நானும் மூணு சக்கர சைக்கிள் ஓட்டப் போறேன் - மூணு மூணு பதில்கள் சொல்லி... (தொடர் பதிவு)

வியாழன், ஜூலை 28, 2011இது நான் எழுதும் முதல் தொடர்பதிவு. என்னையும் இந்தத் தொடர்
ஓட்டத்தில் கலந்து கொள்ள அழைத்த கோவை2தில்லி 
அவர்களுக்கு நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
* அதிகாலை அமைதியில் படிப்பது.
* பௌர்ணமி நிலவில் மொட்டை மாடியில் பால் சாதம் சாப்பிட.
* இரவுநேரம் ஜன்னலோர இருக்கைப் பயணம்.
 
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
* நம்மைப் பேசவிடாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள்.
* அதிக சத்தத்துடன் பாட்டுக் கேட்பது, டிவி பார்ப்பது.
* முதுகுக்குப் பின் நம்மைப் பற்றி பேசுபவர்கள்.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
* ராட்டினம், ரோலர்கோஸ்டர் இவற்றில் போக.
* பஸ் பயணங்களில் சில்மிஷம் செய்யும் ஆசாமிகள்.
* கூட்டம்.  

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
* சில விளம்பரங்கள் மற்றும் சில கவிதைகள்.
* அறிமுகம் இல்லாத நபரிடம் தன்னைப் பற்றி எல்லா
விஷயங்களையும் சொல்வது. (சொந்த விஷயங்கள் உட்பட)
* எல்லா நாட்களிலும் பேருந்து, ரயில், விமானம் என
எல்லாவற்றிலும் இருக்கும் பயணிகளின் கூட்டம்.
(எங்கதான் போவாங்களோ?)
 
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
* லேப்டாப்.
* பென் ஸ்டாண்ட்.
* நிறைய புத்தகங்கள்.

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
* எனது குழந்தையின் சேட்டைகள்.
* வடிவேலுவின் சில காமெடிக் காட்சிகள்.
* என் கணவர் பாடுவது.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
* என் குழந்தையுடன் விளையாடுவது.
* திரு. கி.ராஜநாராயணன் அவர்களின் "கோபல்ல கிராமம்"
புத்தகம் படித்துக் கொண்டிருப்பது. 
* அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களைத்
தெரிந்து கொள்வது.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
* சொந்தமாக ஒரு வீடு.
* அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுப்பது.
* சச்சின் டெண்டுல்கரைச் சந்திப்பது.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
* பள்ளி நாட்களில் விட்ட, ஓவியம் வரைதல், கட்டுரை
எழுதுதல் இவற்றைத் தொடர வேண்டும். 
* படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும். ( மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று என) 
* பத்திரிக்கைகளுக்கு எழுதுவது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
* பொய் பேசுவதை.
* மனம் புண்படும்படியாக பேசுவதை.
* கேட்ட வார்த்தைகளால் திட்டுவதை.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
* நிறைய மொழிகள். (தற்போதைக்கு சரளமாக ஹிந்தி பேச)
* நீச்சல்.
* வீணை.

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
பிடிக்காதென்று எதுவும் இல்லை. இருந்தாலும் மூன்று...
* கேக் வகைகள்.
* கோபி மஞ்சூரியன்.
* அசைவ உணவுகள்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
* எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக் காளை)
* பூங்காற்று உன் பேர்சொல்ல... (வெற்றி விழா)
* உயிரே உயிரே என் உயிரே... (தொட்டி ஜெயா)
 
14) பிடித்த மூன்று படங்கள்?
* மௌனராகம்.
* பம்பாய்.
* ரிதம்.

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
* அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம்,
காற்று, நீர், தூக்கம்.
* வெளி உலக தொடர்பு.
* புத்தகங்கள்.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்? 

அப்பா! ஒரு வழியா முடிச்சாச்சு. தொடர்ல பாஸாகிட்டேனான்னு
தெரியலை.

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அனைத்து மூன்றுகளும் முத்தான முத்தல்லவோ!
3 கால் சக்கர பேபி சைக்கிள் படமும் டாப்.
தங்கள் விருப்பங்கள் யாவும் ஈடேற என் அன்பான வாழ்த்துக்கள்.

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
கொஞ்சம் நேரம் கொடுங்கள். இப்போது திருவண்ணாமலை, நரிப்பாறை, மாதா மலை, தேரோட்டம் முதலிய பதிவுகளில் முழு கவனத்தில் இருக்கிறேன்.
தங்கள் அழைப்புக்கு நன்றி அம்மா.

எல் கே சொன்னது…

:)

கோமதி அரசு சொன்னது…

தொடரில் பாஸாகி விட்டீர்கள் ஜிஜி.

15 வது கேள்விக்கு பதில் எனக்கு மிகவும் பிடித்தது.

ஹுஸைனம்மா சொன்னது…

//ராட்டினம், ரோலர்கோஸ்டர் இவற்றில் போக.//

ஹி.. ஹி.. மீ டூ.. ஸேம் பிளட்!! ஆத்துக்காரரும், பசங்களும் என்னைக் கிண்டல் பண்றதுக்குக் கிடைச்ச அவல்!!

//கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
* கேட்ட வார்த்தைகளால் திட்டுவதை.//

இது நல்லாருக்கே, உங்களைத் திட்டணும்னா புதுப்புது வார்த்தைகள் படிச்சுட்டு வரணும்போலயே!! தமிழ் கத்துக்க இது ஒரு வழியா??!! (ச்சும்ம்மா... கலாய்ச்சேன்!!) ;-))))))

//இது இல்லாம வாழ முடியாதுனு ...
* வெளி உலக தொடர்பு.//

கரெக்டுங்க.. ஆளில்லாத் தீவு/ஜெயில் போன்ற இடங்களில் மத்த எல்லாம் இருக்கும்தான்.. ஆனாலும், கூட ஆளில்லாம தனியா இருக்க முடியுமா?

//* பத்திரிக்கைகளுக்கு எழுதுவது//
இதுவரை எழுதியவற்றை எங்களோட பகிருங்களேன்?

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

எந்தப் பூவிலும் வாசம் உண்டு..ஆகா நல்ல பாட்டு நினைவுபடுத்தினீங்க..
பதிலெல்லாம் சூப்பர்.. அந்த கணவர் பாடுவது .. நான் மிஸ் செய்த பதில் :))

விநாயகதாசன் சொன்னது…

சில சமயம் சுவாரஷ்யமானதுதான்
சில கேள்விகளும் சில பதில்களும்
உங்கள் இடுகை அந்த வகை...

ஜிஜி சொன்னது…

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
ரத்னவேல் ஐயா,
எல்.கே சார்,
கோமதி அரசு அம்மா,
ஹுஸைனம்மா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கு நன்றிங்க.
எந்த பூவிலும் வாசம் உண்டு பாடலைத் தான் மொபைலில் ரிங் டோனாகவும் வச்சிருக்கேங்க. அந்த அளவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அது.

ஜிஜி சொன்னது…

வாங்க விநாயகதாசன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுவையான பதில்கள். அதிலும் சிரிக்க வைக்கும் விஷயம் - கணவர் பாடுவது.... ம்... பாவம்.

நல்ல பதில்கள் தந்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி.

”ஆதி” யின் சார்பிலும், அழைப்பினை ஏற்று பதிவினைத் தொடர்ந்தமைக்கு ஒரு நன்றி.

கோவை2தில்லி சொன்னது…

என் அழைப்பினை ஏற்று தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி.
நல்ல பதில்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

ஹி..ஹி.. அழைச்சதுக்கு நன்றி. சீக்கிரமே பகிர்கிறேன் :-))

ஜிஜி சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
கோவை2தில்லி,
அமைதிச்சாரல்
வருகைக்கு நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails