எனது பள்ளி - எனக்குப் பெருமை

திங்கள், மே 30, 2011



             இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்,
எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது.
நான் படித்த பள்ளியின்  மாணவி செல்வி.M.நித்யா 496
மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக
தேர்ச்சி பெற்று எனது பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளாள்.
எங்கள் பள்ளி மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்திருப்பது
இதுவே முதல் முறை.


          எங்கள் பள்ளி, கன்னியாஸ்த்ரீகளால் நடத்தப்படும்,
கான்வென்ட் என்றழைக்கப்படும் திரு இருதய பெண்கள்
மேல்நிலைப் பள்ளி. இது ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம்
வகுப்பு வரை முழுக்க, முழுக்க பெண் ஆசிரியர்களால்,
பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. நானும் எனது தங்கையும்
ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில்
தான் படித்தோம்.


          1992ஆம் ஆண்டு இந்தப் பள்ளியின் பொன்விழா
ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. அதில் பரிசு வாங்கியது எனக்கு
மிகப் பெரிய பெருமை. கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக
இயங்கிக் கொண்டிருக்கும் இப்பள்ளியில் முழுவதும் தமிழ்வழிக்
கல்விதான். ஆனால் மாணவிகள் ஆங்கிலமும் கற்க வேண்டும்
என்பதற்காக, ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
நான் படிக்கும் பொழுதெல்லாம், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு
மாணவிகளுக்கு தனிவகுப்புகள் உண்டு. ஜனவரி மாதம் முதல்
தினமும் இரவு வகுப்புகள் நடக்கும். இந்த இரவு வகுப்பு எல்லா மாணவிகளுக்கும் இரவு 8.30 மணி வரை உண்டு. படிப்பில்
மந்தமானவர்களுக்கு காலை 7மணி வரை இருக்கும்.
ஞாயிறன்றும் சிறப்பு வகுப்புகள் இருக்கும். இந்த
தனிவகுப்புகளுக்கெல்லாம் மாணவிகளுடன் சேர்ந்து
ஆசிரியர்களும் இருப்பர். எந்த நேரமானாலும் பாடங்களின்
சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். கிளாஸ் டெஸ்ட்,
மன்த்லி டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட் என பல டெஸ்ட்டுகள்
வைக்கப்படும். இதன் மூலம் மாணவிகள் திறமை
வெளிப்படும். படிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டுப்
போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி,
கட்டுரைப் போட்டி போன்ற பல தனிதிறன்களுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பள்ளியின்
ஆசிரியர்கள் கொடுக்கும் ஊக்கமும், அறிவுரைகளும் தான்
இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம். இப்படிப்பட்ட இந்தப்
பள்ளியில் படித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
             மேலும் இந்த வருடம் ஐந்து பெண்கள் மாநிலத்திலேயே
முதல் மதிப்பெண்ணும் 11பேர் இரண்டாவது மதிப்பெண்ணும்
பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இரண்டாம்
இடம்பெற்ற 11பேர்களில், எங்கள் ஊர், ஸ்ரீவில்லிப்புத்தூரின்
மற்றொரு பள்ளியான மங்காபுரம் நாடார் பள்ளி மாணவியும்
ஒருவர். இந்த இரண்டு பள்ளிகளிலுமே தமிழ்வழிக்கல்விதான்
என்பது குறிப்பிடத்தக்க விஷயம். எங்கள் ஊரின் பெருமை
சேர்த்த அந்த இரண்டு மாணவிகளுக்கும் மற்றும் வெற்றி
பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

12 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஐந்து பெண்கள் மா நிிலத்தில்முதல் மதிபெண் பெறுதலும்
பதினொரு பெண்கள் இரண்டாம் இடம் பெறுவதும்
எத்தனை பிரமிப்பூட்டும் சாதனை
அதற்குதுணை நின்ற ஆசிரியப் பெருமக்களுக்கும்
பள்ளி நிர்வாகஸ்தர்களுக்கும் எங்கள்
மனப்பூர்வமான வாழ்த்துக்களை
காணிக்கையாக்குகிறோம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோ. பகிர்வுக்கு நன்றி.

RVS சொன்னது…

ரொம்ப பெருமையா இருக்கும்... கரெக்ட்டுதான்... ;-))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான தகவல்கள்.
அந்தப்பள்ளியில் படித்துள்ள தாங்களும் பெருமைக்குரியவரே.
திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கே பெருமை.
தமிழ்வழிக்கல்விக்குப்பெருமை. ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே பெருமை.
மிகப்பெரியதொரு சாதனைதான் இது.
இந்த வெற்றிக்கு அயராது பாடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

இதை பெருமையுடன் பதிவு செய்து எங்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்

Unknown சொன்னது…

வாங்க ரமணி சார்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க RVS சார்,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

தகவலுக்கு நன்றி

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாங்க அமுதா கிருஷ்ணா,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ஐயா ,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails