நாகர்கோவில் - I

புதன், நவம்பர் 17, 2010

               நாகர்கோவிலுக்கு போனபோது நாகர்கோவிலிலும்
அதைச் சுற்றியும் சில இடங்களுக்குச் சென்றோம்.

கிருஷ்ணன்கோவில்
              முதலில் நாங்கள் சென்ற இடம் கிருஷ்ணன்கோவில்.
இந்தக் கோவில் நாகர்கோவிலில், ஊருக்குள்ளேயே உள்ளது.
 நாகர்கோவிலில் நாகராஜா கோவில்தான் மிகவும் பிரசித்தி
பெற்ற கோவில். அதனால் இந்தக் கோவிலைப் பற்றி
பலபேருக்குத் தெரியவில்லை. இந்தக் கிருஷ்ணன்கோவிலில்
உள்ள மூலவர் பாலகிருஷ்ணர். குழந்தை வடிவிலான இவர்
தோற்றத்திலும் மிகச் சிறிய சிலையாக உள்ளார். இந்தச் சிலை
கேரளாவிலுள்ள குருவாயூரப்பனை ஒத்துள்ளது.

 மேலும் இந்தக் கோவிலும் குருவாயூர் கோவிலின் சிறிய
வடிவமாகும். குருவாயூர் கோவிலைப் போன்றே சிறிய
வடிவில் கட்டப்பட்டுள்ளது. கேரளா குருவாயூருக்கு செல்ல
முடியாதவர்கள், கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்புபவர்கள்,
இந்தக் கோவிலுக்கு வந்து குட்டிக் கிருஷ்ணனை தரிசிக்கலாம்.

குமாரகோவில் 
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் குமாரகோவில்.
இக்கோவில் 200 அடி உயரமான ஒரு மலையின் மேல்
கட்டப்பட்டுள்ளது.


               இந்தக் குமாரகோவில் கன்னியாகுமரியில் இருந்து
34 கிமீ தொலைவில் பத்மநாபபுரம் என்ற ஊரில் உள்ளது.
இங்குதான் முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால் இந்தமலை 'வேளிமலை' , 'மணமலை',
'கல்யாண மலை' என்றெல்லாம் கூறப்படுகிறது. முருகனும்
வள்ளியும் தான் இங்கு மூல விக்கிரகங்கள்.  வள்ளியை மணந்த
முருகன்ஆதலால் இங்குள்ள முருகனுக்கு 'மணவாள குமரன்'
என்று பெயர். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழாவிற்கு
இந்த  மணவாள குமரன், பத்மநாபபுர அரண்மனையிலுள்ள
சரஸ்வதிமற்றும் பகவதி அம்மனுடன் திருவனந்தபுரத்திற்கு
எடுத்துச் செல்லப்படுகிறார். மேலும் வருடாவருடம் மார்கழி
மாதம், நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சுசீந்திரம் கோவில்
திருவிழாவிற்கும் இந்த மணவாள முருகன் கொண்டு
செல்லப்படுகிறார். அங்கு திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

 
            இந்தக் குமாரகோவில்  முருகனும், நாகர்கோவிலைச்
சுற்றியுள்ள ஊர்களான, மருங்கூர் என்கிற ஊரிலுள்ள முருகனும்,
கோட்டார் என்கிற ஊரிலுள்ள பிள்ளையாரும் சேர்ந்து அந்த 10
நாட்கள் திருவிழாவுக்கு சுசீந்திரம் சிவன் கோவிலுக்கு கொண்டு
செல்லப்படுகிறார்கள்.  இந்த மூன்று சாமிகளும் சுசீந்திரம் செல்ல
3 நாட்கள் ஆகுமாம். திருவிழா நாட்களில், தினமும் மாலையில்,
இந்த 3 சாமிகள் மற்றும் சுசீந்திரத்திலுள்ள சிவனும் பார்வதியும்
சேர்த்து, ஐந்து சாமிகளும் ஊர் முழுவதும் சுற்றிவரும். எட்டாவது
நாள் திருவிழா அன்று மாலை பூஜை முடிந்து,  முருகரும்,
பிள்ளையாரும், சிவன் பார்வதியிடம் பிரியாவிடை பெற்று
அவரவர் ஊருக்குத் திரும்பிவிடுவராம். இந்தப் பிரியாவிடை
காட்சி மிகவும் அருமையாக இருக்குமாம்.மேலும் எல்லா
முருகன் கோவிலிலும்  கொண்டாடப்படுகின்ற தைப்பூசம்,
கந்தசஷ்டி, வைகாசி விசாகம் போன்றவையும் இங்கு
கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது
முருகன்-வள்ளி திருமணம். ஒவ்வொரு தமிழ்மாதக்
கடைசி வெள்ளிக்கிழமையும் இங்கு விசேஷமாக
உள்ளது. இங்கு பிரசாதமாக கஞ்சி கொடுக்கப்படுகிறது.

23 comments:

எல் கே சொன்னது…

அண்ணனும்,தம்பியும் தந்தை தாயை காண வருதல்,கஞ்சி பிரசாதம் புதியத் தகவல்கள். தொடருங்கள்

Unknown சொன்னது…

முதல் வருகைக்கும்,தங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி LK.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பகிர்வு சகோதரி.. படிக்கும் காலங்களில் பலமுறை சென்று வந்த இடம் குமாரகோவில்..
நினைவுகளை தூண்டுகிறது உங்கள் பதிவு..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கிருஷ்ணன் கோவிலுக்கும்,மருங்கூருக்கும் ஒருதடவைதான் போயிருக்கேன்.. மத்ததெல்லாம் அலுக்கிறவரை சுத்தியாச்சு.. ஆனாலும் அலுக்கலை :-))

சுசீந்திரத்தில் தேரோட்டத்துக்கப்புறம், அவரவர் இடங்களுக்கு பிள்ளைகள் பிரிஞ்சுபோறப்ப அப்பாவும்,அம்மாவும் தவிக்கிறதைப்பார்க்கணுமே.. அடடா!!! அவங்க இருக்கிற பல்லக்கை ஊஞ்சல் ஆட்டுறமாதிரி மூணுதடவை ஆட்டிட்டு, கோயிலுக்குள்ளாற கொண்டுட்டு ஓடியே ஓடிடுவாங்க :-)))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு சகோ. நிறைய புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

RVS சொன்னது…

ஓ.கே ரெண்டு கோவில் பார்த்தாச்சு.. அப்புறம் எங்கே? ;-)
பகிர்வு நன்று.

S Maharajan சொன்னது…

Teiva tharisanam

Nagarajara kovil patri
ennum yeluthi irukalam

ADHI VENKAT சொன்னது…

கோவில்களின் தகவல்களும் புகைப்படங்களும் அழகு தோழி. கஞ்சி புதிதாய் இருக்கு. அடுத்த பதிவுக்கு ஆவலாய் இருக்கிறேன்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பகிர்வு ஜிஜி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அடிக்கடி உங்க ஊரு ப்த்தி எழுதி ஆசைய கிளப்பறீங்க ..:)

விக்னேஷ்வரி சொன்னது…

வித்தியாசமான தகவல்கள். நல்லா தொகுத்திருக்கீங்க. என்ன ஒரே கோவிலா சுத்திட்டிருக்கீங்க. என்ன வேண்டுதல்? ;)

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு சகோதரி.

Unknown சொன்னது…

@வெறும்பய,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

@அமைதிச்சாரல்,
// சுசீந்திரத்தில் தேரோட்டத்துக்கப்புறம், அவரவர் இடங்களுக்கு பிள்ளைகள் பிரிஞ்சுபோறப்ப அப்பாவும்,அம்மாவும் தவிக்கிறதைப்பார்க்கணுமே.. அடடா!!! அவங்க இருக்கிற பல்லக்கை ஊஞ்சல் ஆட்டுறமாதிரி மூணுதடவை ஆட்டிட்டு, கோயிலுக்குள்ளாற கொண்டுட்டு ஓடியே ஓடிடுவாங்க //

இதை நானும் கேள்விப்பட்டேன்ங்க.ஆனால் பார்க்கும் வாய்ப்புதான் கிடைக்கலை.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்.
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க RVS,
தொடர்ந்து எழுதறேங்க.
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க மகாராஜன்,
போன வருஷம் போனது,இந்த முறை நாகராஜா கோவிலுக்குப் போகலைங்க. ஆதரவுக்கு மிக்க நன்றி.

Unknown சொன்னது…

வாங்க நேசமித்ரன்,
வருகைக்கும்,தங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி ,
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
உங்களுக்கும் எழுதணும்னு ஆசையா இருக்கா?
நீங்களும் எழுதுங்க.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க விக்னேஷ்வரி ,
வேண்டுதல்லாம் ஒண்ணும் இல்லைங்க. அந்தக் கோவில்களுக்கெல்லாம் போனதில்லைன்னு போனோம்.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

ரொம்ப நன்றி குமார்.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

நாகர்கோவிலில் இருந்து கொண்டு 3 நாளாக என்ன பதிவு போடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த எனக்கு உங்கள் பதிவு கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails