மருத்துவமனை அனுபவம்

திங்கள், செப்டம்பர் 26, 2011

                
 
               டெல்லியில் உள்ள மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளில் சப்தர்ஜ்ங் மருத்துவமனையும் ஒன்று. 10 நாட்களுக்கு முன்பு, எங்கள் பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கு அங்குதான் டெலிவரி ஆனது. அவரைப் பார்க்க சென்ற போது, தனது மருத்துவமனை அனுபவத்தைக் கூறினார். கேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

               


                  அங்கு அட்மிட் ஆகும் நபர்களை, ஒரு பெட்டுக்கு இரண்டு பேர் என படுக்க வைப்பார்களாம். பிரசவ வலியிலும் ஒரு பெட்டில் இரண்டு பேர் படுத்துக் கொள்ள வேண்டுமாம். பிரசவம் சிசெரியனாக இருந்தால் மட்டும் ஒரு பெட்டுக்கு ஒருவராம்.

              அப்படி இவங்க அட்மிட் ஆன சமயத்தில், இவங்க பக்கத்து பெட்டில் ஒரு பெண்மணியும் அட்மிட் ஆனாங்களாம். சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு நார்மல் டெலிவரி ஆகிவிட, குழந்தையையும் தாயையும் ஒரு கட்டிலில் வந்து போட்டு விட்டு சென்றுவிட்டனராம். தாயும் குழந்தையும் அலுப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணிக்கு துணையாக ஒரு வயதான பாட்டி வந்திருந்ததாம். பாவம் அதற்கு கண் வேறு சரியாக தெரியாதாம்.

             அந்தப் பாட்டியும் கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நன்கு தூங்கி விட்டது போல. திடீரென்று அந்தப் பெண்மணியின் சத்தம் ஆஸ்பத்திரியே அதிரும் அளவு கேட்டதாம். என்னவென்று நர்ஸ்கள் எல்லாம் ஓடிப் போய்ப் பார்த்தால், குழந்தை இறந்து விட்டது. விசாரித்ததில், அந்தப் பெண்மணி தூக்கத்தில், குழந்தையின் முகத்தில், கையைப் போட்டு தூங்கி இருக்கிறாள். அந்த அழுத்தத்தில் குழந்தையின் மூக்கு நசுங்கி, மூச்சு முட்டி, குழந்தை இறந்திருக்கிறது.


                                       (இது அந்தக் குழந்தை அல்ல.)

              பாவம் இது அந்தப் பெண்மணியின் முதல் குழந்தையாம். அஜாக்கிரதையினால் பாவம் ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிர் போய்விட்டது. பக்கத்து வீட்டுப் பெண்மணி இதைச் சொன்னதில் இருந்து எனக்கு மனதே சரியில்லை. அன்று இரவெல்லாம் இதே ஞாபகமாகவே இருந்தது. 

13 comments:

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஐயோ, என்ன கொடுமை இது. கேக்கவே பதறுதே.
பாதிக்கப்பட்டவங்களுக்கு எப்படி இருக்கும்?

ஹுஸைனம்மா சொன்னது…

ஆ... என்னாது, ஒரு கட்டிலுக்கு ரெண்டு பேரா... இதுக்கு நம்மூர் அரசு ஆஸ்பத்தரி எவ்வளவோ பரவால்லை போலருக்கே!!

அநியாயமா அந்தக் குழந்தை வேற இறந்துபோச்சு. குழந்தைக்காவது ஒரு தொட்டில் கொடுக்கக்கூடாதா பாவிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

http://sirumuyarchi.blogspot.com/2009/03/40.html risk எடுத்தாலும் ப்ரவாயில்லை என்று கையெழுத்துபோட்டு என் பையனை அந்த ஆஸ்பத்திரியிலிருந்து தூக்கிட்டுவந்தேன்.. குழந்தைகளுக்கான ஐசியூவில் ஒரு சின்ன கிச்சன் அளவுக்குங்க..அதுல 7 எட்டு கட்டில் பிள்ளைங்க.. ஓ காட்.. ஓடியே வந்துட்டேன்.. :(

Mathuran சொன்னது…

கொடுமை...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கேட்கவே மனதுக்கு மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் உள்ளது.

தாய்க்கு தனியாக ஒரு கட்டிலும், கட்டிலருகேயே குழந்தைக்கு தனியாக ஒரு தொட்டிலும், கூட ஒத்தாசைக்கு வந்தவருக்கு ஒரு தனி பெஞ்ச் போலவாவது இருந்து தனி அறையாக ஸ்பெஷல் வார்ட் ஆக, பாத் ரூம் அட்டாச்டு ஆக வெளிச்சம், காற்றோட்டம், ஏ.ஸி வசதியுடன் இருந்தால் தான் நல்லது.

எல்லோருக்கும், எல்லா ஊர்களிலும் இதுபோல செளகர்யங்கள் கிடைக்கக்கூடும் என்றும் சொல்ல முடியாது.

நடந்தது கேட்க நடுக்கம் ஏற்படுகிறது. அந்தத்தாய்க்கு இதை நினைத்து நினைத்து மனநிலை பாதிக்காமல் இருக்க வேண்டுமே என்று கவலையாக உள்ளது. vgk

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மிகவும் வருத்தமான செய்தி இது. தில்லியில் உள்ள பல அரசு மருத்துவமனைகளின் நிலை இதுதான்....

தில்லி மக்களைத் தவிர, சுற்றிலும் உள்ள மற்ற ஊரிலிருந்தும் இங்கு மக்கள் வந்த வண்ணம் இருப்பதால், இங்கு எப்போதுமே படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு தான். வராண்டாக்களில் பாய் போட்டுப் படுத்து இருப்பவர்களுக்கு அவரின் உறவினர் நின்றபடியே ட்ரிப்ஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி இருப்பதைக் கூட நான் பார்த்திருக்கிறேன்....

என்ன சொல்வது சகோ.... மக்கள் தொகை கட்டுப்பாடு இல்லாதவரை, நிறைய மருத்துவமனைகள், அங்கே நிறைய படுக்கைகள் வசதி என்பதெல்லாம் இல்லாதவரை இந்த நிலை தொடரும் என்பதே கசப்பான உண்மை.....

ADHI VENKAT சொன்னது…

மனதை கனக்க வைத்து விட்டது.
பாவம் அந்த சிறு குழந்தை.:((((

ஜெய்லானி சொன்னது…

என்ன கொடுமை இது :-(

அமுதா கிருஷ்ணா சொன்னது…

மிக கொடுமையான செய்தி..

Rathnavel Natarajan சொன்னது…

வேதனையாக இருக்கிறது.

Unknown சொன்னது…

ஆமா லக்ஷ்மி அம்மா. இப்படியும் கொடுமைகள் நடக்குது. என்ன சொல்ல?
வருகைக்கு நன்றிம்மா.

Unknown சொன்னது…

வாங்க ஹூசைனம்மா,
இதற்கு நம்ம ஊர் அரசு மருத்துவமனைகள் மிகவும் மேல தான்.நிறைய வசதிகள் இருக்கு அங்க.
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
ரொம்ப கொடுமைங்க இதெல்லாம்.
கவர்மென்ட் இவ்வளவு செலவு செய்தும் ஏன் இப்படி இருக்குன்னு தெரியலை.
வருகைக்கு நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails