மழலைப் பட்டாளம்...

புதன், மே 11, 2011

              இப்போது ஸ்கூல்குழந்தைகளுக்கு எல்லாம் சம்மர்லீவு 
விட்டாச்சு...  டெல்லியில மே, ஜூன்  இரண்டு மாதங்களில் 
வெயில் கடுமையாக இருப்பதால், அந்த இரண்டு 
மாதங்களில்தான் சம்மர் லீவு விடுறாங்க. இங்கே டெல்லியில 
நாங்க குடியிருக்குற அப்பார்ட்மென்ட்ல முக்கால்வாசி தமிழ்க் குடும்பங்கள்தான். அந்தக் குழந்தைகள் எல்லாம் என்னுடைய 
ஒன்றரை வயதுப் பையனோட விளையாட வருவாங்க.




           ஒரு நர்சரி ஸ்கூல் வச்சு நடத்தலாம் போல... ஒரே 
சத்தமும் சண்டையுமா இருக்கும். சண்டைய விலக்கி 
விடுறதுக்கே நேரம் சரியா இருக்கும். இந்தக் குழந்தைகளால
எனக்கு பொறுமை குணம் அதிகமாயிருக்கு. தினம் தினம் ஏழு, 
எட்டுக் குழந்தைகளைப் பார்த்துக்கணும்னா எவ்வளவு  
கஷ்டமா இருக்கு? எப்படித்தான் ஸ்கூல்ல டீச்சர்ஸ்
பார்த்துக்கறாங்களோ? அதுவும் நர்சரி ஸ்கூல் டீச்சர்ஸ்க்குத் 
தான் ரொம்ப ரொம்ப பொறுமை வேணும். ஒருத்தருக்குத் 
தண்ணீர் தாகம் எடுத்தா, வரிசையா எல்லாருக்கும் தண்ணீர் 
தாகம் எடுத்துடும். ஒருத்தருக்கு டாய்லெட் வந்தா, 
எல்லாருக்கும் வரிசையா வந்துடும்.

              அப்புறம் அவங்க கேட்குற கேள்விகள் இருக்கே? அதை
சமாளிக்கறதுக்குத் தனி திறமை வேணும். அப்படி என்கிட்ட  
கேட்கப்பட்ட  சில கேள்விகள்:

ஆண்ட்டி ! (இதைப் பத்தி தனிப் பதிவு போடறேன்) 
ஜஷ்வின்னுக்கு (என் பையன் பெயர்) இப்போ எத்தன வயசு?
நான் : ஒரு வயசு.

அவனுக்கு போன வருஷம் ஜீரோ வயசுதான ஆண்ட்டி?
நான் : ??? (என்ன பதில் சொல்லன்னு தெரியல) ஆமா. 

அடுத்து அவனுக்கு எப்போ டூ வயசு ஆகும் ஆண்ட்டி?
நான் : ஆகஸ்ட்ல அவனுக்கு பர்த்டே வரும் போது டூ வயசு 
ஆகிடும்.

அவன் அப்போ டூ வயசு ஆனதும் ஸ்கூல் போவானா?
நான் : இல்லை. அவனுக்கு மூணு வயசு முடிஞ்சதும் போவான்.

த்ரீ வயசுல போவானா?
நான்: ஆமா.

அப்புறம், ஃபோர் வயசுல போவானா?போக மாட்டானா?
நான் : போவான்.

ஃபைவ்  வயசுலயும்   போவானா ஆண்ட்டி?
நான் : அதுக்கப்புறம் எல்லா வயசுலயும் போவான்.

அவன் எப்போ ஆண்ட்டி பேசுவான்?
நான் : அவனுக்கு ரெண்டு வயசானதும் நல்லா பேசுவான்.

 அப்புறம், எங்க கூட எல்லாம் சண்ட போடுவானா?
நான் : ஆமா.
 
ஆண்ட்டி! அப்புறம், அவன் த்ரீ வயசுலயும் பேசுவானா?
நான் : ???

            இப்படிக் கேள்விகள் போய்கிட்டே இருந்தது. இந்தக் 
கேள்விகள் எப்போ முடியும்னு இருந்தது. 
இண்டர்வியூவிலையோ, பிராக்டிகல் வைவாவுலையோ
 கூட இவ்வளவு கேள்விகள் கேட்டிருக்க மாட்டாங்க.
இந்தக் கேள்விகளை நினைச்சு  ரசிப்பதா, அழுவதான்னு   
எனக்குத் தெரியலை. இது ஒருநாள் என்கிட்ட
கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பில் சிலதான்.
இப்படித் தினமும் நிறைய கேள்விகள் இருக்கும் அவங்ககிட்ட.  

           இப்போதுள்ள குழந்தைகள் பயங்கர சுட்டியாகவும்,
துடுக்குத்தனமாகவும் இருக்காங்க. கேள்விகளை 
சமாளிக்க முடியலை. இன்னும் என் பையன் பேச 
ஆரம்பிச்சு என்னென்ன கேட்கப்போறானோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ? தெரியலை.  

       இப்போ, ஒவ்வொருத்தரா லீவுக்கு ஊருக்குப்
போக ஆரம்பிச்சுட்டாங்க. கலகலன்னு இருந்த 
எங்க வீடு இப்போ வெறிச்சோடிப் போக ஆரம்பிச்சிடுச்சு.
பாவம்! என் பையனுக்குத்தான் இப்போ போர் 
அடிக்க ஆரம்பிச்சுடுச்சு... அடுத்து அவங்கல்லாம் 
ஊருக்கு வந்தப்புறம்தான் திரும்ப வீடு களை கட்டும். 
அதுவும் அடுத்து லீவு விடும்போதுதான். ஸ்கூல் 
நாட்களில் அவங்க எல்லாம் ஒவ்வொரு கிளாஸ் என
பிசியாகிடுவாங்க. அதனால நானும் என் பையனும் 
அவங்களோட அடுத்த லீவுக்காக காத்திருக்கிறோம்.    
கேள்விகளுக்காகவும்தான்.

23 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அழகு..குழந்தைங்க யோசிக்கிறதே தனி விதம் தான்.
ஜிஜி பொறுமையின் திலகமே..:))

அமுதா கிருஷ்ணா சொன்னது…

அருமையான கேள்விகள்..

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க இன்னும் 2 years லேயும் இப்படி உங்கள் மகன் பேசுவதை பதிவா போடுங்க.... :-)))))

எல் கே சொன்னது…

ரெடி ஆகிடுங்க ஜிஜி என் பொண்ணு கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடிவதில்லை

சாம்பிள் : அணில் வீடு எங்க இருக்கு ? அணில் வீட்டுக்கு நீ போயிருக்கியா ?? அணில் வீடு எப்படி இருக்கும் ?

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல கேள்விகள். சில குழந்தைகள் ஓயாமல் இதுபோல அடுத்தடுத்து ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே தான் இருப்பார்கள்.

அவ்வாறு அதிகமாக சிந்தித்து கேள்விக்கணைகளைத் தொடுக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் இவர்களுக்கு அடுத்தடுத்து பதில்சொல்ல நமக்குப்பொறுமையும், நேர அவகாசமும் தேவை தான்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

Jaleela Kamal சொன்னது…

குழந்தைகள் அபப்டி தான், அப்பாட்மெண்டில் எல்லாம் தமிழ் ஆட்கள் அபப்டின்னா நல்ல இருக்குமே, நல்ல நேரம் போகும். இல்லையா?
டெல்லியில் எங்கு எந்த ஏரியாவில் நம் தமிழ் நாட்டு உணவு கிடைக்கும்.

Unknown சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
புதுசா எனக்குப் பட்டமே கொடுத்திருக்கீங்க?
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க அமுதா கிருஷ்ணா,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா,
ஆமாங்க நீங்க சொன்னதுபோல இன்னும் ரெண்டு வருஷம் கழித்து பதிவு போடவேண்டியது இருக்கும் என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க எல் கே சார்,
கேள்விகளைப் பார்த்தா ரொம்ப பயமா இருக்கே?
எப்படி சமாளிக்கிறீங்க?
தயாராக இருக்கணும் போல.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
கண்டிப்பாக அதிக பொறுமை தேவைப்படுது பதில் சொல்வதற்கு.
வருகைக்கு நன்றிங்க.

stella சொன்னது…

hai jash payangarama dress panirukan nice

ADHI VENKAT சொன்னது…

இவர்களின் கேள்விகள் தாங்க முடியலை. இங்கயும் ரோஷ்னி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலை.

உதாரணம் – தண்ணீர் கலர் இல்லாமல் தான் இருக்கு. கைல எடுத்து கூட பார்த்தேன். ஆனா படத்தில் கலர் பண்ணும் போது ஏன் நீலக்கலர் பண்ணனும்? இப்படி நிறைய….

Unknown சொன்னது…

ஆமா ஸ்டெல்லா.
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
இப்போ உள்ள குழந்தைகளோட கேள்விகளுக்கு நம்மால பதில் சொல்ல முடியலைங்க. கஷ்டமாத்தான் இருக்கு.
வருகைக்கு நன்றிங்க.

ரிஷபன் சொன்னது…

அவனுக்கு போன வருஷம் ஜீரோ வயசுதான ஆண்ட்டி?

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. நாமதான் அவங்க யோசிப்பை தடை செய்யறோமோ?

Thenammai Lakshmanan சொன்னது…

பகிர்வு அருமை ஜிஜி.:)

Yaathoramani.blogspot.com சொன்னது…

படங்களுடன் பதிவும் அருமை
அவர்களது கேள்விகளை அவர்கள் மொழியிலேயே சொன்னது
மிகவும் ரசித்து படிக்க வைத்தது
உங்கள் எழுத்து நீங்கள் அனுபவிக்கிற வெறுமையை
எங்களையும் அனுபவிக்கச் செய்கிறது
படைப்பின் வெற்றி என்பதே அது தானே
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வாங்க ரிஷபன்,
ஆமாங்க. இந்தக் காலத்துக் குழந்தைகளோட யோசிப்பும் அதற்கான கேள்விகளும் வியக்கும்படிதான் இருக்கிறது.அவற்றை நாம் தூண்டி விடும்படியாக நடந்து கொள்ள வேண்டும்.
வருகைக்கு நன்றிங்க,

Unknown சொன்னது…

வாங்க தேனம்மை,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரமணி சார்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

மனோ சாமிநாதன் சொன்னது…

மழலைகளின் பேச்சு அருமையான கவிதை ஜிஜி! புற‌க்கவலைகள் அனைத்தையும் மறக்க வைக்கிற நல்மருந்து! அந்த நீலக்கலர் சட்டை போட்டிருக்கும் குழந்தைதான் உங்கள் மகனா? அந்த சிரிப்பு கொள்ளை அழகு!

Unknown சொன்னது…

வாங்க மனோ அம்மா,
ஆமாம்.அது என் பையன்தான் அம்மா.நன்றிங்க.
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails