நேற்று டெல்லி தமிழ்ச் சங்கத்தில் திரு.எஸ்.
ராமகிருஷ்ணன் அவர்களின் உரை நிகழ்ச்சி இருந்தது. பொதுவாக
இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ்ச்சங்கத்தில் மாலை 6 அல்லது
6 .30 மணிக்குத்தான் துவங்கும். அதனால் நானும் வழக்கம்
போல 6 .30 மணிக்குக் கிளம்பி போனால், நான் போய் சேர்ந்த 10
நிமிடங்களுக்கெல்லாம் எழுத்தாளர் பேசி முடித்துவிட்டார்.
அங்கு கேட்டால், நிகழ்ச்சி 5 மணிக்கே ஆரம்பித்து விட்டதாகவும்,
6 .30 மணிக்குமேல் திரைப்படம் ஒளிபரப்பப்படப் போகிறது
என்றும் சொன்னார்கள். கிளம்பி வந்து கேட்க முடியாமல்
போய்விட்டதே என்று மிகவும் கஷ்டமாகி விட்டது. இதில்
சந்தோசம் என்னவென்றால் சக பதிவர்களான திருமதி.
முத்துலெட்சுமியையும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களையும்
சந்திக்க முடிந்தது.
பல நாட்களாக சந்திக்க வேண்டுமென திட்டம் போட்டு,
கடைசியில் சந்திக்க முடியாமல் போய்விட்டது. நேற்றுதான் அது சாத்தியமானது. அதுவும் நேற்று, பதிவர்கள் அனைவரும்
டெல்லியில் நடந்துகொண்டிருக்கும் உலகப் புத்தகக் கண்காட்சியில் சந்திக்கலாமா என்று திரு.வெங்கட் அவர்கள் கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கும் என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது.
கடைசியில் மாலையில் தமிழ்ச்சங்கத்தில் தான் அவர்களை
சந்திக்க முடிந்தது. அந்தமட்டில் சந்தோஷம். எழுத்தாளரின்
பேச்சைத்தான் முழுமையாகக் கேட்க முடியாமல் போய்விட்டது.
அவர் பேசி முடித்தபின் அவருடன் சேர்ந்து புகைப்படம்
எடுத்துக்கொண்டோம்.
நேற்றைய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்
உரையை திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது வலைப்பூவில்
விரிவாக எழுதியுள்ளார்.

6 comments:
நல்ல பகிர்வு...
என் பகிர்வு பற்றியும் சுட்டிக் கொடுத்ததற்கு நன்றி ஜிஜி...
நல்லதொரு பகிர்வு.
உங்களைத் தான் என்னால் இதுவரை சந்திக்க முடியவில்லை. பார்க்கலாம். அடுத்த சந்திப்பில்...
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html
வாழ்த்துகள். பாராட்டுகள்
தொடர்ந்து எழுதுங்கள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
பார்க்கவும்
http://muelangovan.blogspot.in/
அருமையான பதிவு
வாழ்த்துகள்..
உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் DailyLib
To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் DailyLib
கருத்துரையிடுக