' மேஜிக் ஷூ '

புதன், செப்டம்பர் 29, 2010

              சுட்டி டிவி-ல ' மேஜிக் ஷூ 'ன்னு ஒரு ப்ரோக்ராம் வருது. அந்த கார்ட்டூன் இப்போ என்னோட பையனோட ஃபேவரைட் ப்ரோக்ராமாக ஆகிடுச்சு. அந்தக் கார்ட்டூன் ரொம்ப நல்லா இருக்கு.        ' டோரா ' அளவுக்கு இது பிரபலம் ஆகலேன்னாலும், அதே மாதிரி இதுவும் பிரபலம் ஆகிடும்னு நினைக்கிறேன். இப்போ  ' டோரா ' சுட்டி டிவி-ல ஒளிபரப்பாகுறது இல்ல. அதனால இததான் விரும்பி குழந்தைங்க பார்க்குறாங்க.              இந்த ' மேஜிக் ஷூ ' ப்ரோக்ராம்ல ' ப்ராணி '  ( பேரே அதுதான் ) தான் ஹீரோயின். அவளுடைய தாத்தா பழைய ஷூக்களை ரிப்பேர் பண்ணிக் குடுப்பார். அப்படி தினமும் சரி செய்றதுக்காக கஸ்டமர் கொண்டு வர்ற ஷூவை ப்ராணி போட்டதும், அது மேஜிக் ஷூவா மாறி, அவளை வெவேறு இடங்களுக்கு தூக்கிட்டுப் போகுது.                  ஒவ்வொரு நாளும், பனிப்பிரதேசம், மலைப்பிரதேசம், பாலைவனம்னு ஒவ்வொரு இடத்துக்குப் போகுறா. அங்க இருக்குறவங்களுக்கு உதவுறா. புதுசா எதாச்சும் கத்துக்குறா. அதை வந்து அவளோட தாத்தாகிட்ட சொல்றா. இதுபோல ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதை நடக்குது. நல்லா விதவிதமா யோசிச்சு எடுக்கறாங்க. குட்டீஸ்க்கெல்லாம் இது ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராமாக இருக்கும்னு நினைக்கிறேன். ' அலெர்ட் ஆறுமுகம் ' , ' டெலக்ஸ் பாண்டியன் ' இது மாதிரி வடிவேலுவை மையமா வச்சு எடுக்குற கார்ட்டூன்களுக்கு மத்தியில இந்த ' மேஜிக் ஷூ ' ஒரு வித்தியாசமான கார்ட்டூனாக இருக்கு. நேரம் இருந்தா பாருங்க!

12 comments:

LK சொன்னது…

சாரி... கார்ட்டூன் எந்த ப்ரோகிராம இருந்தாலும் அது குழந்தைகளுக்குத் தேவை இல்லை. நாள் ஆக நாள் ஆக அது அடிக்ட் ஆகி விடுகிறார்கள்

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

என் குழந்தைக்கு சொல்லணும்.


http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

ஜிஜி சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி LK.

ஜிஜி சொன்னது…

கண்டிப்பா சொல்லுங்க புன்னகை தேசம்..

சௌந்தர் சொன்னது…

நல்ல இருக்கே இந்த போஸ்ட் இருங்க நான் எங்க வீட்டு பாப்பா வுக்கு போட்டு காட்டுறேன் lk சொன்ன மாதிரி அடிக்ட் எல்லாம் ஆகா மாட்டாங்க

ஜிஜி சொன்னது…

கண்டிப்பா பார்க்க சொல்லுங்க சௌந்தர். தங்கள் வருகைக்கு நன்றி.

Kousalya சொன்னது…

பரவாயில்லையே நல்லா இருக்கே.... என் பசங்களையும் பார்க்க சொல்லணும்.

மோகன்ஜி சொன்னது…

நான் கூட பார்க்கிறேனே? எனக்கு குழந்தை மனசு தெரியுமா?

Annapurani சொன்னது…

At what time, the program will telecast in chutti tv.

ஜிஜி சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி கௌசல்யா.

ஜிஜி சொன்னது…

அப்படியா? மகிழ்ச்சி.கண்டிப்பா நீங்களும் பாருங்க.
தங்கள் வருகைக்கு நன்றி மோகன்ஜி.

ஜிஜி சொன்னது…

வருகைக்கு நன்றி அன்னபூரணி.
சுட்டி டிவில தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகுது.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails