வேலைக்குச் செல்லும் அம்மாக்களின் ஏக்கம்...

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

            நான் காலேஜ் முடிச்சிட்டு வேலை தேடிக்கிட்டு இருந்தப்போ ,ஒருநாள் என் ஃப்ரண்ட் ஒருத்தியை பார்த்துப் பேசிட்டுருந்தேன். அவளுக்கு வேலை கிடைச்சு, கல்யாணம் ஆகியிருந்துச்சு. எனக்கு இன்னும் வேலை கிடைக்கலைனு அவகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தப்போ, உடனே அவ , " வேலை கிடைச்சா நல்லது; கிடைக்காட்டி ரொம்ப நல்லது " னு சொன்னா. அவளுக்கு வேலை கிடைச்சிட்டதால இப்படி அவ பேசுறானு நான் அப்போ நெனச்சேன். திரும்ப சமீபத்துல அவளப் பார்த்தப்போ,அவ என்னைப் பத்திக் கேட்டா. "நான் இப்போ இல்லத்தரசியா, ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கேன்"னு சொன்னவுடனே, "நீ ரொம்ப குடுத்து வச்சவடி" அப்படினு
சொன்னா.


             "உனக்கென்ன குறைச்சல்? நல்ல வேலைல இருக்க; அன்பான ஹஸ்பண்ட், குழந்தை. அப்புறம் என்ன?னு கேட்டேன். அதுக்கு அவ, "மெட்டர்னிட்டி லீவு முடிஞ்சி,  3 மாசக்குழந்தைய விட்டுட்டு, ஆஃபீசுக்கு ஒடினேன். குழந்தை என்ன செஞ்சுச்சோனு ஒரே கஷ்டமா இருக்கும். அப்போலாம் வாழ்க்கையே வெறுத்து போறமாதிரி இருக்கும். ஆறு மாசத்தில் குழந்தைக்கு இட்லி பிசைஞ்சு ஊட்டினதில்ல. முதன்முதலா குழந்தை நடந்தப்போ அத பார்த்து ரசிச்சதில்ல; முதன்முதலா 'அம்மா' னு சொன்னதக் கேட்கல. காலையில அரக்கப் பரக்க சமைச்சு வச்சிட்டுப் போறதை ஆயாம்மா, டிவி சீரியல் பாத்துகிட்டே ஊட்டிவிட, அதை சாப்பிட்டுட்டு, நான் வீடு திரும்பும்போது குழந்தை ஒடி வந்து என் காலை, ஏக்கத்தோட கட்டிப்பிடிச்சுக்குவா. சிலசமயம் என்ன விட, அதிக நேரம் இருக்குற, ஆயாம்மாகிட்ட ஒட்டிக்கிட்டு, எங்கிட்ட வரமாட்டா.


             கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கவும், 'அகில் அம்மா மட்டும் அவனோடயே இருக்காங்க; நீ மட்டும் என்னைய விட்டுட்டு ஆஃபீசுக்கு போற" னு என்னையே வெறுக்க ஆரம்பிச்சுட்டா. என் கணவருக்கு ஷுகர் ஆரம்ப நிலையில இருக்குறது தெரிஞ்சதும், காலையில அரைமணி நேரம் முன்னாடியே, எழுந்திருச்சு அவரோட வாக்கிங் போகனும். காலைலயும், சாயந்தரமும் ஓட்ஸ் கஞ்சி வச்சுக் குடுக்கனும். வெந்தயத்தை ஊற வச்சு மறுநாள் காலைல குடிக்கக் குடுக்கனும்' அப்படினு எடுத்த தீர்மானங்கள் ஒன்னைக் கூட செய்ய முடியாமப் போச்சு. இந்த லட்சணத்தில எனக்கு நிரந்தரமாவே வலிச்சிட்டு இருக்குற இடுப்புக்கும், காலுக்கும் ஒத்தடம் எப்படி குடுக்க நேரம் இருக்கும்?

               அதிர்ஷ்டவசமா கிடைச்ச ஒருநாள் லீவுல, சித்தி மகள்
கல்யாணத்துக்குத் தெரியாத்தனமா, போயிட்டேன். அது நடந்து ஒரு வருஷம் ஆகியும், "ஒன் வீட்டு விசேஷம்னா மட்டும் லீவு கெடைக்குது"னு புகுந்த வீட்டுல இன்னும் சொல்லிக்காட்டிக்கிட்டு இருக்காங்க. அதுக்குப் பிறகு நடந்து முடிஞ்ச நூறு எங்க வீட்டு விசேஷங்களுக்கு லீவு கிடைக்காம நான் போகாததை இவங்க ' ஞாபகமா ' மறந்துடறாங்க. எந்த விசேஷத்துக்கும் போகமுடியாம, "என்னவோ சீமையில இல்லாத வேலையப் பார்க்குறாளாம்." னு சாபத்த வேற வாங்கிக்கட்டிக்க வேண்டிருக்கு. இதனால ஆசை இருந்தும் ஒரு குழந்தையே போதும்னு முடிவு பண்ணியாச்சு.



           என்னோட அறுந்து போன கொலுசைக்கடையில் போட்டுட்டு, புதுக்கொலுசு வாங்கனும். அடுத்த மாசம் பாத்துக்கலாம்னு ஆறு மாசத்துக்கு முன்னால முடிவுபண்ணேன். ஆனா, நாத்தனார் பிறந்த நாள், மாமனாரோட உடைஞ்ச பல் செட், ஸ்கூல் டெர்ம்  ஃபீஸ் னு அடுத்தடுத்த மாசம் வரிசையா செலவு வந்துகிட்டுதான் இருக்கு. சம்பளம் அதிகமா வாங்கினாலும் நெலம இப்படித்தான் இருக்கு. வெளிநாட்டில இருந்து வந்திருக்குற, தம்பிய ஒருநாள் பாத்திட்டு வரக்கூட நேரம் இருக்காது. அப்படியே ஏதாச்சும் ஒரு ஞாயித்துக்கிழம போலாம்னு நினைக்கும்போது எங்க வீட்டுக்கு யாராச்சும் கெஸ்ட் வந்திருவாங்க. அஞ்சு வயசுவரை தூக்கி சுமந்து, கதை சொல்லி வளர்த்த தாத்தா இறந்துட்டார்னு நியூஸ் வந்தும்.உடனே போக முடியாமல், அவர் முகத்தையே பார்க்கமுடியாமல் போயிடுச்சு. இவ்வளவு ஏன்? இன்னிக்கு உன்ன பார்த்திருக்கேன்.இனிமே எப்போ திரும்ப பார்க்கப்போறேன்னு தெரியல இப்போ சொல்லு நான் குடுத்து வச்சவளா, நீயா" அப்படினு அவளோட மனக்குமுறலை கொட்டித் தீர்த்துட்டா.
அப்புறமாத்தான் எனக்குப் புரிஞ்சது "ஆமால்ல? அவ சொன்ன மாதிரியே உண்மையிலயே நம்ம குடுத்துவச்சவதான்"னு.....

                                ================================================
பி.கு.
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html
வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு, திரு. ஜெய்லானி அவர்களுக்கு மிக்க நன்றி...

13 comments:

ஜெய்லானி சொன்னது…

///உடனே அவ , " வேலை கிடைச்சா நல்லது; கிடைக்காட்டி ரொம்ப நல்லது " னு சொன்னா///

அதுக்கு சொன்ன காரணம் 100க்கு 100 உண்மைதான்

அன்பரசன் சொன்னது…

உங்க தோழி மட்டும் இல்ல இன்னும் எத்தனையோ வேலை பார்க்கும் தோழிகள் இந்த மாதிரி மத்தளமாய் அடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

உண்மைதான். இப்படி சோகங்களைச் சுமந்து வேலை பார்ப்பதைவிட, கிடைப்பதைக் கொண்டு சிக்கனமாகச் செலவு செய்து வாழ்வதே நல்லது..

அப்புறம், இது ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்குதே? :-)))

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி ஜெய்லானி...

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி அன்பரசன்

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

கேள்விப்பட்டிருக்கிறேன்.... இப்படியும் சிலரிடம்
கதை இருக்கிற்து..
சிலரிடம் வேலைக்கு போகாமல் விட்டுவிட்டு இப்படி
இருக்கேனே என்றும் கதை.. ;) இக்கரைக்கு
அக்கரை பச்சை?

( உங்க பதிவு என் கணினியில் டவுன்லோட் ஆக சிரமமாக இருக்கிறது.. சில சமயம் பதிவை படித்தால் கூட பின்னூட்டமிட மிகச்சிரமமாக இருக்கிறது அதிக விட்ஜெட்டுக்களும் டெம்ப்ளேட் மாடல்கள்ளும் இதுஒரு தொல்லை..)

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி ஹுஸைனம்மா .அப்படியா? எதுல படிச்சீங்கனு சொன்னா நல்லா இருக்கும்.ஆனா இது என் தோழிகளோட சோகக் கதைதான்.

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி முத்துலெட்சுமி.
டவுன்லோட் சிரமத்துக்கு மன்னிக்கவும்.

சந்தனமுல்லை சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க...புரிந்துக்கொள்ள முடிகிறது.

Pandian R சொன்னது…

ஏங்க. அவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு. வேலைய விட்டுடுங்க

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி fundoo.

Jaleela Kamal சொன்னது…

photo vil iruppathu yaaru ningkalaa?

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails