(1907 - 1983 )
பெல்ஜியமைச் சேர்ந்த கலைஞர் ஜார்ஜஸ் ரெமி
என்பவர் 'ஹெர்ஜ்' என்ற புனைப்பெயரில் எழுதிய காமிக்ஸ்
கதைகள்தான் டின்டின்னின் சாகசங்கள்.
டின்டின்
முதன்முதலில் 1929 ஆம் ஆண்டுதான் டின்டின் என்ற
கதாப்பாத்திரம் உருவானது. இருபதாம் நூற்றாண்டில்,
ஐரோப்பிய மொழிகளில் வெளியான மிகப் புகழ்பெற்ற காமிக்ஸ்
கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதைகள் கிட்டத்தட்ட 80
மொழிகளில் உலகெங்கும் வெளிவந்தது. அனேகமாக நம்மில்
பலர் இந்தக் கதைகளைப் படித்திருப்போம். பின்னர் இந்தக்
கதைகள் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும்
எடுக்கப்பட்டன. இதில் டின்டின் தான் ஹீரோ. அவன் மிகவும்
புத்திசாலியான இளம் நிருபர். துப்பறியும் நிபுணரும் கூட.
அவனுக்கு ஸ்னோவி என்றொரு நாயும் உண்டு. கேப்டன்
ஹட்டோக், டின்டின்னின் நெருங்கிய நண்பன். அவர் ஒரு
குடிகாரர். அவர் செய்யும் செயல்கள் அனைத்தும்
நகைச்சுவையாக இருக்கும். இவர்கள் மூவரும்தான்
கதையின் முக்கியக் கதாப்பாத்திரங்கள்.
இந்த வருடம் எடுக்கப்பட்டிருக்கும் 'அட்வென்ச்சர்ஸ்
ஆப் டின்டின்' என்கிற இந்த அனிமேஷன் திரைப் படத்தை
எடுத்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
மேலும் இந்தப் படம் 3டி யிலும் வெளிவந்துள்ளதால்
போய்ப்பார்த்தோம்.
பலவருடங்களுக்கு முன் மூழ்கிய யூனிகார்ன் என்ற
கப்பலில் இருந்த புதையலைத் தேடிச் செல்லும் டின்டினுக்கும்
வில்லனுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை. புதையலை
யார் எடுக்கிறார்கள், எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதுதான்
கிளைமாக்ஸ்.
குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம். அதுவும் 3டி யில்
பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. எனது 2வயது பையனே பொறுமையாக உட்கார்ந்து, ரசித்துப் பார்த்தான்.

7 comments:
CLICK LINK AND READ.
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
.
நல்ல பகிர்வு. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறோம்.
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/11/blog-post_29.html
உன்மையான மதிப்புரை ...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
I always enjoy reading "Tin Tin" Comics. The movie is good too. :-)
"டின் டின்” கேள்விப் பட்டிருக்கிறேன்..உங்கள் மூலம் தான் அறிமுகம் ..அருமை....
நல்ல தகவல்.
கருத்துரையிடுக