டெல்லி கிளைமேட்

செவ்வாய், ஜூலை 12, 2011

                 டெல்லி வெயில்ல இருந்து தப்பிக்கிறதுக்காக ஒரு
மாசம் ஊருக்குப் போயாச்சு. அங்க போனா இதை விடக்
கொடூரமா இருந்தது வெயில். கடைசியா ஊருக்கு
கிளம்பும்போதுதான் குற்றால சீசனால கொஞ்சம் கிளைமேட்
நல்லா இருந்தது.

                நாகர்கோவில் போயிருந்தபோதும் , அங்க இப்போ
ஆணிஆடிச் சாரல். குளுகுளு காற்றோட சாரல் சூப்பரா இருந்தது.
வரவே மனசு இல்லை. ஒரு மாசம் போனதே தெரியலை.
டெல்லி வந்தாச்சு. இங்க இப்போ வெயில் குறைஞ்சிடுச்சு. ஆனா,
புழுக்கம் தாங்க முடியலை. மழையும் பெய்யாம, வெயிலும்
இல்லாம கிளைமேட் கொல்லுது. வீட்டுக்குள்ள இருக்க
முடியலை. வியர்வைக் குளியலா இருக்கு தினமும். இதனால்
சீக்கிரமே டயர்டாகி எரிச்சல்தான் வருது. இங்க அடிக்கிற
அதிகமான வெயிலையும், குளிரையும் கூட சமாளிச்சிடலாம்
போல இதுக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
இருக்குமோ தெரியலை? படுத்தி எடுக்குது மனுஷனை.
             ஊருக்கு போயிட்டு வந்தாச்சு. போயிட்டு வந்த
இடங்களைப் பத்தி எழுதவேண்டாமா? அடுத்த பதிவுகளில்
எழுதறேன்.

11 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தில்லிக்குத் திரும்பி வந்தாச்சா.... நல்லது.... ஆகஸ்ட் வரை இந்த புழுக்கம்தான்.... சோ என்ஜாய்!

பயணக்கட்டுரைகளுக்கான காத்திருப்புடன்.

RVS சொன்னது…

எழுதுங்க! ;-)

Rathnavel சொன்னது…

சீக்கிரம் பதிவு எழுதுங்கள். நீண்ட நாட்கள் இடைவெளி.
வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வெயிலடிச்சா குளிரையும் குளிரடிச்சா வெயிலையும் கேட்போம்.. ரெண்டுமில்லாம இந்த நடுவில் எரிச்சல் கிளம்புவது சகஜம்தான்.. சரி சரி போனதுவந்ததை எழுத ஆரம்பிங்க சட்டுன்னு ..:)

கோவை2தில்லி சொன்னது…

வாங்க ஜிஜி. ஊர் ட்ரிப்பெல்லாம் நன்றாக இருந்ததா? வியர்வைக் குளியல் தான் தினமும் நடக்கிறதே. மழை பெய்தும் புண்ணியமில்லை. ஊரிலும் இப்படித் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

ஷர்புதீன் சொன்னது…

HA HA , WE ARE IN KOVAI, PLEASANT ALWAYS

புதுகைத் தென்றல் சொன்னது…

எங்க ஹைதையில் ச்சும்மா ஜில் ஜில்னு இருக்கு. மழையும் இல்லாம வெய்யிலும் இல்லாம ஆத்தாடி பாவாட காத்தாடன்னு காத்தடிக்கும் இந்த சீசன் ரொம்பவே பிடிக்கும்.

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

கோவை2தில்லி சொன்னது…

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது தொடருங்கள்.

http://kovai2delhi.blogspot.com/2011/07/blog-post_23.html

ஜிஜி சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
RVS சார்,
ரத்னவேல் ஐயா,
முத்துலெட்சுமி,
கோவை2தில்லி,
ஷர்புதீன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க புதுகைத் தென்றல்,
ஏங்க இப்படி?உங்க ஊர் கிளைமேட்டைப் பற்றி சொல்லி எங்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுக்கறீங்க.
ம்ம்ம்..சூப்பரா என்ஜாய் பண்ணுறீங்க..

ஜிஜி சொன்னது…

நன்றிங்க கோவைதில்லி.
சீக்கிரமே எழுதறேங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails