நாகர்கோவில் - III

சனி, நவம்பர் 27, 2010

தொட்டிப்பாலம் 




            திருவட்டாறுக்கு அடுத்ததாக, அதற்கு அருகில், 3கிமீ
தூரத்தில், மாத்தூரிலுள்ள தொட்டிப்பாலத்திற்கு சென்றோம்.
இந்தத் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிக நீளமான
மற்றும் உயரமான பாலமான இது பரழியாறுக்குக் குறுக்கே
உள்ளது. பாலம் என்பது பெரும்பாலும் ஆற்றின் அல்லது
ஏதாவது ஒரு நீர்நிலையின் இருகரைகளை இணைப்பதாக
இருக்கும்;  பாலத்துக்கு மேலே நிலவழிப்போக்குவரத்தும்,
பாலத்துக்கு அடியில் நீரோட்டமும் இருக்கும். ஆனால் இந்தத்
தொட்டிப்பாலத்தில், ஒரு கால்வாயாக நீர் செல்கிறது. இது ஒரு
பெரிய அதிசயமாக எனக்குத் தெரிந்தது.  இது 115 அடி உயரமும்,
ஒரு கிமீ தூரமுமாக இரண்டு மலைகளுக்கு இடையில்
கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை மொத்தம் 28 பெரிய தூண்கள்
தாங்கியுள்ளன. 1966ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர்
திரு. காமராசர் அவர்களால் இந்தத் தொட்டிப்பாலம் கட்டப்பட்டு
இருக்கிறது. ஒருவர் பின் ஒருவராகத்தான் இந்தப் பாலத்தில்
போக முடிகிறது. அதிக எடையுள்ள மூட்டையைத் தூக்கிக்
கொண்டு, ஒருவர் மிக வேகமாக இதில் நடந்து சாதனை
செய்ததாக கூறப்படுகிறது. தொட்டிப்பாலத்திற்கு கீழிருந்து மேல்
வரை படிக்கட்டுகள் போடப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள்
விளையாட ஒரு பூங்காவும் இருக்கிறது. இது சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.

திற்பரப்பு




             மாத்தூருக்கு அடுத்ததாக, சென்ற இடம் திற்பரப்பு
நீர்வீழ்ச்சி. இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர்
விழுந்து கொண்டே இருக்குமாம். நாங்கள் சென்ற சமயம்
மழை பெய்து கொண்டிருந்ததால், அருவியில் நிறைய
தண்ணீர் வரத்து இருந்தது. குளிக்கும்போது இருந்ததைவிட,
குளித்து முடித்து வெளியேறும் போது  மிக அதிகமாக
தண்ணீர் விழுந்தது. கோதையாறு என்ற ஆறுதான் திற்பரப்பு
அருவியாக விழுகிறது. அருவியின் மேலே இந்த ஆறு
சமதளத்தில் ஓடிவருகிறது. அங்கு ஒரு யானையைக்
குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கைப் பார்ப்பது
நன்றாக இருந்தது. இங்கு ஒரு சிவாலயம் உள்ளது. மேலும் ஒரு
சிறுவர் பூங்காவும் உள்ளது. இதுவும் ஒரு சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.

18 comments:

எல் கே சொன்னது…

ஜிஜி , படங்கள் அருமை. தொட்டிப் பாலம் முதல் முறை கேள்விப் படுகிறேன்

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

படங்களும் தகவலும் அருமை. பகிர்வுக்கு நன்றி !

Asiya Omar சொன்னது…

அருமையான இடம்,சூப்பர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இதைப்போன்ற நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளதே! தொடர்ந்து அசத்துங்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

படங்களும் பகிர்வும் நன்று.

திற்பரப்புக்கு மூன்று நான்கு தடவைகள் போயிருக்கிறேன். அருமையான இடம்.

தொட்டிப் பாலத்தின் மேல் நடந்த சென்ற கிலி அனுபவத்தை தம்பி சொல்லக் கேட்டிருக்கிறேன்:)!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, ஆஹா அசத்தல் டூர். தொட்டிப்பாலம் கிலியுடன் நடந்து செல்ல ஆசையாய் இருக்கிறது

Chitra சொன்னது…

சிறு வயதில், அடிக்கடி சென்ற இடங்கள் தான் - தொட்டி பாலமும் திற்பரப்பு அருவியும். மலரும் நினைவுகளை தந்தமைக்கு நன்றிங்க.

RVS சொன்னது…

நாகர்கோயில் நான் இன்னமும் போகாத ஏரியா ;-) தகவல்களுக்கு நன்றி ஜிஜி ;-)

ADHI VENKAT சொன்னது…

தொட்டிப் பாலமும் ,திற்பரப்பும் மிகவும் அழகாக உள்ளது. பார்க்கும் ஆவலில் உள்ளேன்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல நினைவுகள்....

ஜோதிஜி சொன்னது…

பார்க்க வேண்டிய ஊரில் இதுவும் பட்டியலில் உண்டு. இந்தப் பக்கம் செல்ல வாய்ப்பே அமையவில்லை.

Arun Prasath சொன்னது…

தொட்டிப் பாலம் முதல் முறை கேள்விப் படுகிறேன்......

dsfs சொன்னது…

இரண்டு வருடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக
இந்த இரண்டு இடங்களுக்கும் மேலும் முட்டம் கடற்பகுதிக்கும் சென்றோம். உங்கள் பதிவு ஆட்டம் போட்ட அந்நாட்களை நினைவில் கொண்டு வந்தது.
நன்றி.

Kousalya Raj சொன்னது…

அந்த பாலத்தில் பாதி தூரம் மேல் நடந்ததும் கொஞ்ச பயம் வந்துவிட்டது.....பாதியில் திரும்பி விட்டேன்....ஆனால் மறுபடி அடுத்த மலையை எப்படியும் அடைந்து விடனும் என்று சபதம் போட்டு விட்டு வந்திருக்கிறேன்...ம்...ம்...பாப்போம்...

மலரும் நினைவுகள் தந்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஹைய்யோ.. என் ஃபேவரிட் பிக்னிக் ஸ்பாட். தொட்டிப்பாலத்துக்கு நாங்க போயிருந்தப்ப தொட்டியில தண்ணி இல்ல.ஆனா, பாலத்துக்க கடைசிவரை நடந்துபோயி பாத்துட்டு வந்தோம். எப்ப ஊருக்கு போனாலும், திற்பரப்பும், தொட்டிப்பாலமும் பாக்காம வர்றதில்லை.

Unknown சொன்னது…

வாங்க LK,
கனாக்காதலன்,
ஆசியா
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி,
வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி.
ஆமாங்க.தொட்டிப்பாலத்தில் நடக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.ஆனாலும் தைரியமாக நடந்தேன்.

Unknown சொன்னது…

வாங்க RVS,
சித்ரா,
கோவை2தில்லி,
வெறும்பய,
ஜோதிஜி,
அருண் பிரசாத்,
பொன்மலர்,
கௌசல்யா,
அமைதிச்சாரல்
வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க

Unknown சொன்னது…

இதெல்லாம் நாங்க வழக்கமா போகிற இடம்தான் என்றாலும் உங்கள் பார்வையில் நன்றாகத்தான் இருக்கிறது.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails