கடந்த புதன் கிழமை 15.02.2012 அன்று டெல்லி
தமிழ்ச் சங்கத்தில் காவல்கோட்டம் நாவலை எழுதி, சாகித்ய
அகாடமி விருது பெற்றுள்ள திரு. சு. வெங்கடேசன்
அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழா,
விருதைப் பெற்றதற்கு மறுநாளே சு.வெங்கடேசன் அவர்களுக்கு
முதல் பாராட்டு விழாவாக அமைந்தது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு. டி.கே.
ரங்கராஜன், எம்.பி., திரு. விஜய் ராஜ்மோகன், திரு முத்து
இருளன், இலங்கை எழுத்தாளர் திருமதி. சுமதி மற்றும்
திருமதி. எம். ஏ. சுசீலா ஆகியோர் வந்திருந்தனர்.
இதில் திரு முத்து இருளன், திரு விஜய் ராஜ்மோகன்
மற்றும் திருமதி எம்.ஏ. சுசீலாம்மா ஆகியோர் நாவலைப்
பற்றியும் அதன் கதாப் பாத்திரங்கள் பற்றியும் பேசினர்.
அதிலும் சுசீலாம்மா நாவலின் பெண் கதாப்பாத்திரங்கள் பற்றி
மிகவும் சிலாகித்து பேசினார்.
திரு டி.கே.ரங்கராஜன் அவர்கள் இந்த சாகித்ய அகாடமி
விருதைப் போல தமிழிலும் தனியாக ஒரு சாகித்ய அகாடமி
விருது வழங்கி எழுத்தாளர்களை கௌரவிக்க வேண்டும் என்று
பேசினார். திருமதி.சுமதி அவர்கள் தான் இந்த நாவலைப்
படிக்கவில்லை, அதனால் தன்னைப் பற்றிக் கூறுவதாக
கூறிவிட்டு, தான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றிக்
கூறினார். தேயிலைத்தோட்டத்தில் கொத்தடிமைகளாக
பணிபுரிபவர்களைப் பற்றிய படம். இதற்கும் நாவலுக்கும்
சம்பந்தம் உண்டு என்று கூறினார்.
இறுதியாக ஆசிரியர் சு. வெங்கடேசன் ஏற்புரை
வழங்கினார். அதில் தான் பத்து ஆண்டுகள் இந்த நாவலை
எழுதுவதற்குப் பட்ட கஷ்டங்களைக் கூறினார். 1898 இல்
பதிவான ஆவணம் ஒன்றே அவர் இந்த நாவலை எழுத
அடிப்படைக் காரணம் என்று கூறினார். மேலும் இந்த
நூலுக்கும் இந்த விருதுக்கும் எழுந்து கொண்டிருக்கும்
சர்ச்சைகளைப் பற்றியும் மிகுந்த மனவருத்தத்துடன்
பேசினார்.
டாக்டர். சுந்தர்ராஜன் அவர்களின் வரவேற்புரை
திரு.டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்களுக்கு பாராட்டு
தில்லி தமிழ்ச்சங்கம் பொதுச் செயலாளர் திரு முகுந்தன்
அவர்களின் வாழ்த்துரை
திரு.முத்து இருளன் அவர்களின் வாழ்த்துரை
திருமதி.எம்.ஏ.சுசீலா அம்மாவின் வாழ்த்துரை
காவல் கோட்டம் திரு.சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு
திரு.சு.வெங்கடேசன் அவர்களின் ஏற்புரை
இவ்வாறு விழா முடிய இரவு 9 .30 ஆகிவிட்டது.
பல நாட்கள் கழித்து இது போன்ற விழாவில் கலந்து
கொண்டதால் மன நிறைவாகவே இருந்தது. மேலும் நமது சக
பதிவர்களான திருமதி எம். ஏ.சுசீலா அம்மாவையும்,
திருமதி. முத்துலெட்சுமி (சிறு முயற்சி) அவர்களையும் சந்தித்து பேசியது
மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இந்த விழாவைப் பற்றிய விவரங்களை சுசீலாம்மா தனது பதிவில் குறிப்பிட்டுளார்.
http://www.masusila.com/2012/02/2.html

1 comments:
பாராட்டுக்கள் ! நன்றி !
கருத்துரையிடுக