எனது குழந்தையின் வயிற்றுப்போக்கு...

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

               எனது குழந்தைக்கு எட்டு மாதமாக  இருக்கும்பொழுது ஒருநாள் திடீரென்று வாந்தியும், பின் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. உடனே வீட்டிற்கு அருகிலுள்ள டாக்டரிடம் காண்பித்தோம். மருந்துகள் கொடுத்தும் இரவெல்லாம் வயிற்றுவலியால் துடித்து அழுதது. வயிற்றுப்போக்கும் நிற்கவில்லை. ஏழாவது மாதத்திலிருந்தே இட்லி,பருப்பு சாதம் மற்றும் பவுடர் பாலும் பாக்கெட் பாலும் கொடுத்து வந்தேன். ஆனால் அன்று பவுடர் பாலோ, பாக்கெட் பாலோ எது கொடுத்தாலும் பால் திரிந்த மாதிரி 'motion' போக ஆரம்பித்துவிட்டது.
              டெல்லியில் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள கிளினிக்குகளில் எல்லாம் மாலை 6 to 9 மட்டுமே டாக்டர்களின் பார்க்கும் நேரம். இதனால் நடுஇரவில் குழந்தை அழுதவுடன் All India Institute of Medical Sciences (AIIMS) -க்குத் தூக்கிச் சென்றோம். அங்கு அவசரப் பிரிவில் உள்ள டாக்டர் பரிசோதித்துவிட்டு, குழந்தைக்கு 'Viral Diarrhoea ' என்று கூறினார். "இது எந்த மருந்து கொடுத்தாலும் உடனே நிற்காது; ஐந்து நாட்கள் வரை இருக்கும்; அதன்பின்தான் குணமாகும்" என்றார். குழந்தைக்குப் பவுடர் பாலோ, பாகெட் பாலோ எதுவும் கொடுக்கக் கூடாது என்று கூறிவிட்டார். இட்லி, சாதம் என்று எதுவும் குழந்தை சாப்பிட மறுத்துவிட்டதால் என்ன கொடுப்பதென்றே தெரியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டேன். ஊருக்கு ஃபோன் செய்து கேட்டால் 'ஆரோ ரூட் மாவு' அல்லது ஜவ்வரிசியை வறுத்துப் பொடி பண்ணிக் கஞ்சியாகக் கொடுக்கச் சொன்னார்கள். இங்கு ஆரோ ரூட் மாவு கிடைக்காததால் ஜவ்வரிசிக் கஞ்சி, சத்துமாவுக் கஞ்சி இவற்றைத்தான் மாற்றி, மாற்றிக் கொடுத்து வந்தேன். Dehydrate ஆகி விடாமல் இருக்க டாக்டர் 'Pedialite ' கொடுக்கச் சொன்னார். இரவெல்லாம் வயிற்றுவலியால் தூங்காமல் துடித்துப் பின், நிறைய antibiotics , தினமும் ஒரு ஊசி என நான்கு injection போட்ட பிறகு ஐந்து நாட்கள் கழித்துதான் குணமாகியது. ஒரு வாரமாக பாவம் குழந்தை படாதபாடு பட்டுவிட்டது. 
               
                  பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாட்டிற்கு சொந்த ஊருக்குப் போன போது, அங்கும் இதே போல ஒருநாள், பால் திரிந்தது போல வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அங்குள்ள டாக்டரிடம் தூக்கிச்சென்றோம். அவர் எந்த மருந்தும் கொடுக்கவில்லை. முதலில் Nestle - யின் Nestum -stage 1 (Rice flavour ) சிறிது உப்பு போட்டுக் குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னார். பாலோ, மற்ற எந்த உணவோ கொடுக்க முடியாத நிலையில், Nestum -மையே பாலுக்குப் பதிலாகக் கொஞ்சம் தண்ணியாக கஞ்சிபோல கொடுக்கச் சொன்னார். என்ன ஆச்சர்யம்! அவ்வாறு இரண்டு முறைக் கொடுத்ததும் ஒரே நாளில் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. இதேபோல அப்பொழுதும் கொடுத்திருந்தால் ஒருவேளை ஒரே நாளில் நின்றிருக்குமோ, என்னவோ? அங்கு இதுபோல் எந்த டாக்டரும் சொல்லவில்லை. குழந்தையும் பாவம் ஒருவாரம் கஷ்டப்பட்டிருக்காது; நாங்களும் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம். இதை நான் அனுபவத்தில் கண்டதால், கைகுழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எழுதுகிறேன்.                 

2 comments:

DrPKandaswamyPhD சொன்னது…

நல்ல கருத்து. ஆனால் யாரும் தாங்களாகவே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குக்கு கை வைத்தியம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். டாக்டரே பக்கத்தில் எங்கும் கிடைக்கவில்லையென்றால் முதலில் கைவைத்தியம் செய்யலாம். ஆனால் எவ்வளவு சீக்கிரம் டாக்டரிடம் கொண்டு போகமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் போவது நல்லது.

ஜிஜி சொன்னது…

தங்களது கருத்துக்கு மிக்க நன்றி
திரு.Dr.P.Kandaswamy PhD அவர்களே. கைவைத்தியம் என்று சொல்லவில்லை;
கைவைத்தியம், அதுவும் குழந்தைகளுக்கு என்பது மிகவும் ஆபத்தான ஒன்றுதான்.
அந்த நேரத்தில் குழந்தைக்கு உணவு எதுவும் கொடுக்க முடியாத நிலையில் உணவாக Nestum
கொடுக்கலாம்.இது குழந்தைகளுக்கான உணவுதான்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails