சாலை பாதுகாப்பு வாரம்

வியாழன், ஜனவரி 06, 2011

           
               ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி
வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. 
இந்த வருடம் 22வது வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்காக, எல்லாப் பஸ்ஸிலும் சாலை பாதுகாப்பு வாரம் என்று
நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி
வருடாவருடம், சாலை விதிகளைப் பற்றியும், வாகன
விபத்துகளைத் தடுப்பது பற்றியும் மக்களுக்கு அரசாலும்
போலீசாலும் எச்சரிக்கை விடப்படுகிறது. ஆனாலும்
ஆண்டுதோறும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.


            இதற்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளைப் போல, நம்
நாட்டில் சாலைவிதிகளைப் பின்பற்றாததுதான். எங்கள் வீடு
தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. இச்சாலையில் 2
மாதத்திற்கு ஒருமுறை விபத்து நடக்கிறது. அதுவும் இரவு
நேரங்களில், பஸ்களும் கார்களும் போகும் வேகத்தைப்
பார்த்தால், சாலையில் நடக்கவே ரொம்ப பயமாக இருக்கும். 
இதுபோல, இரவில் எதிர்வரும் வாகனங்களில் வருபவர்கள்,
கண்கள் கூசும் அளவுக்கு ஹெட்லைட் போடுவதாலும் விபத்து
அபாயம் உள்ளது.



             பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவிலும், வேன்களிலும்
ஏற்றிச் செல்லும் போது விதிமுறை மீறப்படுகிறது. நிறைய
குழந்தைகளை ஒரே ஆட்டோவில் ஏற்றிச் செல்வது, திருவிழா
போன்ற விசேஷங்களுக்கு லாரிகளில் கும்பலாக ஆட்கள் ஏறிச்
செல்வது போன்ற தவறுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்.
அதிகாரிகளும் அனுமதிக்கக்கூடாது. அதிகமான நபர்களை
ஏற்றும் வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி உரிமத்தை ரத்து
செய்யவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதாலும்,
குடிபோதையில் வண்டி ஓட்டுவதாலும் விபத்துகளின்
எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குழந்தைகளுக்கும்
சாலை விதிமுறைகளை பின்பற்ற சொல்லிக் கொடுக்க
வேண்டும். சாலைகளை கடக்கும் போதும், ஆளில்லா ரயில்வே
லெவல் கிராசிங்கில் கடக்கும் போதும்  இருபுறமும் பார்த்து
செல்ல வேண்டும். 
இதுபோல ஆளில்லா லெவல் கிராசிங்கை மக்கள் கடக்கும்
இந்த வீடியோ, எனக்கு மெயிலில் வந்தது.


              இவ்வாறு நடக்கும் விபத்துகளை எப்படித் தடுப்பது?
சாலை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, விதிமுறை
மீறல்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படுகிறதா என்பது
போன்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் எழுந்தாலும், சாலை
விதிகளை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு மக்களான
நம்மிடமும் உள்ளது. அதே நேரத்தில் விதிமுறை மீறல்களுக்கு
டிராஃபிக் போலீசார் துவங்கி போக்குவரத்து உயர் அலுவலர்கள்
வரை பாரபட்சமின்றி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை போலீசாரின் ரோந்துப் பணியும் மக்களைப்
பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும். வெளிநாடுகளைப்
போல, விதிமுறைகளை மீறுபவர்கள், விபத்துக்கு
காரணமானவர்களின் உரிமம் ரத்து செய்ய அதிரடி நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இந்தப் புத்தாண்டிலாவது,
ஓரளவேனும் விபத்துகளை நாம் குறைக்கலாம்.

10 comments:

ADHI VENKAT சொன்னது…

பயனுள்ள பகிர்வு. சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடித்தாலே பெரும் விபத்துகளை தவிர்க்கலாம். இனிமேலாவது திருந்தினால் பரவாயில்லை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிந்தனையைத் தூண்டும் நல்ல பகிர்வு...

மாதேவி சொன்னது…

விபத்துபற்றிய விழிப்பு பகிர்வு அவசியமானது.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்லதொரு பகிர்வு ஜிஜி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

மிகுந்த உண்மை !

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயனுள்ள பதிவு...

Chitra சொன்னது…

பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவிலும், வேன்களிலும்
ஏற்றிச் செல்லும் போது விதிமுறை மீறப்படுகிறது. நிறைய
குழந்தைகளை ஒரே ஆட்டோவில் ஏற்றிச் செல்வது, திருவிழா
போன்ற விசேஷங்களுக்கு லாரிகளில் கும்பலாக ஆட்கள் ஏறிச்
செல்வது போன்ற தவறுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்.


... so true.... It is sad that there is no proper official regulation for this.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
வெங்கட் நாகராஜ்,
மாதேவி,
ராமலக்ஷ்மி,
கனாக்காதலன் ,
NKS.ஹாஜா மைதீன்,
சித்ரா
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal சொன்னது…

இன்னும் பிள்ளைகலை முச்சு முட்ட ஏற்றி சென்று கொண்டு தான் இருக்கீறார்கள்

படங்களுடன் கூடிய அருமையான் பதிவு

Unknown சொன்னது…

//இன்னும் பிள்ளைகலை முச்சு முட்ட ஏற்றி சென்று கொண்டு தான் இருக்கீறார்கள்//

ஆமாங்க ஜலீலா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails