அழகுக்குறிப்புகள்

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

              தற்போது பெரிய நகரங்களிலிருந்து,கிராமங்கள் வரை அழகு நிலையங்கள் இல்லாத  ஊரே இல்லை எனலாம். தெருவுக்கு ஒன்று அல்லது இரண்டு ப்யூட்டி பார்லர்கள் இருக்கின்றன.இவற்றில் எத்தனை அங்கீகாரம் பெற்றவை என்பது வேறு விஷயம். முன்பு பார்லர் என்பது பணக்கார பெண்களுக்கும் நடிகைகளுக்கும் மட்டுமே உரியதாக இருந்து வந்தது. ஆனால் இன்று தினக்கூலி முதல் கவர்னர் வரை பார்லர் போகாத பெண்களே இல்லை எனலாம். அத்தகைய பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் செல்கின்றனர். அவர்களுக்கெனத்  தனி பார்லர்களும்  உள்ளன. அந்த அளவிற்கு அழகு பற்றிய விழிப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளும் செல்கின்றனர். இந்த அளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட டிவி சேனல்கள், பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் உறுதுணையாக உள்ளன. நான் அழகுக்கலை நிபுணர் இல்லை என்றாலும் என் பங்குக்கு எனக்குத் தெரிந்த, படித்த அழகுக் குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.



  • காய்ச்சாத பாலை முகத்தில் பூசி,சில நிமிடம் கழித்துப் பஞ்சால் துடைத்தால் முகம் பளிச்சென்றும், மிருதுவாகவும் இருக்கும்,
  • ஒரு டீஸ்பூன் பாலுடன் சில துளி கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்துப் பூசினால் முகம் பொலிவு பெறும்.
  • பாசிப் பயறு மாவு அல்லது முல்தானிமட்டியுடன் ரோஸ்வாட்டர் கலந்துப் பூசினால் முகம் பொலிவுறும்.
  • உருளைக்கிழங்கு சாறு அல்லது கேரட் சாறு எடுத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
  • கடலை மாவுடன் பால் ஏடு கலந்து பூசி வந்தால் பருக்கள் மறையும்.
  • சோம்பைப் பவுடராக்கி  ரோஸ்வாட்டர் கலந்துப் பூசினாலும் பருக்கள் குறையும்.
  • புதினா இலையை அரைத்து பரு உள்ள இடங்களில் தடவலாம்.
  • தேனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து தேய்த்து வந்தால் கழுத்தின் கருமை நிறம் நீங்கும்.
  • அன்னாசிப் பழச்சாறுடன் முல்தானிமட்டி கலந்துப் பூசினால் கழுத்தில் கறுப்பு  நிறம் மறையும்.
  • புளித்தத் தயிரை முகம் மற்றும் கைகளில் தேய்த்து வந்தால் வெயிலினால் ஏற்படும் கருமை மாறும்.

2 comments:

vaishnavi சொன்னது…

very nice tips.... useful, without spending too much time in parlor and spending more money....

Jaleela Kamal சொன்னது…

அழகு குறிப்புகள் அருமை ஜி ஜி

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails