நாகர்கோவில் - சொத்தவிளை பீச்

புதன், ஆகஸ்ட் 03, 2011

            கடல்னாலே அழகுதான். கடல்னு சொல்லும்போதே மனசு குழந்தை மாதிரி குதூகலிக்குது. இந்த தடவை ஊருக்குப் போனபோது, நான்கு பீச்சுக்கு போனோம். அவ்வளவு ஜாலியா இருந்தது.




             முதலில் நாங்க போனது, சொத்தவிளை பீச். இது நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கடற்கரையைப் பற்றி நாகர்கோவிலில் உள்ளவர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. இது நான்கு கி.மீ. நீளமுள்ள இந்தியப் பெருங்கடலின் கடற்கரை. முன்பெல்லாம் இந்த பீச்சுக்கு யாரும் வர மாட்டார்களாம். இங்கு வருபவர்களிடம் வழிப்பறி, கொலை போன்ற சமூக சீர்கேடுகள் நடக்கும் இடமாக இருந்திருக்கிறது . மேலும் சுனாமியினாலும் இந்த பீச் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போதுதான் இம் மாவட்டக் கலெக்டரின் உதவியால், இது செப்பனிடப் பட்டு, சிறுவர் பூங்காக்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பலரும் வருமாறு, வழிசெய்யப்பட்டுள்ளது.



            வெள்ளை மணல் பரப்புடன் பார்ப்பதற்கு அழகாக , மிக நீளமாக இந்தக் கடற்கரை இருக்கிறது. கடல் தண்ணீரும் பார்ப்பதற்கு நீலக் கலரில் ஜொலிக்கிறது.



             கரையோரத்தில் நிறைய குடில்களும், செடிகளும் அழகாக
இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில்
ஒன்றாக இது மாறிவருகிறது.

            நாங்கள் போனது ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால்,
கூட்டம் அதிகமாக இருந்தது.  பேருந்தில் செல்வதானால்,
புத்தளம் என்ற ஊருக்கு அடுத்த ஸ்டாப்பான சொத்தவிளையில்
இறங்கி, பீச்சிற்கு , அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து செல்ல
வேண்டும். கடலைப் பார்த்ததும் கால் நனைக்கலாமென
ஆசையாகப் போனால்,  கடலுக்கு என்மேல என்ன கோபமோ
தெரியலை. ஒரு பெரிய அலை வந்து கீழ தள்ளிடுச்சு. அப்புறம்
என்ன? முழுக்க நனைஞ்சாச்சு. நனைஞ்சது நனைஞ்சாச்சு,
அப்படியே குளிச்சிடுவோம்னு, சூப்பரா ஒரு குளியலையும்
போட்டாச்சு. ஜாலியா இருந்தது.  இந்த சொத்தவிளை பீச்
அவ்வளவாக ஆழமில்லாததால், குளிப்பதற்கு ஏற்றதாக
இருக்கிறது. நிறைய பேர் நீச்சல் அடித்து குளித்தார்கள்.
இருட்டும்வரை இருந்துவிட்டு, பின் திரும்பிவிட்டோம்.
           கேமரா கொண்டுபோக மறந்துவிட்டதால்,  கூகுள்
மூலம்தான் இந்தப் படங்களை எடுக்க முடிந்தது.
நன்றி AdmirableIndia.com



24 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாவ் ரொம்ப அழகான பீச்சா இருக்கு ஜிஜி..
நிச்சயமா நல்லா எஞ்சாய் செய்திருப்பீங்கன்னு தெரியுது..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

Superb. பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சொத்தவிளை... நல்ல பெயராக இருக்கிறதே... எதேனும் பெயர்க்காரணம் இருக்கும்.... எங்களையும் உங்களுடன் பீச் அழைத்துச் சென்றதற்கு ஒரு நன்றி.

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

We had the opportunity to go there. Awesome beach, indeed!!!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கல்லூரி காலத்தில் கல்லூரிக்கு மட்டம் போட்டால் செல்லும் இடத்தில் இந்த கடற்கரையும் ஓன்று.. அழகான இடம்.. ஆனால் அங்கு செல்லும் போது பயத்துடன் தான் செல்வோம்.. அவ்வளவு மோசமான இடமும் கூட..

இந்த படங்கள்தற்போதைய படங்களா இல்லை சுனாமிக்கு முந்தைய படங்களா.. ???

ADHI VENKAT சொன்னது…

நல்ல தகவல்களாக இருக்குங்க. வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும். மகளுக்கு கடற்கரையை காட்ட வேண்டும். நல்லா என்ஜாய் பண்ணியிருப்பீங்க.

ஜெய்லானி சொன்னது…

பீச்-ன்னு சொன்னாலே ஜாலிதானே.!!.அழகான படங்கள் :-)

கோமதி அரசு சொன்னது…

நாங்கள் சிறு வயதில் நாகர்கோவிலில் இருந்தோம் பார்த்தது இல்லை.

நீங்கள் சொன்னது போல் அந்தக்காலத்தில் யாரும் போகாத காரணத்தால் அழைத்து செல்லவில்லை போலும் அப்பா.

மிகவும் அழகாய் உள்ளது.

Unknown சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
ஆமாங்க. நல்லா என்ஜாய் பண்ணினோம்.
திரும்ப எப்போ பீச்சுக்கு போவோம்னு இருந்தது.
டெல்லி வந்துட்டா அதைப் பத்தி நினைக்க முடியாதே?
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் சார்,
விசாரித்துப் பார்த்தேன். சொத்தவிளைங்கற பேருக்கான காரணம் தெரியலை சார்.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ஐயா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா,
வருகைக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இவ்ளோ நாளா இந்த கடற்கரைக்கு போனதேயில்லை.. அடுத்த தடவை எப்படியும் போகணும்..

Unknown சொன்னது…

வாங்க வெறும்பய,
இப்போதும் ஸ்டாப்ல இருந்து பீச்சுக்கு போற வழி கொஞ்சம் பயமா தான் இருக்குங்க.
இந்தப் படங்கள் சுனாமிக்கு அப்புறம்தான் எடுத்த படங்கள். இப்போது செப்பனிடப்பட்டு நல்லா இருக்கு பீச்.

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றிங்க வெறும்பய.

Unknown சொன்னது…

வாங்க கோவைதில்லி,
கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால், உங்க மகளை பீச்சிற்கு கூட்டிக்கிட்டு போங்க. இந்த வயதில் அவங்க கண்டிப்பாக பார்க்கனும்ங்க.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ஜெய்லானி சார்,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோமதிஅரசு அம்மா,
இப்போது பீச் நல்ல வசதிகளுடன் அழகாக இருக்கிறது.ஆனால் போகும் வழிதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. இருட்டிய பிறகு பீச்சில் இருந்து பஸ் ஸ்டாப்பிற்கு வரும் வழி பயமாக உள்ளது. தெரு விளக்குகள் இல்லை.பக்கத்தில் வீடுகளும் இல்லாததால் ஆள் நடமாட்டமில்லை. இந்த வசதிகளும் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி கோமதிஅரசு அம்மா.

பூபேஷ் பாலன் சொன்னது…

சொத்தவிளை பெயர்க்காரணம்:

மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் புரியும்பொழுது நடந்ததாக ஒரு கிளைக்கதை உண்டு. பாண்டவர்கள் மிகுந்த தாகத்தில் இருந்தபொழுது ஒரு பொய்கையை காண்கிறார்கள். அந்த பொய்கையில் தண்ணீர் அருந்த முற்படும்பொழுது ஒரு அசரீரி எச்சரிக்கை செய்கிறது. எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தருமனை தவிர நால்வரும் தண்ணீர் அருந்தி மயக்கமடைந்து சவம் போல் கிடக்கிறார்கள். அது ஒரு நச்சுப்பொய்கை. இறுதியாக தருமன் அசரீரியின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி சகோதரர்களை உயிருடன் மீட்பதாக கதை முடிகிறது.

சொத்தவிளை கடற்கரை அருகில் ஒரு சுனை உள்ளது, அதற்கு நச்சுபொய்கை என்று பெயர். அந்த பொய்கைதான் மேற்கூறிய கதையில் வரும் பொய்கை என்ற நம்பிக்கையில் 'செத்தவிளை' என்று பெயர் வழங்கப்பட்டது என்றும், நாளடைவில் 'சொத்தவிளை' என்று மாறியதாகவும் கதை உள்ளது.


இதைதவிர, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான ஊர் பெயர்கள் 'விளை' என்று முடியும் வகையில் அமைய பெற்றுள்ளன. 'தேங்காய்' விளையும் நிலங்களை 'சொத்து' என்று பார்க்கும் வகையில் 'சொத்தவிளை' என்று வந்து இருக்கலாம்.

Unknown சொன்னது…

வாங்க அமைதிச்சாரல்,
வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பா போய்ப்பாருங்க.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க பூபேஷ் பாலன்,
தங்களுடைய சொத்தவிளையின் பெயர்க்காரண விளக்கத்திற்கு மிக்க நன்றி. வருகைக்கும் நன்றிங்க.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails