிருந்தோமானால், சத்தம் பயங்கரமாக
இருக்கும். மாடே மிரண்டு விடும். பின்னர் மாட்டிற்கு மாலை
எல்லாம் போட்டு, பூஜை  எல்லாம் செய்து விட்டு , அந்த
சாதத்தை மாட்டிற்கு ஊட்டி விடுவார்கள். ஒரு வீட்டில் இது
முடிந்ததும்,  அடுத்த வீட்டிற்கு செல்வோம். அந்த வயதில் இது
பயங்கர ஜாலியாக, விளையாட்டாக இருக்கும்.



            அடுத்த நாள் காணும் பொங்கலன்று, புளி சாதம்,
எலுமிச்சை சாதம் என ஐந்து வகை அல்லது ஏழு வகை கலவை
சாதங்கள் செய்து, சாயங்காலமாக ஆற்றங்கரையில் உட்கார்ந்து
கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். கடல் உள்ள ஊர்களில்
கடற்கரைக்குப் போவார்கள். அல்லது பூங்காக்கள்,
அணைக்கட்டுக்களுக்குப் போவார்கள். சாப்பிட்டு விட்டு, சிறிது
நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவோம்.அந்த மூன்று
பொங்கல் நாட்களுமே, மிக ஜாலியாக இருக்கும். அடுத்த
பொங்கலுக்காக மனம் ஏங்கும்.
           ஆனால் இன்று, இவற்றில் எதுவுமே இல்லை. டெல்லியில்
எல்லாம் அப்பார்ட்மென்ட் வீட்டில், சூரியனைக் கூடப் பார்க்க
முடியவில்லை. குளிர் காலம் வேறு. கேட்கவே வேண்டாம்.
பொங்கலன்று ஒரு மஞ்சள் கொத்து வாங்க முடியவில்லை.
ஆசையாக வாழை இலையில் சாப்பிட முடியவில்லை. நல்ல
கரும்புகூட  சாப்பிட முடியவில்லை. இப்பொழுதெல்லாம்
பொங்கல்த்திருநாள் இப்படித்தான் கழிகிறது.

19 comments:

RVS சொன்னது…

நகர வாழக்கைக்கும் பொங்கலுக்கும் வெகு தூரம். அதுவும் பனி மழை பொழியும் தலைநகர வாழ்க்கைக்கும் பொங்கலுக்கும் காத தூரம். நினைவுகளில் பொங்கல் கொண்டாட வேண்டியதுதான்.

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

ஜெய்லானி சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :-)

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

Heartiest Pongal Greetings.

மனோ சாமிநாதன் சொன்னது…

அனுபவ நினைவுகளை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

Unknown சொன்னது…

வாங்க RVS,
ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்திருக்கீங்க.
முதல் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி.

Unknown சொன்னது…

வாங்க ஜெய்லானி ,
உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க கனாக்காதலன் ,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ,
எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க மனோ சாமிநாதன் ,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றிம்மா .

Asiya Omar சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அருமையாக எழுதீருக்கீங்க.

மாதேவி சொன்னது…

இனிய தைப்பொங்கல்,காணும்பொங்கல் வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஜி, ஜி, இன்றுதான் உங்க பக்கம் வந்தேன். ப்ளாக்கை அழகாக வடிவமைச்சிருக்கீங்க. மேட்டரும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

ADHI VENKAT சொன்னது…

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ஊரில் கொண்டாடுவது மாதிரி தில்லியில் இல்லை. ஆனா எங்க ஏரியாவில் மஞ்சள்கொத்து, கரும்பு, வாழையிலை எல்லாம் கேரளக் கடைகளில் கிடைக்கும்.

கே. பி. ஜனா... சொன்னது…

பழைய ஞாபகங்களைக் கிள்ளியது -- கிள்ளிப் போட்ட ஞாபகங்கள்!

Unknown சொன்னது…

வாங்க
ஆசியா,
மாதேவி ,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க லக்ஷ்மி,
தங்கள் முதல் வருகைக்கு நன்றிம்மா .
தொடர்ந்து இதுபோல பின்னூட்டங்களை இட்டு ஆதரவளியுங்கம்மா .

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி ,
தங்கள் வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க கே. பி. ஜனா... ,
தங்கள் வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails